Researched Fatwa
வளர்ப்புப் பிள்ளைக்கு அனந்தர சொத்தில் பங்கில்லை
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!
தத்தெடுத்து வளர்க்கும் பிள்ளைக்கும் தான் பெற்றெடுத்து வளர்க்கும் பிள்ளைக்கும் இஸ்லாத்தில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தத்தெடுத்து வளர்க்கும் பிள்ளையை தான்பெற்ற பிள்ளையாக எப்பொழுதும் கருத முடியாது. அல்லாஹ் தஆலா குர்ஆனில்
(“நீங்கள் தத்தெடுத்தவர்களை அல்லாஹ் உங்கள் (உண்மை) சந்ததிகளாக் ஆக்கவில்லை”) என்று கூறுகின்றான். (அல்-அஹ்ஸாப், வசனம் : 04)
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் “தன்னைப் பெற்ற தந்தையல்லாதவரை அவர் தெரிந்தும் தந்தையென்று கூறுபவர் காபிராகிவிட்டார்” என்று கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் சஹீஹுல் புகாரி, ஹதீஸ் எண்: 3317)
எனவே, தத்தெடுக்கப்படுபவர் சொந்தப் பிள்ளையாகமாட்டார் என்பதால் அவருக்கு இஸ்லாமிய வாரிசு சட்டத்தில் உள்ள தகப்பனுடைய சொத்திலிருந்து மகனுக்கு கிடைக்கும் பங்கு கிடைக்காது. என்றாலும் தத்தெடுத்தவர் தன்னால் தத்தெடுத்தெடுக்கப் பட்டவருக்கு தனது சொத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கிட்குள் வசிய்யத் செய்தால் குறிப்பிட்ட வசிய்யத் செய்த பங்கை அவருக்கு கொடுத்தல் வேண்டும். மூன்றில் ஒரு பங்கைவிட மேலதிகமாக வசிய்யத் செய்தால் மேலதிகப் பகுதிக்கு வாரிஸ்காரர்களது அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும்.
உங்களது கடிதத்தில் “உங்களது கணவர் நீங்கள் வளர்த்த பிள்ளைக்கு தனது முழு சொத்தையும் வசிய்யத் செய்துள்ளதாக கூறியிருக்கின்றீர்கள்”. ஒருவருக்கு தனது முழு சொத்தையும் வசிய்யத் செய்ய முடியாது. எனவே மேற்குறிப்பிட்டதன் பிரகாரம் முழு சொத்திலுமிருந்து மூன்றில் ஒரு பங்கை நீங்கள் வளர்த்த பிள்ளைக்கு கொடுக்கலாம். மேலதிகமாக கொடுப்பதாக இருந்தால் வாரிஸ்காரர்களாகிய உங்கள் கணவருடைய சகோதரர்களின் அனுமதியைப் பெறல் வேண்டும்.
மரணித்த உங்கள் கணவரின் வாரிஸ்காரர்களாக மரணித்தவரது மனைவி (அதாவது நீங்கள்), 5 உடன் பிறந்த சகோதரர்கள், மேலும் 4 உடன் பிறந்த சகோதரிகள் ஆகியோர் இருப்பதாக உங்கள் கடிதத்தில் கூறியுள்ளீர்கள்.
எனவே, மேற்குறிப்பிடப்பட்ட வாரிஸ்காரர்களுக்கு உங்கள் கணவருடைய கடன், வசிய்யத் போன்றவற்றை நிறைவேற்றியதன் பின், பின்வரும் முறையில் சொத்து பிரிக்கப்படல் வேண்டும்.
பிரிக்கப்பட வேண்டிய மொத்தப் பங்குகள் – 56
அனந்தரக் காரர்கள் | பங்கு |
மனைவி | 14 |
முதலாவது சகோதரர் | 06 |
இரண்டாவது சகோதரர் | 06 |
மூன்றாவது சகோதரர் | 06 |
நான்காவது சகோதரர் | 06 |
ஐந்தாவது சகோதரர் | 06 |
முதலாவது சகோதரி | 06 |
இரண்டாவது சகோதரி | 03 |
மூன்றாவது சகோதரி | 03 |
நான்காவது சகோதரி | 03 |
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு