பெண்கள் வீடுகளில் இஃதிகாஃப் இருத்தல்
Question
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
பெண்கள் இஃதிகாஃப் இருப்பதென்றால் ஆண்களைப் போன்று மஸ்ஜிதில்தான் இருக்க வேண்டும். பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருக்க முடியாது என்பது இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் உட்பட அதிகமான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.
இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்:
‘ஆணிடமிருந்தோ, பெண்ணிடமிருந்தோ மஸ்ஜித்லேயன்றி இஃதிகாஃப் சரியாகாது. மேலும் பெண்ணினது வீட்டின் மஸ்ஜித்லோ ஆணினது வீட்டின் மஸ்ஜித்லோ அது (இஃதிகாஃப்) சரியாகாது. அது (வீட்டின் மஸ்ஜித்) ஒதுக்கமான, தொழுகைக்கென ஒழுங்கு செய்யப்பட்ட இடமாகும்’ (நூல்: அல்-மஜ்மூஃ – பாடம்: இஃதிகாஃப்)
என்றாலும் இமாம் அபூ ஹனீபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களது மத்ஹபில் ஒரு பெண் தனது இல்லத்தில் தொழுகைக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேகமான இடத்தில் அல்லது தனது வீட்டில் ஓர் இடத்தை இஃதிகாஃபுக்கென விசேடமாக ஒதுக்கி அதில் இஃதிகாஃப் இருக்கலாம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

