அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் ஏற்பாட்டில், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று 2026 ஒக்டோபர் 08ஆம் திகதி ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
சமூக அமைப்புகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதுடன், பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில் மக்களிடையே சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது குறித்து ஆராயும் நோக்கில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது, தற்கால சூழ்நிலையில் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு ஆகியவற்றின் தேவை மற்றும் அவசியம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை சமய மற்றும் சமூக அமைப்புகள் என்ற வகையில் நாம் முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில், பின்வரும் சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
CDMF, Muslim Council, NSC, ZAM ZAM, AUMSA, FRCS, HCF, CIS, We Are One, SLJI, MIC, ACMLYF, PAHANA, UTJ, RPSL, ACTJ, MNF, ACUMLYF, NIDA, Muslim Media Forum
குறித்த சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அதன் தலைவர், பொதுச் செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர்கள், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.



– ACJU Media –



