இமாம் ஒரு கட்டிடத்திலிருக்க, மஃமூம்கள் மற்றொரு கட்டிடத்திலிருந்து இமாமைப் பின்தொடர்ந்து தொழுவது தொடர்பான மார்க்க விளக்கம்.

FATWA # ACJU/FTW/2019/26-377

Question

மஸ்ஜிதில் உள்ள மேல் மாடி மற்றும் தூண்கள் காரணமாக ஸப்புகளுக்கிடையில் தொடர்பற்ற நிலை காணப்படுகிறது. இதனால் பின்தொடர்ந்து தொழுபவர்கள் இமாமை பார்க்க முடியாத நிலை காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இமாமை பின்தொடர்ந்து தொழ முடியுமா?

Fatwa

ACJU/FTW/2023/39-519 ORG-01
2023.12.18 (1445.06.03)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு!

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

1.1. மஸ்ஜிதின் ஸப்புகளுக்கிடையில் தூண்கள் அமைந்துள்ளதால் பெரும்பாலான ஸப்புகளுக்கிடையில் இடைவெளி ஏற்பட்டு ஸப்புகளில் உடைவுகள் காணப்படுகின்றன. இதனால் ஜமாஅத்துடைய சிறப்புக் கிடைக்குமா?

உங்களுடைய மஸ்ஜிதைப் பொருத்தவரையில் பல கட்டிடங்களை ஒன்றாக இணைத்து மஸ்ஜித் அமைக்கப்பட்டிருப்பதால் அதில் ஸப்புகளுக்கிடையில் அதிகமான தூண்கள் குறுக்கிடுகின்றன. அத்தூண்களை அகற்றுவதும் அவை குறுக்கிடாதவாறு ஸப்புகளை அமைத்துக் கொள்வதும் சிரமமாக இருப்பதனால் அவற்றுக்கிடையில் தொழுது கொள்வதற்கு முடியும். அதன்மூலம் ஜமாஅத்துடைய சிறப்பு தப்பிப்போக மாட்டாது.

தூண்கள் குறுக்கிடும் ஸப்புகளில் மஃமூம்கள் (இமாம்களைப் பின்தொடர்பவர்கள்) தொழுவது சம்பந்தமான மார்க்க விளக்கத்தைப் பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
https://www.acju.lk/ta/ftw-pllr-slf-swf-17/


2.1. மஸ்ஜிதின் ஒரு பகுதி அதன் மற்றைய பகுதியைவிட சற்று உயரமாக இருப்பதால் ஒவ்வொரு ஸப்பினதும் ஒரு பகுதி மற்ற பகுதியை விட சற்று உயரமாக உள்ளது. இரு பகுதிகளும் இணையும் இடத்தில் நின்று தொழ முடியாத நிலை உருவாகின்றது. இதனால் ஸப்புகளில் பெரும் இடைவெளிகள் காணப்படுகின்றன. இதனால் ஜமாஅத்துடைய சிறப்புக் கிடைக்குமா?

நீங்கள் குறிப்பிடும் தகுந்த காரணங்களினால் ஸப்புகளில் நிற்க முடியாத நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு நிற்க முடியாத இடத்தை இடைவெளியாக விட்டுவிட்டு, சேர்ந்து நிற்க முடியுமான பகுதிகளில் இடைவிடாது நெறுக்கமாக நிற்க வேண்டும். இவ்வாறு தொழுவதன் மூலம் ஜமாஅத்துடைய சிறப்பு தப்பிப் போகமாட்டாது.1

அத்துடன் ஸப்புகளில் இடைவிடாது நிற்பதற்கான கட்டிட ரீதியான சில ஆலோசனைகளை நாம் நேரடியாக விஜயம் செய்தபோது கூறினோம். அவற்றையும் கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

2.2. பிரதான மஸ்ஜிதின் ஒரு பகுதியை குளிரூட்டுவதற்காக கண்ணாடித் தடையினால் முழுமையாக மூடப்பட்டிருந்தாலும் அதன் கண்ணாடிக் கதவு அடிக்கடி திறந்து மூடப்பட்டு இரு பகுதிகளுக்குமிடையில் நேரடித் தொடர்பில்லாமை போன்று காணப்படுகின்றது. இதனால் கண்ணாடிக் கதவுக்கு வெளிப் பகுதியிலிருந்து இமாமைப் பின்தொடர முடியுமா?

