திருமண உடன்படிக்கை ‘பஸ்க்’ முறையில் முறிவதற்கான காரணிகள் தொடர்பான மார்க்க விளக்கம்.

FATWA # ACJU/FTW/2019/26-377

Question

ஒரு மனைவி பஸ்க் முறையில் விவாகரத்து பெற வேண்டுமானால், அதற்கான முக்கிய காரணங்கள் என்ன என்பதை எழுத்து மூலம் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Fatwa

ACJU/FTW/2026/33-650
2026.06.02 (1447.12.19)

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

கணவன் மனைவிக்கிடையில் பிணக்கு ஏற்படும் பொழுது அவர்களை சமாதானப்படுத்தி வைப்பதற்காக இரு தரப்பினர் சார்பாகவும் இரண்டு நபர்களை அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் இருவரும் அந்தக் கணவன் மனைவிக்கிடையில் உள்ள பிணக்கை நல்லுபதேசம் மற்றும் ஆலோசனை மூலம் தீர்த்து வைக்க முயற்சி செய்தல் வேண்டும்.

இதுபற்றி அல்லாஹு தஆலா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்:

وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِن يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا (4:35)

“(கணவன்- மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள். அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும்படி செய்துவிடுவான் – நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.” (சூரத்துன் நிஸா : 35)

மேலும், குடும்பப் பிரிவின் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றித் தெளிவுபடுத்தி அவ்விருவரும் சேர்ந்து வாழ்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு இரண்டு தரப்பினர் சார்பாகவும் சமாதானம் பேசுவதற்கு இரண்டு நபர்களை அனுப்புவது கட்டாயம் என அதிகமான மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.1

அவ்வாறு முயற்சி செய்தும் அவர்கள் இருவரும் பிரிவதில்தான் அவர்களுக்கு நலவு உள்ளது என்று சமாதானத்தில் ஈடுபடுவோர் கருதுவார்களாயின் அவர்கள் தலாக், பஸ்கு, குல்உ ஆகியவற்றில் மிகப் பொருத்தமான ஏதாவது ஒன்றின் மூலம் விவாக ஒப்பந்தத்தை முறிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

‘தலாக்’ என்பது குறிப்பிட்ட சில நிபந்தனைகள் அடங்கிய வார்த்தைகளைக் கூறி கணவன் மனைவியிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுக்கொள்வதாகும்.

‘குல்உ’ என்பது மனைவி, கணவனுடன் வாழ விரும்பாத பட்சத்தில், இருவரும் இணங்கும் தொகையை, மனைவி கணவருக்குக் கொடுத்து ‘தலாக்’ அல்லது ‘குல்உ’ வுடைய வார்த்தையின் மூலம் விவாகரத்தைப் பெற்றுக்கொள்வதாகும்.

இது தொடர்பான மேலதிக தெளிவை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்:
https://www.acju.lk/ta/ftw-kul-u-tlq-19/

‘பஸ்கு’ என்பது கணவன் அல்லது மனைவியிடத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில காரணங்களை அடிப்படையாக வைத்து காதி நீதிபதி இருவருக்கும் மத்தியில் பிரித்து வைப்பதாகும்.

‘பஸ்கு’ முறையில் விவாகரத்தைப் பெறுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:

01. கணவன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் அவளுக்குக் கொடுக்க வேண்டிய மஹ்ரைக் கொடுப்பதற்கு இயலாமல் ஆகுதல்.2

02. கணவன், மனைவிக்குக் கொடுக்க வேண்டிய கடமையான அளவு உணவு, உடை, மற்றும் வீடு போன்றவற்றிற்குரிய செலவுகள் கொடுப்பதற்கு இயலாமை ஆகுதல்.3

03. கணவன் அல்லது மனைவி மதம் மாறுதல்4

04. (கணவனது) ஆணுறுப்பு இல்லாமல் இருத்தல் அல்லது செயலிழந்து இருத்தல்5

05. (மனைவியின்) பெண்ணுறுப்பை மறைக்கும் வகையில் அதில் தசை அல்லது எலும்பு வளர்ந்திருத்தல்.6

