Researched Fatwa
தாயின் வயிற்றில் மரணித்த சிசு மற்றும் பிறந்த பின்னர் மரணித்த குழந்தைக்கு ஜனாஸாத் தொழுகை நடாத்துவது தொடர்பான மார்க்க விளக்கம்
Question
Fatwa
ACJU/FTW/2023/014-494
2023.05.04 (1444.10.13)
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டி, கபன் செய்து, தொழுகை நடாத்தி முஸ்லிம்களது மையவாடியில் நல்லடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீது பர்ளு கிபாயாவாகும்.1 இக்கடமைகளில் ஏதேனும் ஒன்று விடுபடுமானால் அவர்கள் அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாவார்கள்.
1. அந்த வகையில் ஒரு குழந்தை உயிருடன் பிறந்து (அது சத்தமிட்ட நிலையில் அல்லது அதன் உறுப்புக்கள் அசைந்த நிலையில்) மரணித்தால், அக்குழந்தைக்கு பெயர் சூட்டுவது முஸ்தஹப்பாகும்.2 அத்துடன் அந்த ஜனாஸாவுக்கு ஏனைய ஜனாஸாவுக்குரிய கடமைகளைப் போன்று குளிப்பாட்டுதல், கபனிடுதல், தொழுகை நடாத்துதல் மற்றும் அடக்கம் செய்தல் ஆகியவற்றை நிறைவேற்றுவது கடமையாகும்.
சிசு (விழுகட்டி பிறந்ததன் பின்னர்) சத்தமிட்டால் அல்லது அழுதால் அதற்கு பெரிய ஒருவரின் ஜனாஸாவுக்குரிய கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும். (துஹ்பத்துல் முஹ்தாஜ்)3
2. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் மரணித்த நிலையில் மனித தோற்றத்துடன் பிறந்து, அதற்கு ஆறு மாதங்களைத் தாண்டியிருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், குளிப்பாட்டுதல், கபனிடுதல் மற்றும் அடக்கம் செய்தல் ஆகிய மூன்று காரியங்களையும் நிறைவேற்றல் வேண்டும்4 எனவும் அதற்கு தொழுகை நடாத்தக் கூடாது எனவும் இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைத்தமீ, ஷைகுல் இஸ்லாம் ஸகரிய்யா அல்-அன்ஸாரி மற்றும் அஷ்-ஷெய்க் ஸியாதி ரஹிமஹுமுல்லாஹ் போன்ற ஷாபிஈ மத்ஹபின் மிக முக்கிய இமாம்கள் குறிப்பிடுகின்றார்கள். இக்கருத்தே ஏற்றமானது என இமாம் கல்யூபீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.5
எனினும், இக்குழந்தைக்கு மனித தோற்றம் இருந்து ஆறு மாதங்களை அடைந்திருந்தால் அதற்கு உயிருடன் பிறந்து மரணித்த குழந்தையின் சட்டத்தைப் போன்று குளிப்பாட்டுதல், கபனிடுதல், தொழுகை நடாத்துதல் மற்றும் அடக்கம் செய்தல் ஆகிய அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும் என இமாம் ஷிஹாபுத்தீன் ரம்லீ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அவர்களின் மகனான ஷம்ஷுத்தீன் ரம்லீ ரஹிமஹுல்லாஹ் மற்றும் இமாம் கதீப் ஷிர்பீனீ ரஹிமஹுல்லாஹ் போன்றோர் குறிப்பிடுகின்றார்கள்.6
3. மனித தோற்றம் இல்லாத ஒரு சிசுவாக இருப்பின் அதற்கு தொழுகை நடாத்துவது கூடாது என்றும், அதனை ஒரு துணியினால் சுற்றி அடக்கம் செய்வது சுன்னத் என்றும் மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.7
எனவே, மேற்குறிப்பிட்ட அடிப்படையில் ஒரு குழந்தை உயிருடன் பிறந்து மரணிக்குமாயின் அதற்கு ஜனாஸாவுக்குரிய அனைத்து கடமைகளையும் நிறைவேற்றல் வேண்டும்.
நான்கு மாதங்களை அடைவதற்கு முன் கருச்சிதைவு ஏற்பட்டிருப்பின் அதற்கு ஜனாஸாவுக்குரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. எனினும் அதனை ஒரு துணியினால் சுற்றி அடக்கம் செய்வது சுன்னத்தாகும்.
