பெண்கள் வாகனம் செலுத்துவது தொடர்பான மார்க்க விளக்கம்
Question
Fatwa
ACJU/FTW/2026/39-656
2026.08.19 (1448.03.05)
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
மனித வாழ்வில் இஸ்லாம் எல்லா விடயங்களுக்கும் வழிகாட்டியுள்ளது. அவ்வழிகாட்டல்களை எடுத்து நடப்பது அனைவர் மீதும் அவசியமாகும்.
ஒரு பெண் தனக்கு அவசியமான கல்வியைக் கற்றல், தனது வாழ்வாதாரத்திற்குப் போதிய ஏற்பாடு இல்லாத போது சம்பாதித்தல் போன்ற தேவைகளுக்காக மார்க்க வரையறைகளுக்கு உட்பட்டு வெளியில் செல்ல அனுமதியுள்ளது.
அதேவேளை, அவள் தனது ஊரை விட்டுப் பிரயாணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அவளது பாதுகாப்பிற்காக கணவன் அல்லது தனக்கு மஹ்ரமானவர்களுடனேயே பிரயாணம் செய்ய வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.
இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: (لَا تُسَافِرِ الْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ) (أخرجه البخاري – ١٨٦٢)
“ஒரு பெண், தன்னுடன் ஒரு மஹ்ரம் (திருமணம் செய்ய முடியாத நெருங்கிய உறவினர்) இல்லாமல் பயணம் செய்வது அனுமதிக்கப்படமாட்டாது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் புஹாரி 1862)
அவ்வகையில், ஒரு பெண் தனது தேவைக்காக வெளியில் செல்லும் போது மார்க்க வரையறைகளுடன் வாகனத்தை ஓட்டிச் செல்லும் விடயத்தில் தற்கால ஃபத்வா அமைப்புக்கள் வெவ்வேறு வழிகாட்டல்களை வழங்கியுள்ளன.
சில ஃபத்வா அமைப்புக்கள், தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதிலும் வாகனம் ஓட்டுவதிலும் சமூக ரீதியான பல்வேறு தீமைகள் ஏற்படுவதற்கும், மார்க்க வரையறைகள் மீறப்படுவதற்குமான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதனால், ‘நிர்ப்பந்த நிலைகளில் அன்றி அவர்கள் வாகனம் ஓட்டிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்’ எனக் குறிப்பிடுகின்றன.
இன்னும் சில ஃபத்வா அமைப்புக்கள் ‘மார்க்க வரையறைகளைப் பேணி பெண்கள் வாகனத்தை ஓட்டிச் செல்வதற்கு அனுமதி உள்ளது’ எனக் குறிப்பிடுகின்றன.
ஆகவே, பெண்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் செல்லும் சந்தர்ப்பங்களில், மார்க்க வரையறைகளைப் பேணியவாறு வாகனம் ஓட்டிச் செல்ல முடியும்.
ஒரு பெண் வகனம் செலுத்தும் போது பின்வரும் வரையறைகளையும் ஒழுக்கங்களையும் கடைப்பிடித்து செயல்பட வேண்டும்.
- தனது மற்றும் பிறரது பாதுகாப்பை கவனத்தில் கொள்ளல்.
- தனது அலங்காரத்தை வெளிப்படுத்தாது இஸ்லாமிய ஆடை ஒழுங்குமுறைகள் பேணல் வேண்டும்.
- ஆண்களைக் கவரும் வகையிலான செயற்பாடுகளை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.
- ஊரைவிட்டும் வெளியே பயணிப்பதாயின் அசௌகரியங்களைத் தவிர்க்க அவளுடன் மஹ்ரமான ஆணோ அல்லது கணவரோ இருத்தல் வேண்டும்.
