சோதனைகள் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்வு நிலை திரும்பப் பிரார்த்திப்போம்

ஏப் 06, 2020

06.04.2020

12.08.1441

 

அன்புடையீர்,

 

சோதனைகள் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்வு நிலை திரும்பப் பிரார்த்திப்போம்

கொவிட்- 19 வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சோதனைகளை நாம் அறிவோம். குறித்த வைரஸினால் இலட்சக்கணக்கானோர் பீடிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் மரணித்தும் வருகின்றனர். முழு உலகமும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. சாதாரண வாழ்க்கை நிலை கூட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவலையோடும் பீதியோடும் மன உளைச்சளோடும் மிகவும் பரிதாபகரமான நிலையில் நாட்களைக் கழித்து வருகின்றனர்.  இந்நிலை குறிப்பாக நமது நாட்டிலிருந்தும் பொதுவாக முழு உலகிலிருந்தும் நீங்க எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவிடம் மன்றாடிப் பிரார்த்திப்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய தார்மிகக் கடமையாகும். இந்நோய் பரவாரம்பித்ததிலிருந்து தௌபா, இஸ்திஃபாரில் ஈடுபட்டு, சுன்னத்தான நோன்புகள் நோற்று, ஸதகா செய்து, துஆவிலும் ஈடுபடுமாறு ஏலவே பல முறை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மக்களிடம் வேண்டிக் கொண்டதை நீங்கள் அறிவீர்கள்.

துஆவின் மூலம் தேவைகள் நிறைவேறுகின்றன் நன்மைகள் கிடைக்கின்றன. அது அல்லாஹ்வை நெருங்கவும் காரணமாகின்றது. அடியார்கள் தன்னிடம் பிரார்த்திப்பதை அல்லாஹ் விரும்புகின்றான்.

“நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் உங்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிப்பேன்.”  (40: 60)

பலரும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்ற ஓர் இக்கட்டான நிலையில், ஒவ்வொருவரும் தன்னாலான உதவி ஒத்தாசைகளைச் செய்வதும் அதிகம் சுன்னத்தான நோன்புகளை நோற்பதும் இறை பொருத்தத்தைப் பெற்றுத் தரும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகம் சுன்னத்தான நோன்புகளை நோற்ற ஷஃபான் மாதத்தில் நாம் இருக்கின்றோம். எனவே, இவ்விடயத்திலும் கவனம் செலுத்துவதோடு குறிப்பாக பிறை 13,14,15 (ஏப்ரல் 07,08,09) ஆகிய அய்யாமுல் பீழ் தினங்களில் முடியுமானோர் நோன்பு நோற்றுப் பிராத்திக்குமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.

ஆண்கள், பெண்கள், வாலிபர்கள், வயோதிபர்கள் அனைவரும் தத்தமது வீடுகளில் இருந்தவாறு நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் மன்றாடிப் பிரார்த்திக்கும் வழமையை உருவாக்கிக் கொள்வதோடு; காலை, மாலை துஆக்களையும் தவறாது ஓதி வருமாறு ஜம்இய்யா வழிகாட்டுகின்றது.

நாட்டில் சோதனைகள் நீங்கி அபிவிருத்தியும் சுபிட்சமும் ஏற்பட அனைத்து மதஸ்தலங்களும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். எனவே, ஒவ்வொரு மஸ்ஜிதிலும் மேலே குறிப்பிட்ட அய்யாமுல் பீழ் மூன்று நாட்களிலும் மஃரிபுடைய அதானுக்குப் பிறகு ஒலிபெருக்கியில் துஆ செய்யுமாறும் அனைத்து முஸ்லிம்களும் தத்தமது வீடுகளிலிருந்த வண்ணம் ஆமீன் கூறி பிரார்த்தனைக்கு பதிலளிக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது. இதற்காக பின்வரும் மாதிரி துஆக்களைப் பயன்படுத்தலாம். இந்த துஆக்களை ஓதி தனிப்பட்ட முறையிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டிக் கொள்கிறோம்;.  

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்து கெடுதிகளிலிருந்தும் நம்மையும் நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக! நிலைமைகளைச் சீராக்குவானாக!

 

அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித்

செயலாளர்- பிரசாரக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

  1. لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (سورة الأنبياء)

உன்னைத் தவிர வணக்கத்துக்குரிய நாயன் வேறுயாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.

  1. لا إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ العَرْشِ العَظِيمِ، لا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ العَرْشِ الكَرِيمِ. (البخاري: 6346/ مسلم: 2730).

யாவற்றையும் விட சக்தியுடையவனான, நுட்பமானவனான வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. மகத்தான அர்ஷ{டைய இரட்சகனான அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறுயாருமில்லை. சங்கையான அர்ஷ{டைய இரட்சகன், வானம் பூமியுடைய இரட்சகனான அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறுயாருமில்லை.

  1. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجْزِ وَالكَسَلِ، وَالبُخْلِ، وَالجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ.

(البخاري: 6369)

யா அல்லாஹ் அனைத்து விதமான கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பேரி தனத்திலிருந்தும்,  கோழைத்தனத்திலிருந்தும், கருமித்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும் மற்றும் மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றோம்.

  1. اللَّهُمَّ رَحْمَتَكَ نرْجُو، فَلَا تَكِلْنِا إِلَى أنفسنا طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لنا شَأْننا كُلَّها، لَا إِلَهَ إِلَّا أَنْتَ . (حديث حسن) (سنن أبي داود:4246).

