2026 மார்ச் 11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் சமூக சேவைப் பிரிவின் ஒருங்கிணைப்பில் நாடளாவிய ரீதியில் டிட்வா – அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முஸல்லா விரிப்புகள் மற்றும் மன்ஸில் பிரதிகள் வழங்கி வைக்கும் முதற்கட்ட நிகழ்வு ஜம்இய்யா தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது, JDM நிறுவனத்தின் பங்களிப்பில் கிடைக்கப் பெற்ற 24,000 முஸல்லாக்கள் மற்றும் மன்ஸில் பிரதிகளில், சுமார் 13,000 க்கும் மேற்பட்டவை முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் ஆன்மீக தேவைகளை கருத்தில் கொண்டு, அப்பகுதிகளின் மஸ்ஜித் நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டன. மீதமுள்ளவை நாட்டின் பிற பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில், JDM நிறுவனத்தின் உரிமையாளர் அல்-ஹாஜ் நியாஸ், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கௌரவ பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், பிரதிப் பணிப்பாளர் ஏ.ஏ. அஹ்மத், திணைக்கள உத்தியோகத்தர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முஃப்தி (நளீமி) ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 22 பிரதேசங்களின் மஸ்ஜித் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
ஜம்இய்யா சார்பில், பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், பதில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப், சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர் ஆகியோருடன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஆளணியினர் என பலர் கலந்துகொண்டனர்.








– ACJU Media –





