Researched Fatwa
ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அல்-அழ்ஹா) தொழுகைக்கும் குத்பாவுக்கும் இடையில் தக்பீர் சொல்வது தொடர்பான மார்க்க விளக்கம்
Question
Fatwa
ACJU/FTW/2025/26/608
2025.09.11 (1447.03.18)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
துல் ஹிஜ்ஜா மாதம் பிறை ஒன்பதாம் தேதி (யவ்மு அரஃபா) பஜ்ர் தொழுகையிலிருந்து, துல் ஹிஜ்ஜா மாதத்தின் 13ஆம் தேதி அஸ்ர் தொழுகை முடியும்வரை, ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் தக்பீர் சொல்வதும் சுன்னத் ஆகும்.
தொழுகைக்குப் பின்னர் என்பது பர்ழான தொழுகைகள், பெருநாள் தொழுகை, ஜனாஸாத் தொழுகை உட்பட அனைத்து விதமான சுன்னத்தான தொழுகைகளுமாகும் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.1
இவ்வகையில், ஈதுல் அல்-அழ்ஹா பெருநாள் தொழுகைக்குப் பின்னர் தக்பீர் சொல்வதும் சுன்னத் ஆகும். இதனால் குத்பாவில் எவ்வித பாதிப்பும் ஏற்படமாட்டாது.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான்
பதில் செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
———-
[1] وَيُكَبِّرُ عَقِبَ النَّوَافِلِ الرَّاتِبَةِ، وَمِنْهَا صَلَاةُ الْعِيدِ، وَعَقِبَ النَّافِلَةِ الْمُطْلَقَةِ، وَعَقِبَ الْجِنَازَةِ عَلَى الْمَذْهَبِ فِي الْجَمِيعِ. (روضة الطالبين وعمدة المفتين ٢/٨٠ — النووي (ت ٦٧٦)
(وَفِي قَوْلٍ) يُكَبِّرُ غَيْرُ الْحَاجِّ (مِنْ مَغْرِبِ لَيْلَةِ النَّحْرِ) كَعِيدِ الْفِطْرِ (وَفِي قَوْلٍ) يُكَبِّرُ (مِنْ) حِينِ فِعْلِ (صُبْحِ) يَوْمِ (عَرَفَةَ وَيَخْتِمُ) عَلَى الْقَوْلَيْنِ (بِعَصْرِ) أَيْ بِالتَّكْبِيرِ عَقِبَ فِعْلِ عَصْرِ آخِرِ أَيَّامِ (التَّشْرِيقِ وَالْعَمَلُ عَلَى هَذَا) فِي الْأَعْصَارِ وَالْأَمْصَارِ لِلْخَبَرِ الصَّحِيحِ فِيهِ عَلَى مَا قَالَهُ الْحَاكِمُ وَتَبِعَهُ تِلْمِيذُهُ الْإِمَامُ الْبَيْهَقِيُّ فِي خِلَافِيَّاتِهِ……..(وَالْأَظْهَرُ أَنَّهُ يُكَبِّرُ فِي هَذِهِ الْأَيَّامِ لِلْفَائِتَةِ) الْمَفْرُوضَةِ أَوْ النَّافِلَةِ فِيهَا أَوْ فِي غَيْرِهَا وَالْمَنْذُورَةِ (وَالرَّاتِبَةِ وَالنَّافِلَةِ) تَعْمِيمٌ بَعْدَ تَخْصِيصٍ سَوَاءٌ ذَاتُ السَّبَبِ كَكُسُوفٍ وَاسْتِسْقَاءٍ وَغَيْرِهَا كَالضُّحَى وَالْعِيدِ وَنَحْوِهِمَا، وَالنَّافِلَةِ الْمُطْلَقَةِ (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٣/٥٣ — ابن حجر الهيتمي (ت ٩٧٤)
(وَالْأَظْهَرُ أَنَّهُ يُكَبِّرُ فِي هَذِهِ الْأَيَّامِ لِلْفَائِتَةِ) فِيهَا أَوْ فِي غَيْرِهَا (وَالرَّاتِبَةِ) وَمِنْهَا صَلَاةُ الْعِيدِ. (وَالنَّافِلَةِ) الْمُطْلَقَةِ لِأَنَّهُ شِعَارُ الْوَقْتِ، وَالثَّانِي لَا وَإِنَّمَا هُوَ شِعَارٌ بِالنِّسْبَةِ إلَى الْفَرَائِضِ الْمُؤَدَّاةِ. (حاشيتا قليوبي وعميرة ١/٣٥٨ — القليوبي (ت ١٠٦٩)

