Researched Fatwa
அகால மரணம் என்னும் சொல்லை உபயோகித்தல்
Question
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
திடீர் விபத்தின் காரணமாக ஒருவர் மரணமாகுவதை ‘அகால மரணம்’ என மக்கள் பொதுவாகக் கூறுகின்றனர். இவ்வார்த்தையை தமிழ் இலக்கண அடிப்படையில் நோக்கும் போது அகாலம் என்னும் சொல் காலம் என்பதின் எதிர்மறையாக அமைகின்றது. இதன்படி ஒருவர் அகால மரணமானார் என்று கூறும் போது அவர் தனது தவனைக்கு முன் மரணமானார் என்ற கருத்தை அது உணர்த்துகின்றது. இது இஸ்லாமியக் கொள்கைக்கு முரணாக அமைவதனால் முஸ்லிம்கள் ‘அகால மரணம்’ என்னும் சொல்லை உபயோகிப்பதைத் தவிர்த்து திடீர் மரணம் அல்லது அக்கருத்தைத் தெளிவுபடுத்தும் மார்க்கத்துக்கு முரணில்லாத வேறு வார்த்தைகளைப் பயன்படுத்துவதே சிறந்ததாகும்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

