ஜாமிஆ நளீமிய்யாவில் நடைபெற்ற கதீப்மார்களுக்கான இருநாள் வதிவிட வலுவூட்டல் செயலமர்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் கதீப்மார்களுக்கான இருநாள் வதிவிட வலுவூட்டல் செயலமர்வு 2026 ஒக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யாவின் ADRT மண்டபத்தில் நடைபெற்றது.

கதீப்மார்களின் திறன்கள் மற்றும் ஆளுமைகளை மேம்படுத்துவதுடன் ஜுமுஆ குத்பாக்களை வினைத்திறன் மிக்க வகையில் தயாரித்து மக்களிடம் முன்வைப்பதற்கான பயிற்சியினை வழங்கும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, கதீப்மார்களின் ஆன்மீக மேம்பாடு, அறிவுப் பின்புலம் மற்றும் ஆளுமை விருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கக் காட்சிகளூடாக விரிவான முறையில் விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு, காலத்திற்கேற்ற மற்றும் சமூகத்திற்கு பயனுள்ள வகையில் வினைத்திறன் மிக்க குத்பாக்களை நிகழ்த்துவது எப்படி? குத்பாக்களை தயாரிப்பதற்கு இணையத் தளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பன குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இச்செயலமர்வில், ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டதுடன், பிரிவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா, நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் மற்றும் ஜாமிஆ நளீமிய்யாவின் முதல்வர் அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு பல்வேறு விளக்கங்களையும் வழிகாட்டல்களையும் வழங்கினர்.

மேலும், ஆலிம்கள் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் மற்றும் பிரிவின் உறுப்பினர் அஷ்-ஷைக் ஹஸ்ஸான் ஸுலைமான் ஆகியோர்கள் இந்நிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைத்தமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன