பருவ வயதை அடையாத ஒருவர் இமாமத் செய்வது (தொழுவிப்பது) தொடர்பான மார்க்க விளக்கம்

FATWA # ACJU/FTW/2019/26-377

Question

பருவ வயதை அடையாத ஒருவர் இமாமத் செய்வதன் மார்க்கச் சட்டம் என்ன?

Fatwa

ACJU/FTW/2019/11-362
2019.04.12 (1440.08.06)
 
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
 
இமாமத் செய்யக் கூடியவர், பருவ வயதை அடைந்தவராகவும், குர்ஆனை ஓதத் தெரிந்தவராகவும், தொழுகையின் சட்டதிட்டங்களை விளங்கியவராகவும் இருத்தல் வேண்டும் என்பதில் மார்க்க அறிஞர்களிடம் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை.
 
என்றாலும், குர்ஆனை ஓதத் தெரிந்த, தொழுகையின் சட்டதிட்டங்களை விளங்கிய பருவ வயதை அடையாத ஒருவர், இமாமத் செய்யும் விடயத்தில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது.
 
ஹனஃபி, மாலிகி மற்றும் ஹன்பலி மத்ஹப்களைச் சேர்ந்த அறிஞர்கள், சில ஆதாரங்களை அடிப்படையாக  வைத்து இமாமத் செய்யும் ஒருவர், பருவ வயதை அடைந்தவராக இருப்பது அவசியம் என்று கூறுகின்றனர்.
 
இத்தகைய அறிஞர்களில் சிலர் தராவீஹ் போன்ற சுன்னத்தான தொழுகைகளில் மாத்திரம் பருவ வயதை அடையாத, ஆனால் நல்லது எது, கெட்டது எது என்று பிரித்து அறியும் வயதை அடைந்தவர் (முமய்யிஸ்) இமாமத் செய்வது கூடும் என்று கூறுகின்றனர்.
 
ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் பருவ வயதை அடையாத ஒருவர், குர்ஆனை ஓதத் தெரிந்தவராகவும், தொழுகையின் சட்டதிட்டங்களை விளங்கியவராகவும் இருந்தால், சுன்னத்தான மற்றும் பர்ளான அனைத்துத் தொழுகைகளையும் இமாமத் செய்யலாம் என்று கூறுகின்றனர்.1
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில், அம்ர் இப்னு சலிமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆறு அல்லது ஏழு வயதில் இமாமத் செய்த விடயம் ஸஹீஹுல் புகாரி மற்றும் ஸஹீஹு முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. இந்த ஹதீஸை ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்கள் ஆதாரமாகக் கொள்கின்றனர்.2
 
பருவ வயதை அடையாதவர்கள் இமாமத் செய்ய அனுமதி உள்ளது என்று ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்கள் கூறினாலும், ஏனைய மத்ஹப்களுடைய அறிஞர்களிடம் இவ்விடயம் கூடாது என்ற கருத்து இருப்பதனால், பருவ வயதை அடைந்தவர்களையே இமாமத் செய்ய முற்படுத்துவது ஏற்றமானது என்றும், பருவ வயதை அடைந்த இமாமத்திற்கு தகுதியானவர்கள் இருக்கும் போது பருவ வயதை அடையாதவர்களை இமாமத் செய்ய முற்படுத்துவது மக்ரூஹ் என்றும் ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்கள் கூறுகின்றனர்.
 
மேலும், ஜமாஅத்துத் தொழுகையுடன் சம்பந்தப்படக்கூடிய மக்ரூஹான ஒன்றை செய்யும் போது ஜமாஅத் தொழுகை நிறைவேறினாலும், ஜமாஅத்தாகத் தொழுததற்கான நன்மை கிடைக்காது என்ற ஒரு பொதுவிதி உள்ளது என்று ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்களில் ஒருவரான இப்னு ஹஜர் அல்-ஹைத்தமீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.3
 
ஏனெனில், மேற்குறித்த ஹதீஸில், அம்ர் இப்னு சலிமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆறு அல்லது ஏழு வயதுடைய சிறுவனாக இருந்தாலும், அல்-குர்ஆனை ஓதக்கூடியவராக இருந்தமையால், பருவ வயதை அடைந்த வேறு எவரும் இமாமத் செய்வதற்குத் தகுதியானவர்களாக இல்லாத சமயத்திலேயே அவர்கள் இமாமத் செய்துள்ளர்கள்.
 
