அல்-குர்ஆன் மத்ரஸா முஅல்லிமாக்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில், முஅல்லிமாக்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி, 2026 செப்டம்பர் 27 அன்று, லியாஸ்-ப்ரோட்வே ஜாமிஉல் பலாஹ் மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதன்போது, ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தல்கள் மற்றும் புதிய நடைமுறைகள் தொடர்பில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டங்கள் மற்றும் அவற்றைக் கற்பிக்கும் முறைகள் தொடர்பிலும் போதிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், பல பகுதிகளைச் சேர்ந்த முஅல்லிமாக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இதில், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி மற்றும் பிரிவின் ஆளணியினர்கள் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, மேற்படி விடயங்கள் தொடர்பில் விளக்கங்களையும் தெளிவுகளையும் வழங்கினர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன