கூட்டு உழ்ஹிய்யா தொடர்பான மார்க்க விளக்கம்
Question

Fatwa

ACJU/FTW/2018/22-343
2018.08.17 -1439.12.05
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
உழ்ஹிய்யா எனும் இபாதத்தை நிறைவேற்றுபவர், அது சம்பந்தமான சட்டதிட்டங்களை அறிந்தவராக இருப்பின், நாட்டின் சட்டங்களையும் பின்பற்றி, அவராகவே அதை நிறைவேற்றுவதும், முடியுமாக இருந்தால் அவரது வீட்டில், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் இருப்பதும் சிறந்தது. 1
தற்காலத்தில் சில இடங்களில் உழ்ஹிய்யாவுடைய அமலைக் கூட்டாக நிறைவேற்றும் வழமை உள்ளது. பொதுவாக ஸகாத், நேர்ச்சை, அகீக்கா, உழ்ஹிய்யா போன்ற அமல்களை தானே முன்னின்று நிறைவேற்றுவதைப் போன்று, பிறரையும் பொறுப்பாக்கி, அவற்றை நிறைவேற்ற அனுமதியுள்ளது என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். 2
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது உழ்ஹிய்யாவின் சில பிராணிகளை அலி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மூலம் உழ்ஹிய்யாக் கொடுத்திருக்கின்றார்கள். உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு பொருப்பாக்கப்படுபவர் தனி நபராக அல்லது ஒரு நிறுவனமாக இருக்கமுடியும். என்றாலும், உழ்ஹிய்யா ஒரு வணக்கமாக இருப்பதால், அதைக் நிறைவேற்றுவதற்குப் பொருப்பேற்பவர்கள் உழ்ஹிய்யா சம்பந்தமான மார்க்க சட்டங்களை அறிந்தவராக இருத்தல் வேண்டும் என்றும் மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். 3
உழ்ஹிய்யாக் கொடுப்பவர்கள் பிராணிகளை அறுப்பதற்கு அரசாங்கம் விதித்துள்ள பிரத்தியேகமான சட்டங்களையும் கவனத்திற் கொள்வது அவசியமாகும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் பொழுது இச்சட்டங்களைப் பின்பற்றுவது குறிப்பாக நகர்ப் புறங்களைப் பொறுத்தவரையில் கடினமான விடயமாகும்.
இவ்வடிப்படையில், உழ்ஹிய்யா சம்பந்தமான மார்க்க அறிவும், அரசாங்க சட்டங்கள் பற்றிய தெளிவும் உள்ள ஒருவர் தனிப்பட்ட முறையில் உழ்ஹிய்யாவைக் கொடுக்க முடியுமாக இருந்தால், அவ்வாறு கொடுப்பதே சிறந்தது. அதற்கு சிரமமாக இருக்கும் பட்சத்தில்; அதனை நிறைவேற்றுவதற்காக ஒரு தனி நபரையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ பொருப்பாக்க முடியும்.
உழ்ஹிய்யாவை நிறைவேற்ற பொருப்பேற்பவர்கள், முழு அமானிதத்துடன் அதனை முறையாக நிறைவேற்ற வேண்டும். பிறரது உழ்ஹிய்யாவை பொறுப்பேற்று நிறைவேற்றுபவர்கள் குறித்த உழ்ஹிய்யாப் பிராணிக்கு அல்லது அதன் பங்கிற்குரிய தொகையையும், அதனுடன் சம்பந்தமான இதர செலவுகளுக்கான தொகையையும் மாத்திரமே அறவிடுதல் வேண்டும். அதனை நிறைவேற்றியதன் பின்னர் பணம் மீதமானால், அதை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைத்தல் வேண்டும்.
மேலும், பிறரை பொருப்பாக்கும் சந்தர்ப்பங்களில், உழ்ஹிய்யாக் கொடுப்பவர் அது நிறைவேற்றப்படும் இடத்தில் சமுகமளித்திருப்பது விரும்பத்தக்கது. பொருப்பேற்றவர் பிராணியை அறுக்கும் பொழுது, உரிமையாளர் உழ்ஹிய்யாவுடைய நிய்யத்தை வைப்பது போதுமானது. அல்லது நியமிக்கப்பட்டவரையே நிய்யத் வைத்து நிறைவேற்றுமாறு பொருப்பாக்கவும் முடியும்.
பல உழ்ஹிய்யாப் பிராணிகளை பொருப்பேற்று அறுக்கும் போது, குறிப்பிட்ட பிராணியுடையவரை அல்லது அதன் பங்குக்குரியவர்களை முடிவு செய்து, அவர்களுக்காக நிய்யத்தை வைப்பது அவசியமாகும்.
