ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரப் பிரிவினருக்கும் மன்னார் மாவட்டக் கிளையின் நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் விவகாரப் பிரிவினருக்கும், ஜம்இய்யாவின் மன்னார் மாவட்டக் கிளையின் நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று, 2026 ஒக்டோபர் 18 அன்று மன்னார் டவுன் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

மன்னார் மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள பிரதேசக் கிளைகளின் செயற்பாடுகள், நிர்வாக விடயங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, மன்னார் மாவட்டக் கிளை மற்றும் பிரதேசக் கிளைகளில் காணப்படும் சவால்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான பொருத்தமான தீர்வுகளை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில், ஜம்இய்யாவின் மன்னார் மாவட்டக் கிளை மற்றும் பிரதேசக் கிளைகளின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஜம்இய்யா சார்பில், கிளைகள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் மற்றும் அப்பிரிவின் ஆளணியினரான அஷ்-ஷைக் அப்துல் காதர், அஷ்-ஷைக் உமர் பாரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன