அரபு அல்லாத வேறு மொழியில் மாத்திரம் குத்பா நிகழ்த்துதல் சம்பந்தமான மார்க்க விளக்கம்
Question
Fatwa
ACJU/FTW/2022/30-473
2022.10.19 (1444.03.22)
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஜுமுஆவுடைய குத்பா மார்க்கக் கடமைகளில் ஒன்றாகும். அதை நிறைவேற்றுவதற்கு சில கடமைகளும் நிபந்தனைகளும் ஒழுக்கங்களும் உள்ளன. அவற்றில் ஒன்று ஜுமுஆவுடைய குத்பா கட்டாயமாக அரபு மொழியில் இருக்க வேண்டும்.
அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் ஜுமுஆவுடைய குத்பாவை ‘திக்ர்’ (அல்லாஹ்வை ஞாபகம் செய்தல்) என்று கூறுகிறான்.1 அல்-குர்ஆனில் திக்ர் என்று கூறப்பட்ட இந்த ஜுமுஆவுடைய குத்பா மற்றும் அதன் தொழுகையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களைப் போன்றே செய்தல் வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜுமுஆவுடைய குத்பாவை அரபு மொழியிலேயே நிகழ்த்தியுள்ளார்கள். மேலும், “நான் தொழுததைப் போன்றே நீங்கள் தொழுங்கள்” என்றும் கூறியுள்ளார்கள்.2
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொடர்ந்து நபித் தோழர்களின் காலத்திலும் குத்பா அரபு மொழியிலேயே அமைந்திருந்தது. நபித்தோழர்களின் நடைமுறைகள் இஸ்லாமிய சட்டக்கலையின் ஆதாரங்களில் ஒன்றாகும்.3
அவ்வாறே தாபிஈன்கள் மற்றும் தபஉத்-தாபஈன்களுடைய காலங்களிலும், அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத முஸ்லிம்கள் வாழ்ந்த நாடுகள் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் ஜுமுஆவுடைய குத்பா அரபு மொழியிலேயே நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. இது செயல் ரீதியான இஜ்மாவாகும்.
மேற்கண்ட அடிப்படைகளை வைத்து, மார்க்க சட்ட வல்லுனர்கள் ஜுமுஆவுடைய குத்பா அரபு மொழியில் நிகழ்த்தப்படுவதை வலியுறுத்தியுள்ளனர்.
ஜுமுஆவுடைய குத்பா அரபு மொழியில் இருப்பது கட்டாயம் என்பதும் அவ்வாறு அரபு மொழியில் குத்பா செய்பவர் இல்லாத பட்சத்தில் அந்த ஊர்மக்களுக்கு ஜுமுஆ கடமையாக மாட்டாது என்பதும் மாலிக்கி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களின் தீர்ப்பாகும்.4
ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் குத்பா அரபு மொழியில் இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக இரு குத்பாக்களிலும் அதன் கட்டாய கடமைகளான ‘ஹம்து, ஸலவாத்து, தக்வாவைக் கொண்டு வஸிய்யத் செய்தல், குர்ஆனில் இருந்து ஒரு வசனத்தை ஓதுதல், முஃமின்களுக்காக துஆ செய்தல்’ ஆகிய ஐந்தும் அரபு மொழியில் இருப்பது கட்டாயம் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.5
அரபு மொழியில் குத்பா நிகழ்த்துவதற்கு சக்தி பெற்றிருந்தும் அவ்வாறு செய்யாவிடில் அந்த குத்பா நிறைவேறமாட்டாது என்பது ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களின் தீர்ப்பாகும்.6
ஹனபீ மத்ஹபின் முக்கியமான இமாம்களான அபூ யூசுப் மற்றும் முஹம்மத் ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோர், ஜுமுஆவுடைய குத்பா அரபு மொழியில் நிகழ்த்தப்படுவது நிபந்தனையாகும் எனக் குறிப்பிடுகின்றனர்.7
அத்துடன் சமகால அங்கிகரிக்கப்பட்ட பின்வரும் சர்வதேச ஃபத்வா அமைப்புக்களும் அரபு மொழியில் குத்பாக்கள் நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் குறிப்பாக குத்பாவின் (அர்கான்) கடமைகள் அரபு மொழியில் இருக்க வேண்டும் என்றும் ஃபத்வாக்கள் வெளியிட்டுள்ளன.