- அந்நிய ஆணுடன் தனித்திருக்கும் நிலையைத் தவிர்த்தல்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
[1] (وَسُئِلَ) نَفَعَ اللَّهُ تَعَالَى بِهِ هَلْ لِلْمَرْأَةِ أَنْ تَخْرُج مِنْ بَيْتِ زَوْجِهَا لِلِاسْتِفْتَاءِ وَالتَّكَسُّب وَنَحْو ذَلِكَ أَمْ لَا؟ (فَأَجَابَ) بِقَوْلِهِ لَهَا الْخُرُوجُ بِغَيْرِ إذْنٍ لِلضَّرُورَةِ كَخَوْفِ هَدْمٍ وَعَدُوّ وَحَرِيقٍ وَغَرَقٍ وَلِلْحَاجَةِ لِلتَّكَسُّبِ بِالنَّفَقَةِ إذَا لَمْ يَكْفِهَا الزَّوْجُ وَلِلْحَاجَةِ الشَّرْعِيَّةِ كَالِاسْتِفْتَاءِ وَنَحْوِهِ إلَّا أَنْ يُفْتِيهَا الزَّوْجُ أَوْ يَسْأَل لَهَا لَا لِعِيَادَةِ مَرِيض وَإِنْ كَانَ أَبَاهَا وَلَا لِمَوْتِهِ وَشُهُودِ جِنَازَتِهِ قَالَهُ الْحَمَوِيُّ فِي شَرْحِ التَّنْبِيهِ وَاسْتَدَلَّ لَهُ بِأَنَّ امْرَأَةً اسْتَأْذَنَتْ رَسُولَ اللَّهِ – ﷺ – فِي عِيَادَةِ أَبِيهَا وَكَانَ زَوْجُهَا غَائِبًا فَقَالَ رَسُولُ اللَّهِ – ﷺ – «اتَّقِي اللَّهَ وَأَطِيعِي زَوْجَك فَلَمْ تَخْرُج وَجَاءَ جِبْرِيلُ فَأَخْبَرَ النَّبِيَّ – ﷺ – أَنَّ اللَّهَ قَدْ غَفَرَ لِأَبِيهَا بِطَاعَتِهَا لِزَوْجِهَا». (الفتاوى الكبرى الفقهية ٤/٢٠٥ — ابن حجر الهيتمي (ت ٩٧٤)
[2] فَالْحَاصِلُ أَنَّ كُلَّ مَا يُسَمَّى سَفَرًا تُنْهَى عَنْهُ الْمَرْأَةُ بِغَيْرِ زَوْجٍ أَوْ مَحْرَمٍ سَوَاءٌ كَانَ ثَلَاثَةَ أَيَّامٍ أَوْ يَوْمَيْنِ أو يوما أو بريدا أو غير ذلك لرواية بن عَبَّاسٍ الْمُطْلَقَةِ وَهِيَ آخِرُ رِوَايَاتِ مُسْلِمٍ السَّابِقَةِ لَا تُسَافِرِ امْرَأَةٌ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ وَهَذَا يَتَنَاوَلُ جَمِيعَ مَا يُسَمَّى سَفَرًا وَاللَّهُ أَعْلَمُ (شرح النووي على مسلم 9/102)
أَمَّا سَفَرُهَا وَإِنْ قَصُرَ لِغَيْرِ فَرْضٍ فَحَرَامٌ مَعَ النِّسْوَةِ مُطْلَقًا. (قَوْلُهُ: وَإِنْ قَصُرَ لِغَيْرِ فَرْضٍ إلَخْ) وَمِنْهُ خُرُوجُهُنَّ لِزِيَارَةِ الْقُبُورِ حَيْثُ كَانَ خَارِجُ السُّوَرِ وَلَوْ بِإِذْنِ الزَّوْجِ (نهاية المحتاج إلى شرح المنهاج ٣/٢٥٠)
[3] النص المختصر بالعربية: أمر الله تعالى المرأة بالقرار في بيتها، ونهاها عن الخروج بغير حاجة مع التبرج، كما قال النبي ﷺ: «المرأة عورة، فإذا خرجت استشرفها الشيطان». ولذلك، فالأصل أن لا تخرج المرأة ولا تقود السيارة من غير ضرورة، ولا سيما إذا كان في ذلك تعرضٌ للفتنة أو مخالفةٌ للأحكام الشرعية. وقد أجاز الفقهاء خروجها عند الحاجة أو الضرورة الشرعية، بشرط الالتزام بالحجاب الشرعي الكامل الذي يستر جميع البدن، واجتناب أسباب الفتنة. وعليه، فلا يجوز للمرأة قيادة السيارة لمجرد التنزه أو الهواية دون حاجة معتبرة شرعًا. وعليه، ففي الصورة المسؤول عنها، يجوز للمرأة قيادة السيارة عند وجود ضرورةٍ شديدة، بشرط ألا يترتب على ذلك أيُّ محذورٍ شرعي، وأن تلتزم بالحجاب الشرعي الكامل، وذلك بارتداء البرقع وستر الوجه. أما من غير ضرورة، أو مع التبرج وكشف ما يجب ستره، فلا يجوز لها الخروج، كما لا يجوز لها قيادة السيارة. (دار الإفتاء يجامعة العلوم الإسلامية – بنوري تاون)
دار الإفتاء – دار العلوم ديوبند
https://darulifta-deoband.com/home/ur/women-s-issues/148923
[4] فالأصل أن قيادة المرأة للسيارة جائزة كركوبها لغير السيارة من المراكب. وعليه، فإذا لم تكن قيادة المرأة للسيارة تعرضها للسفر بها فيما يعد سفراً عرفاً واختلاء الأجانب بها أو نحو ذلك فلا مانع منها، خصوصاً إذا احتاجت إلى ذلك مثل كون زوجها مريضاً لا يقدر على القيادة، وليس لها محرم يتولى القيادة بها. وإذا كان مشي المرأة على أقدامها يعرضها لنوع من الأذى وليس لها من يقود لها السيارة من محارمها فلا شك أن مباشرتها للسياقة في هذه الحالة أستر لها وأحصن . والله أعلم. موقع إسلام ويب

