வெளிநாட்டிலிருக்கும் மணமகனின் நிக்காஹை ‘வக்கீல்’ மூலம் நடத்துதல்
FATWA #021/ACJU/F/2006
Question

மணப்பெண்ணும், அவரது 'வலீ' யாகிய தந்தையும் இலங்கையிலிருக்க, மணமகன் வெளிநாடொன்றில் இருந்து தனது நிக்காஹை பொறுப்பேற்று நடாத்திவைக்க ஒருவரை நியமித்து அவர் மணமகனின் 'வக்கீல்'ஆக இருந்து நடாத்தப்பட்ட நிக்காஹ் செல்லுபடியாகுமா என்று தெளிவு வேண்டி தங்களால் அனுப்பப்பட்ட 2006.06.16 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.
Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
மணப்பெண்ணும் அவரது ‘வலீ’ யாகிய தந்தையும் இலங்கையிலிருக்க, மணமகன் வெளிநாட்டிலிருந்து தனக்குப் பகரமாக திருமணம் நடைபெறும் இடத்தில் ‘வக்கீல்’ ஆக ஒருவரை உத்தியோகபூர்வமாக நியமித்து தனது நிக்காஹை நடாத்திக் கொண்டது ஷரீஆவின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதும், செல்லுபடியானதுமாகும்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.