2026 ஏப்ரல் 23ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விசேட நிறைவேற்றுக் குழுக் கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களது நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையக்கத்தில் நடைபெற்றது.
இதில், ஜம்இய்யா தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு சில முக்கிய தீர்மானங்களும் எட்டப்பட்டன.
இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –


