மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை நீங்க விசேட துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

01.03.2026

1447.09.11

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

இப்புனித ரமழான் மாதத்தில், குறிப்பாக மத்திய கிழக்கு பகுதியிலும் உலகளாவிய ரீதியிலும் அமைதியின்மை நிலவியிருப்பதை நாம் அறிவோம்.

எனவே உலகின் அனைத்து பகுதிகளிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டி, விசேட துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்கிறது.

இப்புனித ரமழான் மாதத்தில் வீணான காரியங்களிலிருந்து விலகி தொழுகை, துஆ, திக்ர், இஸ்திஃபார், மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபடுவதுடன் குறிப்பாக சஹர், இப்தார் மற்றும் இரவு வணக்கங்களின் போது விசேட துஆக்களில் ஈடுபடுவதுடன், ஃபஜ்ர் தொழுகையின் குனூத் மற்றும் ரமழான் மாத 15ஆவது நாளிலிருந்து ஓதப்படும் வித்ர் தொழுகையின் குனூத் ஆகியவற்றில் குனூத்துன் நாசிலாவில் ஓதப்படும் துஆக்களைச் சேர்த்து ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களிடமும் கேட்டுக்கொள்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்து நாடுகளுக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நீதியை அருள்வானாக.

 * اللَّهُمَّ اكْتُبْ الأَمْنَ وَالسَّلَامَةَ عَلَى الْعِبَادِ وَالْبِلَادِ فِي أَنْحَاءِ الْعَالَمِ

* اللَّهُمَّ احْرُسْهُم بِعَيْنِكَ الَّتِي لَا تَنَام، وَاكْنُفْهُم بِرُكْنِكَ الَّذِي لَا يُرَام، وَاحْفَظْهُم بِقُدْرَتِكَ عَلَيْهِم، وَأَنْتَ رَجَاؤُنَا وَرَجَاؤُهُم.

 * اللَّهُمَّ احْفَظِ الْحَرَمَيْنِ الشَّرِيفَيْنِ وَ الْمَسْجِدَ الأَقْصَى وَمَا حَوْلَهُمَا مِنْ كُلِّ شَرٍّ وَسُوءٍ، وَاجْعَلْهَا دِيَارَ أَمْنٍ وَسَكِينَةٍ

* أللَّهُمَّ إِنَّا نَسْئَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِيْنِنَا وَدُنْيَانَا وَأَهْلِنَا وَمَالِنَا.
 * أَللّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَآمِنْ رَوْعَاتِنَا، أَللّهُمَّ احْفَظْنَا مِنْ بَيْنِ أَيْدِيْنَا وَمِنْ خَلْفِنَا وَعَنْ يَمِيْنِنَا وَعَنْ شِمَالِنَا وَمِنْ فَوْقِنَا وَنَعُوْذُ بِعَظْمَتِكَ أَنْ نُغْتَالَ مِنْ تَحْتِنا.

* أَللّهُمَّ الْطُفْ بِعِبَادِكَ يَا رَحِيْمُ وَاحْفَظْهُمْ وَاكْشِفْ غَمَّهُمْ وَاحْقِنْ دِمَائَهُمْ وَاحْفَظْ مَسَاجِدَهُمْ وَأَمْوَالَهُمْ.

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான்
பதில் செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன