தலாக், தலாக், தலாக் என்று கூறுவது தொடர்பான மார்க்க விளக்கம்

FATWA # ACJU/FTW/2019/26-377

Question

தலாக், தலாக், தலாக் என்று கூறினால் தலாக் நிகழுமா?

Fatwa

ACJU/FTW/2017/13-290
2017.03.28 (1438.06.28)

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

கணவன் மனைவிக்கிடையில் பிணக்கு ஏற்படும் பொழுது அவர்களை சமாதானப்படுத்தி வைப்பதற்காக இரு தரப்பினர் சார்பாகவும் இரண்டு நபர்களை அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் இருவரும் அந்தக் கணவன் மனைவிக்கிடையில் உள்ள பிணக்கை நல்லுபதேசம் மற்றும் ஆலோசனை மூலம் தீர்த்து வைக்க முயற்சி செய்தல் வேண்டும். இதுபற்றி அல்லாஹு தஆலா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்:

“(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள். அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.” (சூரத்துன் நிஸா : 35)1

மேலும், அவர்கள் தலாக்கின் மூலம் ஏற்படும் குடும்பப் பிரிவு, குழந்தைகளின் பாதிப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றித் தெளிவுபடுத்தி அவ்விருவரும் சேர்ந்து வாழ்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு இரண்டு தரப்பினர் சார்பாகவும் சமாதானம் பேசுவதற்கு இரண்டு நபர்களை அனுப்புவது கட்டாயம் என அதிகமான மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.2 அவ்வாறு முயற்சி செய்தும் அவர்கள் இருவரும் பிரிவதில் தான் அவர்களுக்கு நலவு உள்ளது என்று சமாதானத்தில் ஈடுபடுவோர் கருதுவார்கள் என்றால் அவர்கள் தலாக், பஸ்கு, குல்உ ஆகியவற்றில் மிகப் பொருத்தமான ஏதாவது ஒன்றின் மூலம் விவாக ஒப்பந்தத்தை முறிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

தலாக் மூலமாகப் பிரிவதென்றால் அதற்கென்று குறிப்பிட்ட சில வார்த்தைகளும் மற்றும் நிபந்தனைகளும் உள்ளன.

அவற்றில், கணவன் மனைவியைத் தலாக் கூறும்போது, தலாக் என்ற வார்த்தையுடன், உன்னை தலாக், நீ தலாக் ஆகிவிட்டாய், உனக்குத் தலாக், அவளைத் தலாக், அவளுக்குத் தலாக், அல்லது மனைவியின் பெயரைக் குறிப்பிட்டு தலாக் சொல்லுகிறேன் எனக் குறிப்பிடுதல் வேண்டும். வெறுமனே தலாக், தலாக், தலாக் என்று மாத்திரம் கூறினால் தலாக் நிகழாது என்ற சட்டமும் உள்ளது.3

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் – ஃபத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


[1] وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا ( سورة النساء -35 )

[2] (فإن اشتد الشقاق) بكسر الشين أي الخلاف والعداوة بينهما مأخوذ من الشق، وهو الناحية، إذ كل واحد صار في ناحية، وذلك بأن دام بينهما التساب والتضارب وفحش ذلك (بعث) القاضي (حكما من أهله وحكما من أهلها) لينظر في أمرهما بعد اختلاء حكمه به وحكمها بها ومعرفة ما عندهما في ذلك،

ولا يخفي حكم عن حكم شيئا إذا اجتمعا ويصلحا بينهما أو يفرقا بطلقة إن عسر الإصلاح على ما يأتي لآية: {وإن خفتم شقاق بينهما} [النساء: 35] والخطاب فيها للحكام، وقيل: للأولياء والبعث واجب كما صححه في زيادة الروضة، وجزم به الماوردي وإن صحح في المهمات الاستحباب لنقل البحر له عن نص الشافعي. وقال الأذرعي: بل ظاهر نص الأم الوجوب، وأما كونهما من أهلهما فمستحب غير مستحق إجماعا كما في النهاية؛ لأن القرابة لا تشترط في الحاكم ولا في الوكيل. “مغنى المحتاج- كتاب النكاح-فصل في حكم الشقاق بالتعدي بين الزوجين “

[3] ولو حذف المفعول كأن قال: طلقت، أو المبتدأ وحرف النداء كأن قال: طالق لم يقع الطلاق كما هو ظاهر كلامهم، وصرح به القفال في الأولى (لا أنت طلاق والطلاق) فليسا بصريحين (في الأصح) بل كنايتان: ( مغني المحتاج-كتاب الطلاق)

قوله: أنت طالق) فلو حذف المبتدأ لم يقع شيء وإن نوى تقديره شرح م ر، والظاهر أن محله حيث لم يقع جوابا لكلام يتعلق به فلو قالت له: هل أنا طالق؟ ، فقال: طالق وقع ع ش على م ر( حاشية البحيرمي-أركان الطلاق- كتاب الطلاق)