அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவினர் மற்றும் கட்டுவன்வில கிளை ஜம்இய்யாவின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோரிடையிலான விசேட சந்திப்பொன்று 2026 ஒக்டோபர் 11 அன்று கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
ஜம்இய்யாவின், அல்-குர்ஆன் மத்ரஸா பாடத் திட்டத்தை கட்டுவன்வில பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, அல்-குர்ஆன் மத்ரஸா பாடத் திட்டம் குறித்த அறிமுகம் வழங்கப்பட்டதுடன் அதனை எவ்வாறு பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இதில் காணப்படும் சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
குறித்த சந்திப்பில், கட்டுவன்வில பிரதேசக் கிளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
ஜம்இய்யா சார்பில், அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, அஷ்-ஷைக் அஸ்வர் அலி, அஷ்-ஷைக் அஹ்லம் மற்றும் அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்துகொண்டனர்



– ACJU Media –