நீங்கள் குறிப்பிடும் மஸ்ஜிதின் இப்பகுதி வக்ஃப் செய்யப்பட்டிருப்பதாலும் வக்ஃப் செய்யப்பட்ட ஒரு பகுதியை கண்ணாடிக் கதவின் மூலமாக மூடப்பட்டிருப்பது நிரந்தரமாக மூடப்படாமல் திறந்து சென்று வருவதற்கு முடியுமாக இருப்பதனாலும் கண்ணாடிக் கதவுக்கு வெளியிலிருந்து இமாமைப் பின்தொடர்ந்து தொழுவதற்கு முடியும்.2

2.3. மஸ்ஜிதின் 1ஆம் மாடியுடன் 2ஆம், 3ஆம் மாடிகளும் தொழுகைக்காக பயன்படுத்தப்படுவதோடு மாடிகளுக்கிடையில் படிகளால் மட்டுமே தொடர்புள்ளது. 1ஆம் மாடியில் உள்ள இமாமைப் பின்தொடர இது போதுமாகுமா?

மஸ்ஜிதின் 1ஆம் மாடியிலுள்ள இமாமை 2ஆம், 3ஆம் மாடிகளில் இருப்பவர்கள் பின்தொடர்ந்து தொழுவதாயின் அனைத்து மாடிகளும் மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப்பட்டிருந்தால் இமாமுடைய செயற்பாடுகளை பார்ப்பதன் மூலமாகவோ அல்லது செவிமடுப்பதன் மூலமாகவோ அறிந்திருப்பதும்,3 இமாம் இருக்கும் மாடியிலிருந்து அவரை பின்தொடரக் கூடியவர் இருக்கும் மாடிக்கு மஸ்ஜிதின் உட்பகுதியிலிருந்து சென்று வருவதற்கு முடியுமான முறையில் வழிகள் ஏதும் இருப்பதும் நிபந்தனையாகும் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.4

எனினும், நீங்கள் குறிப்பிடும் மாடிகள் மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப்படாமல் இருந்து அப்பகுதியிலிருந்து இமாமை பின்தொடர்வதாயின் இமாமை அல்லது அவரைப் பின்தொடரும் ஒருவரை பார்த்தல், இவர்கள் இருவருக்குமிடையில் முந்நூறு (300) முழத்தை விட குறைந்த இடைவெளி காணப்படுதல் மற்றும் இமாம் இருக்கும் இடத்திற்கு கிப்லாத் திசையை பின்நோக்காமல் செல்வதற்கு முடியுமாக இருத்தல் ஆகிய மூன்று நிபந்தனைகளும் இருப்பது அவசியமாகும்.

இந்நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் மஸ்ஜிதின் எப்பகுதியிலிருந்தும் இமாமைப் பின்தொடர முடியும்.5

2.3. முதலாவது மாடியில் மஸ்ஜிதுடைய நலனுக்காக வக்ஃப் செய்யப்பட்ட பகுதியில் பெண்கள் இமாமைப் பின்தொடர்ந்து தொழுகின்றனர். அவர்களுக்கு இமாமை அல்லது இமாமைப் பின்தொடர்பவரை பார்க்க முடியாத நிலை காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இமாமைப் பின்தொடர்ந்து தொழ முடியுமா?

உங்களது மஸ்ஜிதுடைய முதலாவது மாடியில் இமாம் இருக்கும் பகுதி மஸ்ஜிதாகவும் பெண்கள் தொழும் பகுதி மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப்படாமலும் இருப்பதுடன் பெண்கள் இமாமைப் பின்தொடர்ந்து தொழும் போது அப்பகுதியின் கதவு மூடப்படும் வழமையும் உள்ளது. இவ்வாறு இமாமைப் பின்தொடர்ந்து தொழுவதற்கு முடியாது. ஏனெனில், மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப்படாத பகுதியிலிருந்து இமாமை பின்தொடர்வதாயின் இமாமை அல்லது அவரைப் பின்தொடரும் ஒருவரை பார்த்தல், இவர்கள் இருவருக்குமிடையில் முந்நூறு (300) முழத்தை விட குறைந்த இடைவெளி காணப்படுதல் மற்றும் இமாம் இருக்கும் இடத்திற்கு கிப்லாத் திசையை பின்நோக்காமல் செல்வதற்கு முடியுமாக இருத்தல் ஆகிய மூன்று நிபந்தனைகளும் இருப்பது அவசியமாகும்.6 எனவே, இந்நிபந்தனைகளைப் பேணி இமாமைப் பின்பற்றித் தொழுதல் வேண்டும்.