1. தேவ்பந்த் ஃபத்வா நிலையம் (இந்தியா) – ஃபத்வா இல: 1523808
2. கராச்சி ஃபத்வா நிலையம் (பாகிஸ்தான்) – (144104200315)9
அந்தவகையில், எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஜுமுஆ குத்பாக்கள் பின்வரும் நான்கு முறைகளில் நடைபெற்று வருகின்றன.
முதலாவது முறையாவது:
கதீப் அவர்கள் மிம்பரில் ஏறி மக்களுக்கு விளங்கும் பாசையில் உபதேசம் ஒன்றை நிகழ்த்தியதன் பின்னர் முதலாவது குத்பாவை அரபு மொழியில் ஓதிவிட்டு உட்கார்ந்து கொள்வார். மீண்டும் எழுந்து இரண்டாவது குத்பாவையும் அரபு மொழியில் நிகழ்த்தி குத்பாவை நிறைவு செய்வார்.
இரண்டாவது முறையாவது:
கதீப் அவர்கள் மிம்பரில் ஏறி முதலாவது குத்பாவை அரபு மொழியில் ஓதிவிட்டு அதைத் தொடர்ந்து அதனுடன் தொடர்புபட்ட உபதேசம் ஒன்றை மக்களுக்கு விளங்கும் பாசையில் நிகழ்த்தியதன் பின்னர் உட்கார்ந்து கொள்வார். பிறகு மீண்டும் எழுந்து இரண்டாவது குத்பாவையும் அரபு மொழியில் நிகழ்த்தி குத்பாவை நிறைவு செய்வார்.
மூன்றாவது முறையாவது:
மக்களுக்கான உபதேசத்தை கதீப் அவர்கள் மிம்பருக்கு ஏறுவதற்கு முன்னர் செய்துவிட்டு பின்னர் மிம்பருக்கு ஏறி இரண்டு குத்பாக்களையும் அரபு மொழியில் நிகழ்த்துவார்.
இந்த மூன்று முறைகளிலும் ‘குத்பா அரபு மொழியில் இருத்தல் அவசியம் என்ற நிபந்தனை’ உள்ளடங்கியிருப்பதனால் அவை மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட முறைகளாகும்.
நான்காவது முறையாவது:
கதீப் அவர்கள் இரண்டு குத்பாக்களையும் அரபு மொழியில் இல்லாமல் வேறு மொழியில் நிகழ்த்துதல்.
இந்த நான்காவது முறை மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத முறையாகும். ஏனெனில், இவ்வாறு செய்வதன் மூலம் குத்பாவின் கடமைகள் நிறைவேறமாட்டாது.
ஆகவே, மேற்கூறப்பட்ட தெளிவுகளின் அடிப்படையில் அரபு மொழி இல்லாமல் தமிழ் மொழியில் அல்லது வேறு மொழிகளில் இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.ரீ. எம். ஸல்மான்
பதில் செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
[1] يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ (62:9)
[2] عن مالك بن الحويرث رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (صلوا كما رأيتموني أصلي)، رواه البخاري.
[3] لا شك أن للعمل المتوارث عند الفقهاء، لشأناً يختبر به صحة كثير من الأخبار. قال الشاه ولي الله المحدث الدهلوي في “إزالة الخفاء عن خلافة الخلفاء”:(إن اتفاق السلف، وتوارثهم أصل عظيم في الفقه. اهـ (ما تمس إليه الحاجة لمن يطالع سنن ابن ماجه للشيخ محمد عبد الرشيد النعماني)
(ويُشْتَرَطُ كَوْنُها) أيْ الخُطْبَةُ والمُرادُ بِها الجِنْسُ الشّامِلُ لِلْخُطْبَتَيْنِ كَما أنَّ المُرادَ بِهِما أرْكانُهُما (عَرَبِيَّةً) لِاتِّباعِ السَّلَفِ والخَلَفِ ولِأنَّها ذِكْرٌ مَفْرُوضٌ فاشْتُرِطَ فِيهِ ذَلِكَ كَتَكْبِيرَةِ الإحْرامِ، نهاية المحتاج إلى شرح المنهاج ٢/٣١٤ — الرملي، شمس الدين (ت ١٠٠٤) [كتاب صلاة الجماعة وأحكامها]←[باب صلاة الجمعة]←[شروط صحة الجمعة]←[أركان خطبة الجمعة]