06. கணவன் அல்லது மனைவிக்கு வெண்குஷ்டம், கருங்குஷ்டம் அல்லது பைத்தியம் ஏற்படல்.7

மேற்கூறப்பட்ட காரணிகள் ஏதாவது இருப்பது காதி நீதிபதியிடம் உறுதி செய்யப்பட்டால் கணவன் மனைவிக்கு மத்தியில் பஸ்க் அடிப்படையில் திருமண ஒப்பந்தத்தை காதி நீதிபதி முறித்து வைப்பார்.8

மேற்குறித்த காரணங்களுக்கு மேலதிகமாக, கணவன், மனைவியை உடல், உள ரீதியாக தொடராக துன்புறுத்துதல், வன்ம உறவருத்தல் (கணவன் மனைவியை நீண்டகாலமாக உறவின்றி ஒதுக்கி வாழுதல்) போன்ற காரணங்களையும் அடிப்படையாக வைத்து காதி நீதிமண்றங்களில் பஸ்க் வழங்கும் நடைமுறையும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


[1] (فإن اشتد الشقاق) بكسر الشين أي الخلاف والعداوة بينهما مأخوذ من الشق، وهو الناحية، إذ كل واحد صار في ناحية، وذلك بأن دام بينهما التساب والتضارب وفحش ذلك (بعث) القاضي (حكما من أهله وحكما من أهلها) لينظر في أمرهما بعد اختلاء حكمه به وحكمها بها ومعرفة ما عندهما في ذلك،

ولا يخفي حكم عن حكم شيئا إذا اجتمعا ويصلحا بينهما أو يفرقا بطلقة إن عسر الإصلاح على ما يأتي لآية: {وإن خفتم شقاق بينهما} [النساء: 35] والخطاب فيها للحكام، وقيل: للأولياء والبعث واجب كما صححه في زيادة الروضة، وجزم به الماوردي وإن صحح في المهمات الاستحباب لنقل البحر له عن نص الشافعي. وقال الأذرعي: بل ظاهر نص الأم الوجوب، وأما كونهما من أهلهما فمستحب غير مستحق إجماعا كما في النهاية؛ لأن القرابة لا تشترط في الحاكم ولا في الوكيل.  (مغنى المحتاج- كتاب النكاح-فصل في حكم الشقاق بالتعدي بين الزوجين)

[2] (وَفِي إعْسَارِهِ بِالْمَهْرِ أَقْوَالٌ: أَظْهَرُهَا) عِنْدَ الْأَكْثَرِينَ (تَفْسَخُ قَبْلَ وَطْءٍ) لِلْعَجْزِ عَنْ تَسْلِيمِ الْعِوَضِ مَعَ بَقَاءِ الْمُعَوَّضِ فَأَشْبَهَ مَا إذَا لَمْ يَقْبِضْ الْبَائِعُ الثَّمَنَ حَتَّى حَجَرَ عَلَى الْمُشْتَرِي بِالْفَلَسِ وَالْمَبِيعُ بَاقٍ بِعَيْنِهِ، وَهَذَا الْفَسْخُ عَلَى الْفَوْرِ كَمَا صَرَّحَ بِهِ الرَّافِعِيُّ، وَكَلَامُ التَّتِمَّةِ يَقْتَضِي خِلَافَهُ، وَ(لَا) تُفْسَخُ (بَعْدَهُ) لِتَلَفِ الْمُعَوَّضِ وَصَيْرُورَةِ الْعِوَضِ دَيْنًا فِي الذِّمَّةِ. (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج ٥/‏١٧٩ — الخطيب الشربيني (ت ٩٧٧)