அல்லது உங்களது மஸ்ஜிதில் இமாம் இருக்கும் மாடியில் மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப்பட்டிருக்கும் பகுதியுடன் சேர்ந்திருக்கும் பெண்கள் தொழும் பகுதியின் முன்பகுதியை மஸ்ஜிதாக வக்ப் செய்து கொள்ளல் வேண்டும்.7 இம்முறையை நாம் உங்களது மஸ்ஜிதுக்கு நேரடியாக விஜயம் செய்தபோது உங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்!

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர், ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


[1] (سُئِلَ) هَلْ يُكْرَهُ لِلْإِنْسَانِ أَنْ يُصَلِّيَ بَيْنَ عَمُودَيْنِ مِنْ أَعْمِدَةِ الْمَسْجِدِ أَحَدُهُمَا عَنْ يَمِينِهِ وَالْآخَرُ عَنْ يَسَارِهِ سَوَاءٌ كَانَ إمَامًا أَوْ مَأْمُومًا أَوْ مُنْفَرِدًا أَمْ لَا؟ (فَأَجَابَ) بِأَنَّهُ لَا تُكْرَهُ الصَّلَاةُ الْمَذْكُورَةُ سَوَاءٌ كَانَ الْمُصَلِّي مُنْفَرِدًا أَمْ إمَامًا وَكَذَا الْمَأْمُومُ إلَّا أَنْ يَكُونَ مُنْفَرِدًا عَنْ الصَّفِّ. )   فتاوى الرملي ١/‏٢٣٨ — شهاب الدين الرملي)

وَلَا يَمْنَعُ الصَّفَّ تَخَلُّلُ نَحْوِ مِنْبَرٍ.

(قَوْلُهُ: وَلَا يَمْنَعُ الصَّفَّ تَخَلُّلُ نَحْوِ مِنْبَرٍ) أَيْ حَيْثُ كَانَ مَنْ بِجَانِبِ الْمِنْبَرِ مُحَاذِيًا لِمَنْ خَلْفَ الْإِمَامِ بِحَيْثُ لَوْ أُزِيلَ الْمِنْبَرُ وَقَفَ مَوْضِعَهُ شَخْصٌ مَثَلًا صَارَ الْكُلُّ صَفًّا وَاحِدًا. (نهاية المحتاج إلى شرح المنهاج ٢/‏١٩٠ — الرملي، شمس الدين)

قال الإمام النووي رحمه الله في شرح صحيح مسلم وفيه جواز الصلاة بحضرة الأساطين فأما الصلاة إليها فمستحبة لكن الأفضل أن لا يصمد إليها بل يجعلها عن يمينه أو شماله كما سبق وأما الصلاة بين الأساطين فلا كراهة فيها عندنا واختلف قول مالك في كراهتها إذا لم يكن عذر وسبب الكراهة عنده انه يقطع الصف.

ومعنى اتصالها أن يقف رجل أو صف في آخر البناء الذي فيه الإمام ورجل أو صف في أول البناء الذي فيه المأموم بحيث لا يكون بينهما أكثر من ثلاثة أذرع  والثلاث للتقريب  فلو زاد ما لا يتبين في الحس بلا ذرع لم يضر وهذا القدر هو المشروع بين الصفين. (روضة الطالبن – فرع إذا دخل رجل والجماعة في الصلاة كره أن يقف منفرد)