அவ்வாறே, சில பகுதிகளில் ஒன்றைவிட அதிகமான பிராணிகளை உழ்ஹிய்யாக் கொடுக்க பொருப்பாக்கப்பட்டவர்கள், அவற்றில் சிலதை குர்பான் செய்து, ஏழைகளுக்கு எப்பகுதியையும் ஒதுக்காமல் உழ்ஹிய்யாக் கொடுத்தவர்களுக்கு மத்தியில் மாத்திரம் பங்கு பிரித்துக் கொள்கின்றனர். இம்முறை தவறானதாகும். ஏனெனில், ஒவ்வொருவரது உழ்ஹிய்யாவிலும் சிறிதளவேனும் ஏழைகளுக்கு சதகா செய்வது அவசியம் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். 4
அத்துடன், உழ்ஹிய்யாக் கொடுப்பதற்குப் பொருப்பாக்கப்பட்டவர், தான் உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் பகுதியில் அதற்கான நேரம் நுழைந்திருப்பது அவசியமாகும். உதாரணத்திற்கு சஊதி நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் இலங்கையில் உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு ஒருவரை நியமித்தால், அவர் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதற்கு இலங்கையில் உழ்ஹிய்யாவுடைய நேரம் நுழைந்திருப்பது அவசியமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் – பத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
————————————————————————————
[1] (وَ) يُسَنُّ (أَنْ يَذْبَحَهَا) أَيْ الْأُضْحِيَّةَ الرَّجُلُ (بِنَفْسِهِ) إنْ أَحْسَنَ الذَّبْحَ لِلِاتِّبَاعِ، رَوَاهُ الشَّيْخَانِ، وَأَنْ يَكُونَ ذَلِكَ فِي بَيْتِهِ بِمَشْهَدٍ مِنْ أَهْلِهِ لِيَفْرَحُوا بِالذَّبْحِ وَيَتَمَتَّعُوا بِاللَّحْمِ، وَفِي يَوْمِ النَّحْرِ، وَإِنْ تَعَدَّدَتْ الْأُضْحِيَّةُ مُسَارَعَةً لِلْخَيْرَاتِ. “كتاب الاضحية – مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج “
[2] (وَ) الشَّرْطُ الثَّانِي: (أَنْ يَكُونَ قَابِلًا لِلنِّيَابَةِ) ؛ لِأَنَّ الْوَكَالَةَ إنَابَةٌ فَمَا لَا يَقْبَلُهَا كَاسْتِيفَاءِ حَقِّ الْقَسْمِ بَيْن الزَّوْجَاتِ لَا يَقْبَلُ التَّوْكِيلَ (فَلَا يَصِحُّ فِي عِبَادَةٍ) ؛ لِأَنَّ الْمَقْصُودَ مِنْهَا الِابْتِلَاءُ وَالِاخْتِبَارُ بِإِتْعَابِ النَّفْسِ، وَذَلِكَ لَا يَحْصُلُ بِالتَّوْكِيلِ (إلَّا الْحَجَّ) وَالْعُمْرَةَ عِنْد الْعَجْزِ (وَتَفْرِقَةَ زَكَاةٍ) وَكَفَّارَةٍ وَنَذْرٍ (صَدَقَةٍ (وَذَبْحَ) هَدْيٍ وَجُبْرَانَ وَعَقِيقَةٍ وَوَأُضْحِيَّةٍ) وَشَاةِ وَلِيمَةٍ وَنَحْوِهَا لِأَدِلَّةٍ فِي بَعْضِ ذَلِكَ، وَالْبَاقِي فِي مَعْنَاهُ، وَيُسْتَثْنَى مِنْ ذَلِكَ أَيْضًا الرَّمْيُ بِمِنًى وَرَكْعَتَا الطَّوَافِ تَبَعًا لِلْحَجِّ وَالْعُمْرَةِ، فَلَوْ أَفْرَدَهُمَا بِالتَّوْكِيلِ لَمْ يَصِحَّ (كتاب الوكالة – مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)
[3] يُسْتَحَبُّ أَنْ يَذْبَحَ هَدْيَهُ وَأُضْحِيَّتَهُ بِنَفْسِهِ قَالَ الْمَاوَرْدِيُّ إلَّا الْمَرْأَةَ فَيُسْتَحَبُّ لَهَا أَنْ تُوَكِّلَ فِي ذَبْحِ هَدْيِهَا وَأُضْحِيَّتِهَا رَجُلًا قَالَ الشَّافِعِيُّ وَالْأَصْحَابُ وَيَجُوزُ لِلرَّجُلِ وَالْمَرْأَةِ أَنْ يُوَكِّلَا فِي ذَبْحِهِمَا مَنْ تَحِلُّ ذَكَاتُهُ وَالْأَفْضَلُ أَنْ يُوَكِّلَ مُسْلِمًا فَقِيهًا بِبَابِ الصَّيْدِ وَالذَّبَائِحِ وَالضَّحَايَا وَمَا يَتَعَلَّقُ بِذَلِكَ لِأَنَّهُ أَعْرَفُ بِشُرُوطِهِ وَسُنَنِهِ “باب الأضحية – المجموع شرح المهذب “
[4] قال تعالى : ( فَكُلُوا مِنْهَا ، وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ ، كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ ، لَعَلَّكُمْ تَشْكُرُونَ ) وقال صلى الله عليه وسلم في الأضاحي : ( فَكُلُوا ، وَادَّخِرُوا ، وَتَصَدَّقُوا ) رواه مسلم (1971) .
قال النووي رحمه الله : ” يجب التصدق بقدرٍ ينطلق عليه الاسم ؛ لأن المقصود إرفاق المساكين ، فعلى هذا : إن أكل الجميع ، لزمه ضمان ما ينطلق عليه الاسم ” (فرع الأفضل والأحسن في هدي التطوع وأضحيته التصدق بالجميع إلا لقمة أو لقما يتبرك بأكلها فإنها مسنونة – روضة الطالبين وعمدة المفتين ” (3/223)
وقال المرداوي رحمه الله : ” وَإِنْ أَكَلَهَا كُلَّهَا ، ضَمِنَ أَقَلَّ مَا يُجْزِئُ فِي الصَّدَقَةِ مِنْهَا ” (باب الهدي والأضاحي – الإنصاف ” (6/491).
وقال البهوتي رحمه الله : ” فَإِنْ لَمْ يَتَصَدَّقْ بِشَيْءٍ نِيءٍ مِنْهَا ، ضَمِنَ أَقَلَّ مَا يَقَعُ عَلَيْهِ الِاسْمُ ، كَالْأُوقِيَّةِ ” انتهى من ” كشاف القناع ” (7/444)