[4] (قَوْلُهُ وَكَوْنُهَا عَرَبِيَّةً) أَيْ وَلَوْ كَانَ الْجَمَاعَةُ عَجَمًا لَا يَعْرِفُونَ الْعَرَبِيَّةَ فَلَوْ كَانَ لَيْسَ فِيهِمْ مَنْ يُحْسِنُ الْإِتْيَانَ بِالْخُطْبَةِ عَرَبِيَّةً لَمْ يَلْزَمْهُمْ جُمُعَةٌ اهـ عَدَوِيٌّ (حاشية الدسوقي على الشرح الكبير- كتاب الصلاة-فَصْلُ فِي بَيَانِ شُرُوطِ الْجُمُعَةِ وَسُنَنِهَا وَمَا يَتَعَلَّقُ بِذَلِكَ)
[5] يُشْتَرَطُ (كَوْنُ الْخُطْبَةِ بِالْعَرَبِيَّةِ) لِأَنَّهُ ذِكْرٌ مَفْرُوضٌ فَشُرِطَ فِيهِ الْعَرَبِيَّةُ كَالتَّشَهُّدِ وَتَكْبِيرَةِ الْإِحْرَامِ مَعَ قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ” صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي ” وَكَانَ يَخْطُبُ بِالْعَرَبِيَّةِ )المجموع شرح المهذب ٤/٥٢١ شرح النووي←الجزء الرابع←باب صلاة التطوع←باب صلاة الجمعة(
[6] لَا تَصِحُّ الْخُطْبَةُ بِغَيْرِ الْعَرَبِيَّةِ مَعَ الْقُدْرَةِ، عَلَى الصَّحِيحِ مِنْ الْمَذْهَبِ، وَقِيلَ: تَصِحُّ، وَتَصِحُّ مَعَ الْعَجْزِ قَوْلًا وَاحِدً (الإنصاف في معرفة الراجح من الخلاف للمرداوي ٢/٣٨٧ — المرداوي (ت ٨٨٥) كتاب الصلاة←باب صلاة الجمعة)
[7] فإنّه لا شكَّ في أنَّ الخطبةَ بغيرِ العربيَّةِ خلافُ السُّنَّةِ المتوارثةِ عن النَّبيِّ – صلى الله عليه وسلم – والصَّحابة – رضي الله عنهم – فيكون مكروهاً تحريماً، وكذا قراءةُ الأشعارِ الفارسيَّةِ الهنديَّة فيها، وقد فصَّلنا هذا المقامَ في رسالتنا ((آكامُ النَّفائسِ في أداءِ الأذكارِ بلسانِ الفارس)) (عمدة الرعاية على شرح الوقاية – كتاب الصلاة – باب صلاة الجمعة للشيخ عبد الحي اللكنوي)
[تَتِمَّةٌ] لَمْ يُقَيِّدْ الخُطْبَةَ بِكَوْنِها بِالعَرَبِيَّةِ اكْتِفاءً بِما قَدَّمَهُ فِي بابِ صِفَةِ الصَّلاةِ مِن أنَّها غَيْرُ شَرْطٍ ولَوْ مَعَ القُدْرَةِ عَلى العَرَبِيَّةِ عِنْدَهُ خِلافًا لَهُما حَيْثُ شَرَطاها إلّا عِنْدَ العَجْزِ كالخِلافِ فِي الشُّرُوعِ فِي الصَّلاة) الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) ٢/١٤٧ — ابن عابدين (ت ١٢٥٢) [كتاب الصلاة]←[باب باب الجمعة)
[8] https://darulifta-deoband.com/home/ur/jumuah-eid-prayers/37856
[10] إذ الخطبتان اسم للأركان، وما زاد عليها من الآداب والمواعظ. (إعانة الطالبين على حل ألفاظ فتح المعين ٢/٧٦ — البكري الدمياطي (ت ١٣١٠) باب الصلاة)
(قوله: وشرط فيهما) أي في الخطبتين. والمراد أركانهما، كما في التحفة، وعبارتها مع الأصل: ويشترط كونها – أي الأركان – دون ما عداها عربية الخ. اه.
وكتب سم ما نصه: قوله دون ما عداها: يفيد أن كون ما عدا الأركان من توابعها بغير العربية لا يكون مانعا من الموالاة. اه.
قال ع ش: ويفرق بينه وبين السكوت بأن في السكوت إعراضا عن الخطبة بالكلية، بخلاف غير العربي، فإن فيه وعظا في الجملة، فلا يخرج بذلك عن كونه في الخطبة. اه. (إعانة الطالبين على حل ألفاظ فتح المعين)