நான்கு மாதங்களை தாண்டிய பின்பு உயிரற்ற நிலையில் குழந்தை பிறக்குமாயின் அதற்கு ஜனாஸாவுக்குரிய கடமைகளில் தொழுகையைத் தவிர ஏனைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
ஆறு மாதங்களை அடைந்த பின்பு உயிரற்ற நிலையில் குழந்தை பிறக்குமாயின் அக்குழந்தைக்கு ஜனாஸாவுக்குரிய கடமைகளில் தொழுகை நடாத்துவது கூடாது; ஏனையவைகளை நிறைவேற்றல் வேண்டும் என்று ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த சில மார்க்க அறிஞர்களும் மற்றும் சிலர் ஏனைய கடமைகளுடன் தொழுகையையும் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறுகின்றனர்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
——————–
[1] (وغُسْلُهُ) أيْ المُسْلِمِ غَيْرِ الشَّهِيدِ (وتَكْفِينُهُ والصَّلاةُ عَلَيْهِ) ……..(ودَفْنُهُ) وما أُلْحِقَ بِهِ كَإلْقائِهِ فِي البَحْرِ وبِناءِ دَكَّةٍ عَلَيْهِ عَلى وجْهِ الأرْضِ بِشَرْطِهِما الآتِي (فُرُوضُ كِفايَةٍ) إجْماعًا عَلى كُلِّ مَن عَلِمَ بِمَوْتِهِ أوْ قَصَّرَ (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٣/٩٨ — ابن حجر الهيتمي (ت ٩٧٤) [كتاب الجنائز)
[2] (و أَنْ (يُسَمَّى فِيهِ) لِلْخَبَرِ الصَّحِيحِ بِهِمَا وَإِنْ مَاتَ قَبْلَهُ بَلْ تُسَنُّ تَسْمِيَةُ سَقْطٍ نُفِخَتْ فِيهِ الرُّوحُ فَإِنْ لَمْ يُعْلَمْ أَذَكَرٌ أَوْ أُنْثَى سُمِّيَ بِمَا يَصْلُحُ لَهُمَا كَهِنْدٍ وَطَلْحَةَ وَوَرَدَتْ أَخْبَارٌ صَحِيحَةٌ بِتَسْمِيَتِهِ يَوْمَ الْوِلَادَةِ وَحَمَلَهَا الْبُخَارِيُّ عَلَى مَنْ لَمْ يُرِدْ الْعَقَّ يَوْمَ السَّابِعِ وَظَاهِرُ كَلَامِ أَئِمَّتِنَا نَدْبُهَا يَوْمَهُ وَإِنْ لَمْ يُرِدْ الْعَقَّ وَكَأَنَّهُمْ رَأَوْا أَنَّ إخْبَارَهُ صَحَّ وَفِيهِ مَا فِيهِ (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي, باب في العقيقة)
[3] (والسِّقْطُ) بِتَثْلِيثِ أوَّلِهِ مِن السُّقُوطِ (إنْ) عُلِمَتْ حَياتُهُ كَأنْ (اسْتَهَلَّ) مِن أهَلَّ: رَفَعَ صَوْتَهُ (أوْ بَكى) بَعْدَ انْفِصالِه…. (كَكَبِيرٍ) لِلْخَبَرِ الصَّحِيحِ عَلى كَلامٍ فِيهِ «إذا اسْتَهَلَّ الصَّبِيُّ ورِثَ وصُلِّيَ عَلَيْهِ» ( تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٣/١٦٢ — ابن حجر الهيتمي (ت ٩٧٤) [كتاب الجنائز]←[فصل في الصلاة علي الميت)
