2026.03.03 – 1447.03.13
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
இன்ஷா அல்லாஹ், இன்று செவ்வாய்க்கிழமை (2026.03.03) சந்திர கிரகணம் ஏட்படவுள்ளதாகவும் இதனை கொழும்பு (நேர வலயம் 5.5) நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 06:17 மணி முதல் இரவு 07:26 மணி வரை இலங்கையில் ஏற்படலாம் எனவும் வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلا تَخْوِيفًا (الاسراء: 59)
(மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை. (அல்குர்ஆன் – 17:59)
சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை (மறையக்) கண்டால் அல்லாஹ்விடம் இரைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி -1044)
சூரியன் அல்லது சந்திரன் முழுமையாக அல்லது அவற்றில் ஒரு பகுதி மறைவதைக் காணும் போது கிரகணத் தொழுகை சுன்னத்தாகும்.
கிரகணங்கள் ஏற்படும்போது வீண் பராக்குகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேற்குறித்த வழிகாட்டலை கடைப்பிடித்தொழுகுமாறும் கிரகணம் தென்படும் போது கிரகணத் தொழுகையில் ஈடுபடுமாறும் நாட்டு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு கேட்டுக்கொள்கிறது.
அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்
கௌரவ தவிசாளர் – பிறைக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஏ. எம். எம். மfபாஹிம்
கௌரவ செயலாளர் – பிறைக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா




