செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்

FATWA # 0145/ACJU/F/2009

Question

முஸ்லிம் அல்லாதவர்களுக்குரிய செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல் விடயமாக மார்க்கத் தீர்ப்புக் கோரி 2009.08.10 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லது முஸ்லிம் அல்லாதவர்களின் நிறுவனங்களிலிருந்து வரும் உதவிகளை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்வதில் இஸ்லாத்தில் தடை ஏதும் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் முகவ்கிஸ் என்ற கிரிஸ்தவ அரசனின் அன்பளிப்பையும் மேலும் ஒரு யூதப் பெண் கொடுத்த ஆட்டிறைச்சியையும் ஏற்றுள்ளார்கள்.

என்றாலும் இவர்களுடைய அன்பளிப்புகள், நிவாரண உதவிகள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் அமைந்துள்ளது என தெரியவந்தால் அவற்றை ஏற்காமல் தவிர்ந்து கொள்வது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.