[4] (وإنْ لَمْ تَظْهَرْ) أمارَةُ الحَياةِ (ولَمْ يَبْلُغْ أرْبَعَةَ أشْهُرٍ) أيْ مِائَةً وعِشْرِينَ يَوْمًا حَدُّ نَفْخِ الرُّوحِ (لَمْ يُصَلِّ عَلَيْهِ) قَطْعًا لِعَدَمِ الأمارَةِ (وكَذا إنْ بَلَغَها) أيْ الأرْبَعَةَ الأشْهُرَ الَّتِي هِيَ مِائَةٌ وعِشْرُونَ يَوْمًا لا يُصَلّى عَلَيْهِ وُجُوبًا ولا جَوازًا (فِي الأظْهَرِ) لِعَدَمِ ظُهُورِ حَياتِهِ فَيَجِبُ غُسْلُهُ وتَكْفِينُهُ ودَفْنُهُ.. نهاية المحتاج إلى شرح المنهاج ٢/٤٩٥ — الرملي، شمس الدين (ت ١٠٠٤) [كتاب الجنائز]←[فصل في الصلاة على الميت المسلم غير الشهيد]←[حكم الصلاة على السقط)
وزَعْمُ أنَّ النّازِلَ بَعْدَ تَمامِ أشْهُرِهِ لا يُسَمّى سِقْطًا لا يُجْدِي لِأنَّهُ بِتَسْلِيمِهِ يَتَعَيَّنُ حَمْلُهُ عَلى أنَّهُ لا يُسَمّاهُ لُغَةً إذْ كَلامُهُمْ هُنا مُصَرِّحٌ كَما عَلِمْت بِأنَّهُ لا فَرْقَ فِي التَّفْصِيلِ الَّذِي قالُوهُ بَيْنَ ذِي التِّسْعَةِ وغَيْرِهِ ثُمَّ رَأيْت عِبارَةَ أئِمَّةِ اللُّغَةِ وهِيَ السِّقْطُ الَّذِي يَسْقُطُ مِن بَطْنِ أُمِّهِ قَبْلَ تَمامِهِ وهِيَ مُحْتَمَلَةٌ لَأنْ يُرِيدُوا قَبْلَ تَمامِ خَلْقِهِ بِأنْ يَكُونَ قَبْلَ التَّصْوِيرِ أوْ قَبْلَ نَفْخِ الرُّوحِ فِيهِ أوْ قَبْلَ تَمامِ مُدَّتِهِ. وحِينَئِذٍ يُحْتَمَلُ أنَّ المُرادَ بِمُدَّتِهِ أقَلُّ مُدَّةِ الحَمْلِ أوْ غالِبُها أوْ أكْثَرُها وحِينَئِذٍ فَلا دَلالَةَ فِي عِبارَتِهِمْ هَذِهِ بِوَجْهٍ ثُمَّ رَأيْت شَيْخَنا أفْتى بِما ذَكَرْته ….. ( تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٣/١٦٣ — ابن حجر الهيتمي (ت ٩٧٤) [كتاب الجنائز]←[فصل في الصلاة علي الميت)
[5] (والسَّقْطُ) بِتَثْلِيثِ السِّينِ (إنْ اسْتَهَلَّ) أيْ صاحَ (أوْ بَكى) ثُمَّ ماتَ (كَكَبِيرٍ)… (وإلّا) …..(فَإنْ ظَهَرَتْ أمارَةُ الحَياةِ كاخْتِلاجٍ) أوْ تَحَرُّكٍ (صَلّى عَلَيْهِ فِي الأظْهَرِ)…(وإنْ لَمْ تَظْهَرْ) أمارَةُ الحَياةِ (ولَمْ يَبْلُغْ أرْبَعَةَ أشْهُرٍ) حَدُّ نَفْخِ الرُّوحِ فِيهِ (لَمْ يُصَلَّ عَلَيْهِ) لِعَدَمِ إمْكانِ حَياتِهِ. (وكَذا إنْ بَلَغَها) فَصاعِدًا لا يُصَلّى عَلَيْهِ. (فِي الأظْهَرِ)
قَوْلُهُ: (فَصاعِدًا) ظاهِرُهُ وإنْ بَلَغَ سِتَّةَ أشْهُرٍ وهُوَ ما قالَهُ ابْنُ حَجَرٍ وشَيْخُ الإسْلامِ وشَيْخُنا الزِّيادِيُّ وغَيْرُهُمْ، وهُوَ الوَجْهُ الَّذِي لا يُتَّجَهُ غَيْرُهُ، وخالَفَ شَيْخُنا الرَّمْلِيُّ فَجَعَلَ مَن بَلَغَ سِتَّةَ أشْهُرٍ كَكَبِيرٍ وإنْ لَمْ يَظْهَرْ خَلْقُهُ، ونَقَلَهُ شَيْخُنا فِي حاشِيَتِهِ ولَمْ يَعْتَمِدْهُ . (حاشيتا قليوبي وعميرة ١/٣٩٥ — القليوبي (ت ١٠٦٩) [كتاب الجنائز]←[فصل أركان صلاة الجنازة]←[فرع الولي أولى بإمامة الصلاة على الميت من الوالي)
