தஃவா மற்றும் தர்பிய்யா

இக்குழு மார்க்கத்தின் பெயரால் ஊடுறுவும் பிழையான கொள்கைகள் மற்றும் அமைப்புக்கள் விடயத்தில் மக்களுக்கு வழிகாட்டுவதில் கவனம் செலுத்துகின்றது.

மஸ்ஜித் நிர்வாகங்களின் வேண்டுகோளுக்கிணங்க இமாம் மற்றும் முஅத்தின்களுக்கான பயிற்சிநெறிகளை நடாத்துதல், பிற சமூகங்களுடன் எவ்வாறு சகவாழ்வை மேற்கொள்ளுதல் ஆகிய வழிகாட்டல்களை இக்குழு வழங்குகின்றது.

ஹஜ், ரமழான், குடும்ப வாழ்க்கை, ஒற்றுமை மற்றும் சகவாழ்வை மேம்படுத்துதல் போன்ற தலைப்புக்களில் பொது மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இக்குழு ஜம்இய்யாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகள் மூலமாக நடாத்துகிறது. பெரும் பாவங்களிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டுதல்களும் இப்பிரிவுனூடாக மேற்கொள்ளப்படுகின்றது.தவறான இயக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்து நடத்துவதோடு, இது தொடர்பில் பொதுமக்களை வழிநடாத்த தேவைக்கேற்ப உலமாக்களுக்கு ஆலோசனை வழங்குகின்றது.