[3] “(وَلَا فَسْخَ) بِإِعْسَارٍ بِمَهْرٍ أَوْ نَحْوِ نَفَقَةٍ (حَتَّى) تَرْفَعَ الْأَمْرَ لِلْقَاضِي أَوْ الْمُحَكِّمِ بِشَرْطِهِ وَ(يَثْبُتُ) بِإِقْرَارِهِ أَوْ بِبَيِّنَةٍ (عِنْدَ قَاضٍ) أَوْ مُحَكِّمٍ (إعْسَارُهُ فَيَفْسَخُهُ) بِنَفْسِهِ أَوْ نَائِبِهِ (أَوْ يَأْذَنُ لَهَا فِيهِ) لِأَنَّهُ مُجْتَهِدٌ فِيهِ كَالْعُنَّةِ فَلَا يَنْفُذُ مِنْهَا قَبْلَ ذَلِكَ ظَاهِرًا وَلَا بَاطِنًا، وَعِدَّتُهَا تُحْسَبُ مِنْ وَقْتِ الْفَسْخِ، فَإِنْ لَمْ تَجِدْ قَاضِيًا وَلَا مُحَكِّمًا بِمَحَلِّهَا أَوْ عَجَزَتْ عَنْ الرَّفْعِ إلَيْهِ كَأَنْ قَالَ لَهَا لَا أَفْسَخُ حَتَّى تُعْطِيَنِي مَالًا كَمَا هُوَ ظَاهِرٌ اسْتَقَلَّتْ بِالْفَسْخِ لِلضَّرُورَةِ وَيَنْفُذُ ظَاهِرًا وَكَذَا بَاطِنًا لِبِنَاءِ الْفَسْخِ عَلَى أَصْلٍ صَحِيحٍ فَاسْتَلْزَمَ النُّفُوذَ بَاطِنًا، وَقَدْ جَزَمَ بِذَلِكَ جَمْعٌ (ثُمَّ) بَعْدَ تَحَقُّقِ الْإِعْسَارِ (فِي قَوْلٍ يُنَجَّزُ الْفَسْخُ) لِتَحَقُّقِ سَبَبِهِ (وَالْأَظْهَرُ إمْهَالُهُ ثَلَاثَةَ أَيَّامٍ) وَإِنْ لَمْ يَطْلُبْ ذَلِكَ لِأَنَّهَا مُدَّةٌ قَرِيبَةٌ تُتَوَقَّعُ” (نهاية المحتاج ـ كتاب النفقات)

[4] (وَلَوْ ارْتَدَّ زَوْجَانِ) مَعًا (أَوْ أَحَدُهُمَا قَبْلَ دُخُولٍ) أَيْ وَطْءٍ أَوْ وُصُولِ مَنِيٍّ مُحْتَرَمٍ لِفَرْجِهَا (تَنَجَّزَتْ الْفُرْقَةُ) لِأَنَّ النِّكَاحَ لَمْ يَتَأَكَّدْ لِفَقْدِ غَايَتِهِ (أَوْ) ارْتَدَّا أَوْ أَحَدُهُمَا (بَعْدَهُ وَقَعَتْ) الْفُرْقَةُ كَطَلَاقٍ وَظِهَارٍ وَإِيلَاءٍ (فَإِنْ جَمَعَهُمَا الْإِسْلَامُ فِي الْعِدَّةِ دَامَ النِّكَاحُ) بَيْنَهُمَا لِتَأَكُّدِهِ وَنَفَذَ مَا ذُكِرَ (وَإِلَّا فَالْفُرْقَةُ) بَيْنَهُمَا حَاصِلَةٌ (مِنْ) حِينِ (الرِّدَّةِ) مِنْهُمَا أَوْ مِنْ أَحَدِهِمَا وَلَا يَنْفُذُ مَا ذُكِرَ (وَيَحْرُمُ الْوَطْءُ فِي) مُدَّةِ (التَّوَقُّفِ) لِتَزَلْزُلِ مِلْكِ النِّكَاحِ بِإِشْرَافِهِ عَلَى الزَّوَالِ — تحفة المحتاج في شرح المنهاج ٧ ‏/ ٣٢٨).

