ஜம்இய்யாவின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைக்கான புதிய நிர்வாகக் குழுத் தெரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் விவகாரப் பிரிவினால், முல்லைத்தீவு மாவட்டக் கிளைக்கான புதிய நிர்வாகக் குழுத் தெரிவானது 2026 ஒக்டோபர் 17ஆம் திகதி ஹிஜ்ராபுரம் ஜுமுஆப் பள்ளிவாயலில் சிறப்பாக நடத்தப்பட்டது.

இதன்போது, முன்னைய நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகக் குழுவுக்கான தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள் மற்றும் உப செயலாளர் ஆகியோர் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது.

இத்தெரிவானது, ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் அவர்களின் மேற்பார்வையிலும், குறித்த பிரிவின் ஆளணியினரான அஷ்-ஷைக் அப்துல் காதர் மற்றும் அஷ்-ஷைக் உமர் பாரிஸ் ஆகியோரது பங்களிப்புடனும் சிறப்பாக நடைபெற்றது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன