அல்குர்ஆன் மத்ரஸா
அல்குர்ஆன் மத்ரஸா கல்வி முறையை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தைக் கண்டறிந்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அல்குர்ஆன் மத்ரஸாவுக்கான கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு செயற்திட்டத்தை தொடங்கியது. புனித அல்குர்ஆனை ஓதுவதற்கும், சரியான முறையில் அதனை விளங்குவதற்கும் இங்கு கற்பிக்கப்படுவதோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்கள், ‘ஆதாப்’ (நல்லொழுக்கம், நன்னடத்தை), ‘அஃலாக்’ (பண்பாடு, உயர்ந்த சமூக நடத்தை), சகவாழ்வு, இஸ்லாமிய வரலாறு மற்றும் அரபு மொழி ஆகியவை இப்பாடநெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன
இந்தப் பாடத்திட்டமானது அனைத்து வகையான தீவிரவாத, பயங்கரவாத சிந்தனைகளிலிருந்தும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டதாகும். இஸ்லாத்தை கற்பிப்பதற்கான பாடத்திட்ட வரைபை உருவாக்கிய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் அதன் அதிகாரிகளின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளின்படி இப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
புனித அல்குர்ஆன், சுன்னா மற்றும் இஸ்லாமிய போதனைகளை கற்றுக்கொள்வதில் மாணவர்களிடையே ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட இந்த செயற்திட்டம் அல்குர்ஆன் மத்ரஸாக்களின் மேம்பாட்டிற்காக ஜம்இய்யா மேற்கொண்ட பாரியதொரு திட்டமாக காணப்படுகின்றது.