[2]  لِلْإِمَامِ وَالْمَأْمُومِ فِي الْمَكَانِ ثَلَاثَةُ أَحْوَالٍ (أَحَدُهَا) أَنْ يَكُونَا فِي مَسْجِدٍ فَيَصِحُّ الِاقْتِدَاءُ سَوَاءٌ قَرُبَتْ الْمَسَافَةُ بَيْنَهُمَا أَمْ بَعُدَتْ لِكِبَرِ الْمَسْجِدِ وَسَوَاءٌ اتَّحَدَ الْبِنَاءُ أَمْ اخْتَلَفَ كَصَحْنِ المسجد وصفته وَسِرْدَابٍ فِيهِ وَبِئْرٍ مَعَ سَطْحِهِ وَسَاحَتِهِ وَالْمَنَارَةِ الَّتِي هِيَ مِنْ الْمَسْجِدِ تَصِحُّ الصَّلَاةُ فِي كُلِّ هَذِهِ الصُّوَرِ وَمَا أَشْبَهَهَا إذَا عَلِمَ صَلَاةَ الْإِمَامِ وَلَمْ يَتَقَدَّمْ عَلَيْهِ سَوَاءٌ كَانَ أعلا مِنْهُ أَوْ أَسْفَلَ وَلَا خِلَافَ فِي هَذَا.  (المجموع شرح المهذب – ط المنيرية ٤/‏٣٠٢ — النووي (ت ٦٧٦)

[3] (وَيُشْتَرَطُ عِلْمُهُ) أَيْ الْمَأْمُومِ وَأَرَادَ بِالْعِلْمِ مَا يَشْمَلُ الظَّنَّ بِدَلِيلِ قَوْلِهِ أَوْ مُبَلِّغًا (بِانْتِقَالَاتِ الْإِمَامِ) لِيَتَمَكَّنَ مِنْ مُتَابَعَتِهِ (بِأَنْ) أَيْ كَأَنْ (يَرَاهُ أَوْ) يَرَى (بَعْضَ صَفٍّ) مِنْ الْمُقْتَدِينَ بِهِ أَوْ وَاحِدًا مِنْهُمْ، وَإِنْ لَمْ يَكُنْ فِي صَفٍّ (أَوْ يَسْمَعَهُ أَوْ) يَسْمَعَ (مُبَلِّغًا) بِشَرْطِ كَوْنِهِ ثِقَةً    (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٢/‏٣١٢ — ابن حجر الهيتمي (ت ٩٧٤)

[4] (وَإِذَا جَمَعَهُمَا مَسْجِدٌ) وَمِنْهُ جِدَارُهُ وَرَحْبَتُهُ وَهِيَ مَا حُجِرَ عَلَيْهِ لِأَجْلِهِ، وَإِنْ كَانَ بَيْنَهُمَا طَرِيقٌ مَا لَمْ يَتَيَقَّنْ حُدُوثَهَا بَعْدَهُ وَأَنَّهَا غَيْرُ مَسْجِدٍ، وَمَنَارَتُهُ الَّتِي بَابُهَا فِيهِ أَوْ فِي رَحْبَتِهِ لَا حَرِيمُهُ وَهُوَ مَا يُهَيَّأُ لِإِلْقَاءِ نَحْوِ قُمَامَتِهِ (صَحَّ الِاقْتِدَاءُ) إجْمَاعًا (وَإِنْ بَعُدَتْ الْمَسَافَةُ وَحَالَتْ الْأَبْنِيَةُ) الَّتِي فِيهِ الْمُتَنَافِذَةُ الْأَبْوَابِ إلَيْهِ… وَسَوَاءٌ أُغْلِقَتْ تِلْكَ الْأَبْوَابُ أَمْ لَا بِخِلَافِ مَا إذَا سُمِّرَتْ ….

(قَوْلُهُ: أُغْلِقَتْ تِلْكَ الْأَبْوَابُ) أَيْ، وَإِنْ ضَاعَ مِفْتَاحُ الْغَلَقِ؛ لِأَنَّهُ يُمْكِنُ فَتْحُهُ بِدُونِهِ وَمِنْ الْغَلَقِ الْقُفْلُ فَلَا يَضُرُّ، وَإِنْ ضَاعَ مِفْتَاحُهُ ظَاهِرُهُ أَكَانَ ذَلِكَ فِي الِابْتِدَاءِ أَوْ فِي الْأَثْنَاءِ   (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٢/‏٣١٨ — ابن حجر الهيتمي (ت ٩٧٤)

