அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் விவகாரப் பிரிவினால் பஸ்யால பிரதேசக் கிளைக்கான காரியக் குழுத் தெரிவு, 2026 ஒக்டோபர் 10 அன்று கல்எலிய ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதன்போது, கிளையின் முந்தைய காரியக் குழுவானது கலைக்கப்பட்டதுடன், தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள் மற்றும் உப செயலாளர் ஆகியோர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்டு புதிய காரியக் குழு நியமிக்கப்பட்டது.
இத்தெரிவானது, ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் அவர்களது மேற்பார்வையின் கீழ் சிறப்பாக நடைபெற்றது.


– ACJU Media –