[6] (والسَّقْطُ) بِتَثْلِيثِ السِّينِ مِن السُّقُوطِ وهُوَ كَما عَرَّفَهُ أئِمَّةُ اللُّغَةِ الوَلَدُ النّازِلُ قَبْلَ تَمامِ أشْهُرِهِ، وبِهِ يُعْلَمُ أنَّ الوَلَدَ النّازِلَ بَعْدَ تَمامِ أشْهُرِهِ وهُوَ سِتَّةُ أشْهُرٍ يَجِبُ فِيهِ ما يَجِبُ فِي الكَبِيرِ مِن صَلاةٍ وغَيْرِها، وإنْ نَزَلَ مَيِّتًا ولَمْ يُعْلَمْ لَهُ سَبْقُ حَياةٍ إذْ هُوَ خارِجٌ مِن كَلامِ المُصَنِّفِ كَغَيْرِهِ. (نهاية المحتاج إلى شرح المنهاج ٢/٤٩٥ — الرملي، شمس الدين (ت ١٠٠٤) [كتاب الجنائز]←[فصل في الصلاة على الميت المسلم غير الشهيد]←[حكم الصلاة على السقط)
والسِّقْطُ مُشْتَقٌّ مِن السُّقُوطِ وهُوَ النّازِلُ قَبْلَ تَمامِ أشْهُرٍ، فَإنْ بَلَغَها فَكالكَبِيرِ كَما أفْتى بِهِ بَعْضُ المُتَأخِّرِينَ، قَوْلُهُ: (فَإنْ بَلَغَها فَكالكَبِيرِ) وإنْ لَمْ تُعْلَمْ حَياتُهُ ولَمْ يَظْهَرْ خَلْقُهُ كَما اعْتَمَدَهُ م ر، وعِبارَتُهُ: وبِهِ يُعْلَمُ أنَّ الوَلَدَ النّازِلَ بَعْدَ تَمامِ أشْهُرِهِ وهُوَ سِتَّةُ أشْهُرٍ يَجِبُ فِيهِ ما يَجِبُ فِي الكَبِيرِ مِن صَلاةٍ وغَيْرِها وإنْ نَزَلَ مَيِّتًا ولَمْ يُعْلَمْ لَهُ سَبْقُ حَياةٍ إذْ هُوَ خارِجٌ مِن كَلامِ المُصَنِّفِ كَما أفْتى بِهِ الوالِدُ، ) حاشية البجيرمي على الإقناع للخطيب = تحفة الحبيب على شرح الخطيب ٢/٢٨٢ — البجيرمي (ت ١٢٢١) [كتاب الصلاة]←[فصل في الجنازة]
[7] (وإنْ لَمْ تَظْهَرْ) أمارَةُ الحَياةِ (ولَمْ يَبْلُغْ أرْبَعَةَ أشْهُرٍ) حَدَّ نَفْخِ الرُّوحِ فِيهِ (لَمْ يُصَلَّ عَلَيْهِ) أيْ لَمْ تَجُزْ الصَّلاةُ عَلَيْهِ لِأنَّهُ جَمادٌ ومِن ثَمَّ لَمْ يُغَسَّلْ (وكَذا إنْ بَلَغَها) وأكْثَرَ مِنها…… ويُغَسَّلُ ويُكَفَّنُ ويُدْفَنُ قَطْعًا إنْ ظَهَرَتْ خِلْقَةُ آدَمِيٍّ والأ سَنُّ سَتْرُهُ بِخِرْقَةٍ ودَفْنُهُ …وأفْهَمَتْ تَسْوِيَةُ المَتْنِ بَيْنَ الأرْبَعَةِ وما دُونَها أنَّهُ لا عِبْرَةَ بِها بَلْ بِما تَقَرَّرَ مِن ظُهُورِ خَلْقِ الآدَمِيِّ وغَيْرِهِ ولَمْ يُبَيِّنْ ما بِهِ الِاعْتِبارُ نَظَرًا لِلْغالِبِ مِن ظُهُورِ الخَلْقِ عِنْدَها وعَدَمِهِ قَبْلَها. (قَوْلُهُ: والأ سَنُّ سَتْرُهُ بِخِرْقَةٍ ودَفْنُهُ) أيْ دُونَ غَيْرِهِما ….. ( تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٣/١٦٣ — ابن حجر الهيتمي (ت ٩٧٤) [كتاب الجنائز]←[فصل في الصلاة علي الميت)