யா அல்லாஹ்! உனது ரஹ்மத்தை ஆதரவு வைக்கின்றோம். ஒரு நொடிப் பொழுது கூட எம்மை எமக்குப் பொறுப்புச் சாட்டி விடாதே. எமது காரியங்கள் அனைத்தையும் சீராக்கித்தருவாயாக, வணக்கத்துக்குரிய நாயன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.

  1. اللَّهُ، اللَّهُ ربنا، لَا نشْرِكُ بِهِ شَيْئًا (حديث حسن) (سنن ابن ماجه:3132)

எமது இரட்சகன் அல்லாஹ், அல்லாஹ். அவனுக்கு நாம்; எந்தவொன்றையும் இணைவைக்க மாட்டோம்.

  1. اللَّهُمَّ إنا نسْأَلُكَ العافِيَـةَ فـي الدُّنيا والآخِرَةِ، اللَّهُمَّ إنا نسْأَلُكَ العَفْوَ والعافِيَـةَ فـي دِيننا ودُنْـيانا وأَهْلِنا ومالِنا، اللَّهُمَّ اسْتُـرْ عَوْراتِنا، وآمِنْ رَوْعاتِنا، اللَّهُمَّ احْفَظْنا مِنْ بَـيْنِ أيَدَينا، ومِنْ خَلْفِنا، وعَنْ يَمِيـنِـنا، وعَنْ شِمالِنا، ومِنْ فَوْقِنا، ونعُوذُ بِعَظَمَـتِكَ أَنْ نغْتالَ مِنْ تَحْتِـنا. (سنن أبي داود  -5073)

யா அல்லாஹ்! இம்மையிலும் மறுமையுடைய ஆரோக்கியத்தை உன்னிடத்திலே நாம் கேற்கின்றோம். யாஅல்லாஹ்! எமது மார்க்கத்திலும், எமது உலக வாழ்கையிலும், எமது சொத்திலும் மற்றும் எமது குடும்பத்திலும் ஆரோக்கியத்தையும் மன்னிப்பையும் தந்தருள்வாயாக. யா அல்லாஹ்! எமது குறைகளை மறைத்திடுவாயாக. இன்னும், யா அல்லாஹ்! எமக்கு முன்னும், பின்னும், வலப்புறத்திலும், இடப்புறத்திலும், மேல்புறத்திலும் உன்னுடைய பாதுகாப்பைத் தந்தருள்வாயாக. மேலும், திடீர் மரனம் ஏற்படுவதை விட்டும் உனது சக்தியைக் கொண்டு பாதுகாத்திடுவாயாக.

  1. اللَّهُمَّ إنا نسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالسَّلامَةَ مِنْ كُلِّ إِثْمٍ نسْأَلُكَ أَلا تَدَعَ لنا ذَنْبًا إِلا غَفَرْتَهُ وَلا هَمًّا إِلا فَرَّجْتَهُ وَلا حَاجَةً هِيَ لكَ رِضًا إِلا قَضَيْتَهَا. (الترمذي: 479)

யா அல்லாஹ்! உனது ரஹ்மத்தை தேடித்தரக்கூடிய கூடிய விடயங்களையும், உனது மன்னிப்பை கட்டாயப்படுத்தக்கூடிய விடயங்களையும் கேட்கின்றோம். மேலும், எல்லா நலவுகளையும் பெற்றுக் கொள்வதைக் கேட்கின்றோம். மேலும், ஒவ்வொரு பாவத்திலிருந்தும் ஈடேற்றம் அடைவதைக் கேட்கின்றோம். யா அல்லாஹ் எமது எந்த ஒரு பாவத்தையும் மன்னிக்காமல் விட்டுவிடாதே. மேலும், எந்தக் கவலையையும் நீக்காமல் இருந்துவிடாதே. மேலும், உனது பொருத்தத்திற்கு உட்பட்ட எந்த தேவைகளையும் பூர்த்தி செய்யாமல் விட்டுவிடாதே.

  1. اللَّهُمَّ إنا نَعوذ بك من جَهْدِ البلاءِ، ودَرَكِ الشَّقاءِ، وَسُوءِ القضاءِ، وشَماتَةِ الأَعدَاء(البخاري:6347)

 யா அல்லாஹ்! சோதனைகளிலிருந்தும், அழிவுகளிலிருந்தும், மோசமான முடிவுகளிலிருந்தும், இன்னும் பகைவர்கள் எம்மைப் பார்த்து சந்தோசப்படுவதிலிருந்தும் நாம் உன்னிடத்தில் பாதுகாப்புத் தேடுகின்றோம்.

  1. اللَّهُمَّ إنا نعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ (رواه مسلم)

யா அல்லாஹ்! நீ தந்த அருட்கொடை நீங்குவதை விட்டும், நீ அருளிய ஆரோக்கியம் மாற்றப்படுவதை விட்டும், திடீர் சோதனையை விட்டும், மற்றும் உன்னை கோபம் உண்டாக்கக்கூடிய அனைத்து காரியங்களை விட்டும் பாதுகாத்தருள்வாயாக.

  1. اللَّهُمَّ إِنّا نعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ (سنن أبي داود)

யா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தோடுகிறேன்.

  1. بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (الترمذي)

அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். அவனுடைய பெயரைக் கூறுவதுடன் இந்தப் பூமியிலும் வானத்திலும் உள்ள எப்பொருளும் தீங்கிழைக்க முடியாது. அவன் எல்லாவற்றையும் கேட்கக்கூடியவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.