[5] (وَإِذَا جَمَعَهُمَا مَسْجِدٌ) وَمِنْهُ جِدَارُهُ وَرَحْبَتُهُ وَهِيَ مَا حُجِرَ عَلَيْهِ لِأَجْلِهِ، وَإِنْ كَانَ بَيْنَهُمَا طَرِيقٌ مَا لَمْ يَتَيَقَّنْ حُدُوثَهَا بَعْدَهُ وَأَنَّهَا غَيْرُ مَسْجِدٍ، وَمَنَارَتُهُ الَّتِي بَابُهَا فِيهِ أَوْ فِي رَحْبَتِهِ لَا حَرِيمُهُ وَهُوَ مَا يُهَيَّأُ لِإِلْقَاءِ نَحْوِ قُمَامَتِهِ (صَحَّ الِاقْتِدَاءُ) إجْمَاعًا (وَإِنْ بَعُدَتْ الْمَسَافَةُ وَحَالَتْ الْأَبْنِيَةُ) الَّتِي فِيهِ الْمُتَنَافِذَةُ الْأَبْوَابِ إلَيْهِ (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٢/‏٣١٣ — ابن حجر الهيتمي (ت ٩٧٤)

[6] وَكَذَا لَوْ وَقَفَ فِي دَارٍ مَمْلُوكَةٍ مُتَّصِلَةٍ بِالْمَسْجِدِ يُشْتَرَطُ الِاتِّصَالُ بِأَنْ يَقِفَ وَاحِدٌ فِي آخِرِ الْمَسْجِدِ مُتَّصِلٌ بِعَتَبَةِ الدَّارِ وَآخَرُ فِي الدَّارِ مُتَّصِلٌ بِالْعَتَبَةِ بِحَيْثُ لَا يَكُونُ بَيْنَهُمَا مَوْقِفُ رَجُلٍ هَذَا كَلَامُ الْبَغَوِيِّ وَهَذَا الَّذِي قَالَهُ فِي الْفَضَاءِ ضَعِيفٌ وَالصَّحِيحُ أَنَّهُ كَالْمَوَاتِ وَأَمَّا مَا ذَكَرَهُ فِي مَسْأَلَةِ الدَّارِ فَهُوَ تَفْرِيعٌ عَلَى طَرِيقَةِ الْقَفَّالِ وَقَالَ أَبُو عَلِيٍّ الطَّبَرِيُّ وَمُتَابِعُوهُ لَا يُشْتَرَطُ اتِّصَالُ الصُّفُوفِ إذَا لَمْ يَكُنْ حَائِلٌ بَلْ يَصِحُّ الِاقْتِدَاءُ إذَا لَمْ يزد ما بينهما علي ثلثمائة ذِرَاعٍ وَهَذَا هُوَ الصَّحِيحُ كَمَا سَبَقَ وَاَللَّهُ أَعْلَمُ.  (المجموع شرح المهذب – ط المنيرية ٤/‏٣٠٧ — النووي)