பருவ வயதை அடைந்தமைக்கான அடையாளங்களாக, ஸ்கலிதம் ஏற்படுதல் அல்லது சந்திர வருடக்கணக்கின் படி பதினைந்து வயது பூர்த்தியாகுதல் என்பவை ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் பொதுவானதாகும். மாதவிடாய் ஏற்படுதல் அல்லது கருத்தரித்தல் என்பவை பெண்களுக்கு குறிப்பாக உள்ளதாகும்.4 சூரிய வருடக் கணக்கின் படி 14 ½ வயதை அடைந்தவர்கள் சந்திர வருடக் கணக்கின்படி 15 வருடத்தை அடைந்து விடுவார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
 
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
 
அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் – ஃபத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
 
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
 
———-

 

[1] وَالْكَامِلُ) أَيْ الْبَالِغُ الْحَرُّ (بِالصَّبِيِّ) الْمُمَيَّزِ وَلَوْ فِي فَرْضٍ لِخَبَرِ الْبُخَارِيِّ «أَنَّ عَمْرَو بْنَ سَلِمَةِ بِكَسْرِ اللَّامِ كَانَ يَؤُمُّ قَوْمَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – وَهُوَ ابْنُ سِتٍّ أَوْ سَبْعٍ» نَعَمْ الْبَالِغُ وَلَوْ مَفْضُولًا أَوْ قِنًّا أَوْلَى مِنْهُ لِلْخِلَافِ فِي صِحَّةِ الِاقْتِدَاءِ بِهِ وَمِنْ ثَمَّ كُرِهَ كَمَا فِي الْبُوَيْطِيِّ (تحفة المحتاج في شرح المنهاج)

[2] عَنْ عَمْرِو بْنِ سَلَمَةَ، قَالَ: قَالَ لِي أَبُو قِلاَبَةَ: أَلاَ تَلْقَاهُ فَتَسْأَلَهُ؟ قَالَ فَلَقِيتُهُ فَسَأَلْتُهُ فَقَالَ: كُنَّا بِمَاءٍ مَمَرَّ النَّاسِ، وَكَانَ يَمُرُّ بِنَا الرُّكْبَانُ فَنَسْأَلُهُمْ: مَا لِلنَّاسِ، مَا لِلنَّاسِ؟ [ص:151] مَا هَذَا الرَّجُلُ؟ فَيَقُولُونَ: يَزْعُمُ أَنَّ اللَّهَ أَرْسَلَهُ، أَوْحَى إِلَيْهِ، أَوْ: أَوْحَى اللَّهُ بِكَذَا، فَكُنْتُ أَحْفَظُ ذَلِكَ الكَلاَمَ، وَكَأَنَّمَا يُقَرُّ فِي صَدْرِي، وَكَانَتِ العَرَبُ تَلَوَّمُ بِإِسْلاَمِهِمُ الفَتْحَ، فَيَقُولُونَ: اتْرُكُوهُ وَقَوْمَهُ، فَإِنَّهُ إِنْ ظَهَرَ عَلَيْهِمْ فَهُوَ نَبِيٌّ صَادِقٌ، فَلَمَّا كَانَتْ وَقْعَةُ أَهْلِ الفَتْحِ، بَادَرَ كُلُّ قَوْمٍ بِإِسْلاَمِهِمْ، وَبَدَرَ أَبِي قَوْمِي بِإِسْلاَمِهِمْ، فَلَمَّا قَدِمَ قَالَ: جِئْتُكُمْ وَاللَّهِ مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقًّا، فَقَالَ: «صَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، وَصَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا». فَنَظَرُوا فَلَمْ يَكُنْ أَحَدٌ أَكْثَرَ قُرْآنًا مِنِّي، لِمَا كُنْتُ أَتَلَقَّى مِنَ الرُّكْبَانِ، فَقَدَّمُونِي بَيْنَ أَيْدِيهِمْ، وَأَنَا ابْنُ سِتٍّ أَوْ سَبْعِ سِنِينَ، وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ، كُنْتُ إِذَا سَجَدْتُ تَقَلَّصَتْ عَنِّي، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ الحَيِّ: أَلاَ تُغَطُّوا عَنَّا اسْتَ قَارِئِكُمْ؟ فَاشْتَرَوْا فَقَطَعُوا لِي قَمِيصًا، فَمَا فَرِحْتُ بِشَيْءٍ فَرَحِي بِذَلِكَ القَمِيصِ.  (رواه البخاري)

