Researched Fatwa
ஸக்காத்தைப் பெறுவதற்கு தகுதியானவர்கள்
FATWA # 012/ACJU/F/2006
Question
ஸக்காத்தைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் சம்பந்தமாக ஃபத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2004.10.27 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஸக்காத்தைப் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் பற்றி அல் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
‘(ஸக்காத் என்னும்) தானங்கள்
ஃபக்கீர்களுக்கும்,
மிஸ்கீன்களுக்கும்,
அதன் உத்தியோகத்தர்களுக்கும்,
இஸ்லாத்தின் பால் இணக்கமானோருக்கும்,
அடிமைகளை விடுதலை செய்வதற்கும்,
கடனில் மூழ்கியவர்களுக்கும்,
அல்லாஹ்வுடைய பாதையில் போராடுவதற்கும்,
வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் மிக்க அறிந்தோனும், ஞானமுடையோனுமாயிருக்கிறான்’. (09:60).
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