(فَإِنْ تَلَاحَقَ) أَيْ وَقَفَ خَلْفَ الْإِمَامِ (شَخْصَانِ أَوْ صَفَّانِ)….وَسَوَاءٌ) فِيمَا ذُكِرَ (الْفَضَاءُ الْمَمْلُوكُ، وَالْوَقْفُ)، وَالْمَوَاتُ (وَالْمُبَعَّضُ) الَّذِي بَعْضُهُ مِلْكٌ وَبَعْضُهُ وَقْفٌ وَمِثْلُهُ مَا بَعْضُهُ مِلْكٌ أَوْ وَقْفٌ وَبَعْضُهُ مَوَاتٌ سَوَاءٌ فِي ذَلِكَ الْمُسْقَفُ كُلُّهُ وَبَعْضُهُ وَقِيلَ يُشْتَرَطُ فِي الْمَمْلُوكِ الِاتِّصَالُ كَالْأَبْنِيَةِ….(فَطَرِيقَانِ أَصَحُّهُمَا…… (وَإِنْ كَانَ الْوَاقِفُ) خَلْفَ بِنَاءِ الْإِمَامِ فَالصَّحِيحُ صِحَّةُ الْقُدْوَةُ بِشَرْطِ أَنْ لَا يَكُونَ بَيْنَ الصَّفَّيْنِ الْمُصَلِّي أَحَدُهُمَا بِبِنَاءِ الْإِمَامِ، وَالْآخَرُ بِبِنَاءِ الْمَأْمُومِ أَيْ بَيْنَ آخِرِ وَاقِفٍ بِبِنَاءِ الْإِمَامِ وَأَوَّلِ وَاقِفٍ بِبِنَاءِ الْمَأْمُومِ (أَكْثَرُ مِنْ ثَلَاثَةِ أَذْرُعٍ) تَقْرِيبًا؛(وَالطَّرِيقُ الثَّانِي لَا يُشْتَرَطُ إلَّا الْقُرْبُ) فِي سَائِرِ الْأَحْوَالِ السَّابِقَةِ بِأَنْ لَا يَزِيدَ مَا بَيْنَهُمَا عَلَى ثَلَثِمِائَةِ ذِرَاعٍ (كَالْفَضَاءِ) أَيْ قِيَاسًا عَلَيْهِ؛ ….ٌ وَإِنَّمَا يَكْتَفِي بِالْقُرْبِ عَلَى هَذَا (إنْ لَمْ يَكُنْ حَائِلٌ) بِأَنْ كَانَ يَرَى الْإِمَامَ أَوْ بَعْضَ الْمُقْتَدِينَ بِهِ وَيُمْكِنُهُ الذَّهَابُ إلَيْهِ لَوْ أَرَادَهُ بِوُجُودِهِ مَعَ الِاسْتِقْبَالِ مِنْ غَيْرِ ازْوِرَارٍ وَلَا انْعِطَافٍ بِقَيْدِهِ الْآتِي فِي أَبِي قُبَيْسٍ   ….. (قُلْت الطَّرِيقُ الثَّانِي أَصَحُّ)؛ لِأَنَّ الْمُشَاهَدَةَ قَاضِيَةٌ بِأَنَّ الْعُرْفَ يُوَافِقُهَا     (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٢/‏٣١٦ — ابن حجر الهيتمي)

[7] لِلْإِمَامِ وَالْمَأْمُومِ فِي الْمَكَانِ ثَلَاثَةُ أَحْوَالٍ (أَحَدُهَا) أَنْ يَكُونَا فِي مَسْجِدٍ فَيَصِحُّ الِاقْتِدَاءُ سَوَاءٌ قَرُبَتْ الْمَسَافَةُ بَيْنَهُمَا أَمْ بَعُدَتْ لِكِبَرِ الْمَسْجِدِ وَسَوَاءٌ اتَّحَدَ الْبِنَاءُ أَمْ اخْتَلَفَ كَصَحْنِ المسجد وصفته وَسِرْدَابٍ فِيهِ وَبِئْرٍ مَعَ سَطْحِهِ وَسَاحَتِهِ وَالْمَنَارَةِ الَّتِي هِيَ مِنْ الْمَسْجِدِ تَصِحُّ الصَّلَاةُ فِي كُلِّ هَذِهِ الصُّوَرِ وَمَا أَشْبَهَهَا إذَا عَلِمَ صَلَاةَ الْإِمَامِ وَلَمْ يَتَقَدَّمْ عَلَيْهِ سَوَاءٌ كَانَ أعلا مِنْهُ أَوْ أَسْفَلَ وَلَا خِلَافَ فِي هَذَا     (المجموع شرح المهذب – ط المنيرية ٤/‏٣٠٢ — النووي (ت ٦٧٦)

(وَيُشْتَرَطُ عِلْمُهُ) أَيْ الْمَأْمُومِ وَأَرَادَ بِالْعِلْمِ مَا يَشْمَلُ الظَّنَّ بِدَلِيلِ قَوْلِهِ أَوْ مُبَلِّغًا (بِانْتِقَالَاتِ الْإِمَامِ) لِيَتَمَكَّنَ مِنْ مُتَابَعَتِهِ (بِأَنْ) أَيْ كَأَنْ (يَرَاهُ أَوْ) يَرَى (بَعْضَ صَفٍّ) مِنْ الْمُقْتَدِينَ بِهِ أَوْ وَاحِدًا مِنْهُمْ، وَإِنْ لَمْ يَكُنْ فِي صَفٍّ (أَوْ يَسْمَعَهُ أَوْ) يَسْمَعَ (مُبَلِّغًا) بِشَرْطِ كَوْنِهِ ثِقَةً    (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٢/‏٣١٢ — ابن حجر الهيتمي (ت ٩٧٤)