ACJU/FTW/2021/018-433
18.08.2021 (08.01.1443)
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
நோன்புகளைப் பொறுத்தவரையில் பர்ழான நோன்பு, கழா நோன்பு, நேர்ச்சை நோன்பு, குற்றப்பரிகாரத்துக்குரிய (கப்பாரா) நோன்பு, சுன்னத்தான நோன்பு என பல வகைப்படுகின்றன. அவற்றில் சுன்னத்தான நோன்புகள் இரண்டு வகைப்படும்.
1. கால நேரம் குறிப்பிடப்படாத பொதுவான சுன்னத்தான நோன்புகள்
2. காலம் நேரம் குறிப்பிடப்பட்டு ஹதீஸ்களில் வந்துள்ள சுன்னத்தான நோன்புகள் : அரபா தின நோன்பு, ஷவ்வால் மாதம் நோற்கப்படும் ஆறு நோன்புகள், துல் ஹிஜ்ஜஹ் மாத ஆரம்ப எட்டு நாட்களுடைய நோன்புகள், திங்கள் வியாழனுடைய நோன்புகள், ஒவ்வொரு மாத மூன்று நாட்களுடைய நோன்புகள் மற்றும் ஒருநாள் விட்டு ஒருநாள் நோற்கப்படுகின்ற நோன்பு போன்றவையாகும்.
மேற்கூறப்பட்ட நோன்புடைய வகைகளில் கால நேரம் குறிப்பிடப்படாத பொதுவான சுன்னத்தான நோன்புகளை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய தினங்களில் ஏதாவது ஒரு தினத்தில் மாத்திரம் நோற்பது மக்ரூஹ் ஆகும் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவ்வாறு அந்நாட்களில் ஒருவர் நோன்பு நோற்பதாயின் அதற்கு முந்திய தினத்துடன் அல்லது அதற்குப் பிந்திய தினத்துடன் சேர்த்து நோற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளனர்.1
இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَخْتَصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي، وَلَا تَخُصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الْأَيَّامِ، إِلَّا أَنْ يَكُونَ فِي صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ» (صحيح مسلم – 1144)
‘இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக் கிழமையாக அமைந்து விட்டால் தவிர’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : ஸஹீஹு முஸ்லிம்)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ السُّلَمِيِّ، عَنْ أُخْتِهِ، – وَقَالَ يَزِيدُ: الصَّمَّاءِ – أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَصُومُوا يَوْمَ السَّبْتِ إِلَّا فِي مَا افْتُرِضَ عَلَيْكُمْ، وَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا لِحَاءَ عِنَبَةٍ، أَوْ عُودَ شَجَرَةٍ فَلْيَمْضَغْهُ. (سنن أبي داود: 2421)
‘உங்கள் மீது கடமையாக்கப்பட்டவற்றைத் தவிர (வேறு எந்த நோன்பையும்) சனிக்கிழமையில் நோற்காதீர்கள். (அவ்வாறு நோன்பு நோற்று) உங்களில் ஒருவர் திராட்சையின் தோல் அல்லது ஒரு மரத்தின் குச்சியைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாவிட்டால் அதையாவது மென்று கொள்ளட்டும்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் புஸ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூ தாவூத் : 2421)
ஏனைய வகை நோன்புகளைப் பொறுத்தவரையில் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை தினத்தில் மாத்திரம் நோற்கவேண்டி ஏற்பட்டாலும் அவற்றை நோற்றுக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. அவை ஹதீஸ்களில் தடைசெய்யப்பட்டுள்ள வகையில் சேரமாட்டாது.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் – ஃபத்வா பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
———-
[1] (وَيُكْرَهُ إفْرَادُ الْجُمُعَةِ) بِالصَّوْمِ لِخَبَرِ الصَّحِيحَيْنِ بِالنَّهْيِ عَنْهُ إلَّا أَنْ يَصُومَ يَوْمًا قَبْلَهُ أَوْ يَوْمًا بَعْدَهُ وَعِلَّتُهُ الضَّعْفُ بِهِ عَمَّا يَتَمَيَّزُ بِهِ مِنْ الْعِبَادَاتِ الْكَثِيرَةِ الْفَاضِلَةِ مَعَ كَوْنِهِ يَوْمَ عِيدٍ وَلِلنَّظَرِ إلَى الضَّعْفِ فَقَطْ قَالَ جَمْعٌ وَنُقِلَ عَنْ النَّصِّ أَنَّهُ لَا يُكْرَهُ لِمَنْ لَا يَضْعُفُ بِهِ عَنْ شَيْءٍ مِنْ وَظَائِفِهِ لَكِنْ يَرُدُّهُ مَا مَرَّ مِنْ نَدْبِ فِطْرِ عَرَفَةَ وَلَوْ لِمَنْ لَمْ يَضْعُفْ بِهِ وَيُوَجَّهُ بِأَنَّ مِنْ شَأْنِ الصَّوْمِ الضَّعْفَ وَإِنَّمَا زَالَتْ الْكَرَاهَةُ بِضَمِّ غَيْرِهِ إلَيْهِ كَمَا صَحَّ بِهِ الْخَبَرُ وَبِصَوْمِهِ إذَا وَافَقَ عَادَةً أَوْ نَذْرًا أَوْ قَضَاءً كَمَا صَحَّ بِهِ الْخَبَرُ فِي الْعَادَةِ هُنَا وَفِي الْفَرْضِ فِي السَّبْتِ؛ لِأَنَّ صَوْمَ الْمَضْمُومِ إلَيْهِ وَفَضْلَ مَا يَقَعُ فِيهِ يُجْبِرُ مَا فَاتَ مِنْهُ وَلَوْ أَرَادَ اعْتِكَافَهُ سُنَّ صَوْمُهُ عَلَى أَحَدِ احْتِمَالَيْنِ حَكَاهُمَا الْمُصَنِّفُ خُرُوجًا مِنْ خِلَافِ مَنْ أَبْطَلَ اعْتِكَافَ الْمُفْطِرِ وَقَوْلُ الْأَذْرَعِيِّ يُكْرَهُ تَخْصِيصُهُ بِالِاعْتِكَافِ كَالصَّوْمِ وَصَلَاةِ لَيْلَتِهِ بِتَسْلِيمِهِ لَا يُرَدُّ؛ لِأَنَّ كُلًّا مِنَّا فِي غَيْرِ التَّخْصِيصِ )تحفة المحتاج – بَابُ صَوْمِ التَّطَوُّعِ – كتاب الصيام)