ஆலிம்கள் விவகாரக் குழு
இக்குழு சமூகத்திற்குச் சேவையாற்றி வரும் மார்க்க அறிஞர்களின் நலன்கள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்துகின்றது. ஆலிம்களுக்கு பின்வரும் சேவைகளை வழங்குவதை இக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது:
- சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து மத்ரஸா கல்வி முறையை தரப்படுத்தல்.
- ஆலிம்களின் ஆன்மீக, கல்வி மற்றும் திறன் அபிவிருத்திக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குதல்.
- முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தகுதியான உலமாக்களை அடையாளம் கண்டு அவர்களை நிபுணத்துவத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி அவர்களை பயன்படுத்தல்
- இஸ்லாமிய உயர்கல்வியை தொடர்வதற்கு உதவி செய்தல்.
- ஆலிம்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்
- தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பயிற்சிகளுடன் ஆலிம்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல்.
- மூத்த ஆலிம்களின் அர்ப்பணிப்புக்கள் மற்றும் சேவைகளை அடையாளம் கண்டு அவர்களைக் கௌரவித்தல்.