வறிய மாணவர்களது கல்விக்காக ஸக்காத்தை பயன்படுத்தலாமா?

FATWA # 003/ACJU/F/2006

Question

பள்ளிவாசல் மூலம் சேர்க்கப்படும் ஸக்காத் பணத்தை பிரதேச முஸ்லிம் பாடசாலை வறிய மாணவர்களது கல்விக்காக மாதாந்தம்; கொடுக்கலாமா? என்று ஃபத்வாக் கோரி 2005.09.18 தேதியிடப்பட்ட தங்கள் கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தங்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, அம்மாணவர்கள் ஸக்காத்தைப் பெறுவதற்கு தகுதி உடையவர்களான ஏழைகள், பரம ஏழைகள் போன்ற பிரிவினரில் அடங்குவார்களாயின் அவர்களுக்கு ஸக்காத் கொடுக்கலாம்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.