ரமழானுக்காக சேர்க்கப்படும் பணத்தை மஸ்ஜிதுனுடைய நிரந்தர வைப்பில் சேர்த்தல் தொடர்பான மார்க்க விளக்கம்

FATWA # ACJU/FTW/2019/26-377

Question

ரமழானுடைய கஞ்சி மற்றும் இதர தேவைகள் முடிவுற்றவுடன் மீதிப் பணத்தை மஸ்ஜிதுடைய வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தலாமா?

Fatwa

ACJU/FTW/2025/16-598
2025.07.21 (1447.01.25)

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு!

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒருவர் ஒரு பொருளை அல்லது பணத்தை ஒரு குறித்த தேவையை நிறைவேற்றுவதற்கென நன்கொடையாகக் கொடுத்தால் அந்நன்கொடையை குறித்த அத்தேவைக்கே பயன்படுத்த வேண்டும். அது தவிர்ந்த வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கு முடியாது.

அவ்வகையில், மஸ்ஜிதுடைய குறிப்பிட்ட ஒரு தேவைக்காக பணம் சேர்க்கப்பட்டால் அப்பணம் அத்தேவைக்கு மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.1

‘ரமழானில் காய்ச்சப்படும் கஞ்சி மற்றும் இதர தேவைகளுக்கு’ என பொதுமக்களிடமிருந்து பணம் சேர்க்கப்பட்டால், அதனை ரமழான் மாதத்தில் ஏற்படும் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

அவ்வாறே, தராவீஹ் மற்றும் ரமழானில் கடமை புரிந்தோருக்கான நன்கொடைகளையும் அப்பணத்திலிருந்து வழங்குவதற்கு முடியும்.

ரமழான் மாதத்தின் தேவைகள் அனைத்துக்கும் அப்பணம் செலவு செய்யப்பட்டு அதில் ஏதும் பணம் மீதமாக இருந்தால் அதனை உரியவர்களிடம் மீள் கையளிக்கப்படல் வேண்டும் அல்லது அவர்களது அனுமதியுடன் மஸ்ஜிதுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான்
பதில் செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

———————-

[1] (وَلَوْ أَعْطَاهُ دَرَاهِمَ وَقَالَ اشْتَرِ لَك) بِهَا (عِمَامَةً أَوْ اُدْخُلْ بِهَا الْحَمَّامَ) أَوْ نَحْوَ ذَلِكَ (تَعَيَّنَتْ) لِذَلِكَ مُرَاعَاةً لِغَرَضِ الدَّافِعِ هَذَا (إنْ قَصَدَ سَتْرَ رَأْسِهِ) بِالْعِمَامَةِ (وَتَنْظِيفَهُ) بِدُخُولِهِ الْحَمَّامَ لِمَا رَأَى بِهِ مِنْ كَشْفِ الرَّأْسِ وَشَعَثِ الْبَدَنِ وَوَسَخِهِ (وَإِلَّا) أَيْ وَإِنْ لَمْ يَقْصِدْ ذَلِكَ بِأَنْ قَالَهُ عَلَى سَبِيلِ التَّبَسُّطِ الْمُعْتَادِ(فَلَا) تَتَعَيَّنُ لِذَلِكَ بَلْ يَمْلِكُهَا أَوْ يَتَصَرَّفُ فِيهَا كَيْفَ شَاءَ.

وَالْحَاصِلُ أَنَّهُ يَمْلِكُهَا فِي الشِّقَّيْنِ لَكِنَّهُ فِي الْأَوَّلِ إنَّمَا يَتَصَرَّفُ فِيهَا فِي الْجِهَةِ الْمَأْذُونِ فِيهَا كَالْغَنِيِّ الْمُهْدَى إلَيْهِ مِنْ لَحْمِ الْأُضْحِيَّةَ وَهَذَا أَوْجَهُ مِنْ قَوْلِ السُّبْكِيّ الْوَجْهُ أَنَّهُ لَا يَمْلِكُهَا فِي الْأَوَّلِ قَبْلَ صَرْفِهَا فِيمَا عُيِّنَتْ لَهُ أَمَّا إذَا لَمْ يَقْصِدْ شَيْئًا فَظَاهِرٌ أَنَّهُ كَالشِّقِّ الْأَوَّلِ، وَإِنْ اقْتَضَى كَلَامُهُ أَنَّهُ كَالثَّانِي. “(أسنى المطالب فى شرح روض الطالب)