[3] (وسئل) نفع الله به عن قولهم يستحب أن لا يزيد ما بين الإمام والمأمومين على ثلاثة أذرع فلو ترك هذا المستحب هل يكون مكروها كما لو ساواه في الموقف وحينئذ تفوته فضيلة الجماعة كما أجاب به بعض أئمتنا أم لا تفوت كما قال به غيره وكذلك لو صف صفا ثانيا قبل إكمال الأول هل يكون كذلك مكروها تفوت به فضيلة الجماعة؟

(فأجاب) بقوله كل ما ذكر مكروه مفوت لفضيلة الجماعة فقد قال القاضي وغيره وجزم به في المجموع السنة أن لا يزيد ما بين الإمام ومن خلفه من الرجال على ثلاثة أذرع تقريبا كما بين كل صفين أما النساء فيسن لهم التخلف كثيرا وفي المجموع اتفق أصحابنا وغيرهم على استحباب الصف الأول والحث عليه ويمين الإمام وسد فرج الصفوف وإتمام الأول ثم ما يليه وهكذا ولا يشرع في صف حتى يتم ما قبله.

وفي شرحي للعباب كل ما قيل بندبه في هذا الباب تكره مخالفته كما يصرح به كلام المجموع فإنه لما ذكر أحكام الموقف قال: قال أصحابنا هذا كله مستحب ومخالفته مكروهة ثم قال بعد ذكر أحكام أخر للموقف وحاصله أن المواقف المذكورة كلها على الاستحباب فإن خالفها كره اهـ.

ومن هنا قال السبكي تكرر من النووي إطلاق الكراهة على المخالفة في جميع ما استحب في هذا الباب قال الزركشي كابن العماد وسبقهما الأحنف عصري صاحب البيان في مسألة المساواة وينبغي أن لا تحصل له فضيلة الجماعة كما لو قارنه في الأفعال اهـ ولا خصوصية للمساواة بذلك بل سائر المكروهات في هذا الباب كذلك لما يأتي مبسوطا أن كل ما كان مكروها من حيث الجماعة يمنع فضلها انتهت عبارته وحاصل ما أشار إليه أنه يأتي أن المقارنة أو التقدم الغير المبطل مكروه مفوت لفضيلة الجماعة واعترضه كثيرون بما رده آخرون منهم أبو زرعة.

قال: لأنهم لم يقولوا فاتت الجماعة بل فات فضلها فهي جماعة صحيحة لكن لا ثواب فيها.

وفائدة صحتها مع انتفاء الثواب فيها سقوط الإثم على القول بفرضيتها عينا أو كفاية والكراهة على القول بسنيتها لقيام الشعار الظاهر ومنهم الزركشي قال لأن الصحة لا تستلزم الثواب ولا منافاة بين حصولها مع انتفاء فضلها بدليل ما لو صلى جماعة في أرض مغصوبة وكون المدرك لها في التشهد في جماعة قطعا ومع ذلك قيل لا يحصل له فضلها والبغوي إنما نفى فضلها ولم يقل بطلت فدل على بقائها حتى يتحمل عنه السهو وغيره قال والعجب من أولئك المشايخ أي: المعترضين كيف غفلوا عن هذا وتتابعوا على هذا الفساد. وأن فوات الفضيلة يستلزم الخروج عن المتابعة مع وضوح عدم التلازم بينهما وجزم البارزي بحصول ثوابها أعجب؛ لأن المكروه لا ثواب فيه وكيف يتخيل حصوله وقد ذكر الشيخ أبو إسحاق أن المفارقة الآتية تفوت الفضيلة ويجري ذلك في مساواة الإمام في الموقف فإنها مكروهة.

والضابط أنه حيث فعل مكروها مع الجماعة أي: بأن لم يوجد حالة الانفراد من مخالفة المأمور بالموافقة والمتابعة فاته فضلها إذ المكروه لا ثواب فيه اهـ. الغرض من كلام الزركشي ملخصا وهو ظاهر لا غبار عليه. ( فتاوي الكبري الفقهية)

[4] والبلوغ باستكمال خمس عشرة سنة أو خروج المنى ووقت إمكانه استكمال تسع سنين ونبات العانة يقتضي الحكم ببلوغ ولد الكافر لا المسلم في الأصح وتزيد المرأة حيضا وحبلا. (كتاب الحجر – منهاج الطالبين)