[5] أَسْبَابُهُ الْمُتَّفَقِ عَلَيْهَا أَرْبَعَةٌ:…..السَّبَبُ الْأَوَّلُ: الْعَيْبُ، الْعُيُوبُ الْمُثْبِتَةُ لِلْخِيَارِ ثَلَاثَةُ أَقْسَامٍ. أَحَدُهَا: يَشْتَرِكُ فِيهِ الرِّجَالُ وَالنِّسَاءُ، …..الْقِسْمُ الثَّانِي: مُخْتَصٌّ بِهِ وَهُوَ الْجَبُّ وَالتَّعْنِينُ.  (روضة الطالبين وعمدة المفتين – النووي (٧ ‏/ ١٧٦)

[6] أَسْبَابُهُ الْمُتَّفَقِ عَلَيْهَا أَرْبَعَةٌ: …..السَّبَبُ الْأَوَّلُ: الْعَيْبُ، الْعُيُوبُ الْمُثْبِتَةُ لِلْخِيَارِ ثَلَاثَةُ أَقْسَامٍ. أَحَدُهَا: يَشْتَرِكُ فِيهِ الرِّجَالُ وَالنِّسَاءُ، … الْقِسْمُ الثَّانِي: مُخْتَصٌّ بِهِ وَهُوَ الْجَبُّ وَالتَّعْنِينُ. الثَّالِثُ: مُخْتَصٌّ بِهَا وَهُوَ الرَّتْقُ وَالْقَرَنُ، فَالرَّتْقُ: انْسِدَادُ مَحَلِّ الْجِمَاعِ بِاللَّحْمِ، وَالْقَرَنُ: عَظْمٌ فِي الْفَرَجِ يَمْنَعُ الْجِمَاعَ، وَقِيلَ: لَحْمٌ يَنْبُتُ فِيهِ، وَيَقُولُ الْفُقَهَاءُ «الْقَرَنُ» بِفَتْحِ الرَّاءِ وَهُوَ فِي كُتُبِ اللُّغَةِ بِإِسْكَانِهَا. (روضة الطالبين وعمدة المفتين – النووي (٧ ‏/ ١٧٦)

[7] أَسْبَابُهُ الْمُتَّفَقِ عَلَيْهَا أَرْبَعَةٌ: الْعَيْبُ، وَالْغُرُورُ، وَالْعِتْقُ، وَالتَّعْنِينُ…..السَّبَبُ الْأَوَّلُ: الْعَيْبُ، الْعُيُوبُ الْمُثْبِتَةُ لِلْخِيَارِ ثَلَاثَةُ أَقْسَامٍ. أَحَدُهَا: يَشْتَرِكُ فِيهِ الرِّجَالُ وَالنِّسَاءُ، وَهُوَ ثَلَاثَةٌ: الْبَرَصُ، وَلَا يَلْتَحِقُ بِهِ الْبَهَقُ. وَالثَّانِي: الْجُذَامُ، وَهُوَ عِلَّةٌ صَعْبَةٌ يَحْمَرُّ مِنْهَا الْعُضْوُ ثُمَّ يَسْوَدُّ ثُمَّ يَنْقَطِعُ وَيَتَنَاثَرُ، … الثَّالِثُ: الْجُنُونُ مُنْقَطِعًا كَانَ أَوْ مُطْبِقًا، وَلَا يُلْحَقُ بِهِ الْإِغْمَاءُ بِالْمَرَضِ إِلَّا أَنْ يَزُولَ الْمَرَضُ وَيَبْقَى زَوَالُ الْعَقْلِ …. (روضة الطالبين وعمدة المفتين – النووي (٧ ‏/ ١٧٦)

[8] (وَيُشْتَرَطُ فِي) الْفَسْخِ بِعَيْبٍ (الْعُنَّةِ رَفْعٌ إلَى حَاكِمٍ) جَزْمًا لِيَفْعَلَ مَا سَيَأْتِي بَعْدَ ثُبُوتِهَا (وَكَذَا سَائِرُ) أَيْ بَاقِي (الْعُيُوبِ) السَّابِقَةِ يُشْتَرَطُ فِي الْفَسْخِ بِكُلٍّ مِنْهَا الرَّفْعُ إلَى الْحَاكِمِ (فِي الْأَصَحِّ) لِأَنَّهُ مُجْتَهِدٌ فِيهِ، فَأَشْبَهَ الْفَسْخَ بِالْإِعْسَارِ (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج ٤/‏٣٤٤ — الخطيب الشربيني (ت ٩٧٧)