Researched Fatwa
நாணயத்தின் ஸக்காத் விதியாகும் பெறுமானத்தை எப்படி தீர்மானிப்து?
FATWA # 019/ACJU/F/2006
Question

நாணயத்தின் ஸக்காத் விதியாகும் பெறுமானத்தை எப்படி தீர்மானிப்து சம்பந்தமாக ஃபத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2004.10.27 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.
Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
நாணயத்துக்கான ஸக்காத் விதியாவதற்கு ஆகக் குறைந்த நிஸாப் (பெறுமானம்) தங்கத்தின் பெறுமதியை வைத்து தீர்மானிப்பதா அல்லது வெள்ளியின் பெறுமதியை வைத்து தீர்மானிப்பதா என்ற விடயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
எனினும் வெள்ளியின் பெறுமதியை வைத்து ஸக்காத்தின் பெறுமானத்தை தீர்மானிப்பதே பொருத்தமானதாகும். ஏனெனில் அதனால் மிக அதிகமானோர் மீது ஸக்காத் கடமையாவதுடன் அதிகமான ஏழைகள் அல்லது ஸக்காத் பெறத் தகுதி உடையவர்கள் பயன் பெறுவர்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.