பிராணிகளை அறுக்கும் போது கவனிக்க வேண்டிய சட்ட திட்டங்களும் ஒழுங்குமுறைகளும்

FATWA # ACJU/FTW/2025/08/590/ORG-01

Question

பிராணிகளை இஸ்லாத்தில் அறுவை செய்யும் ஒழுங்குகளையும், அறுப்பவரின் நிலமைகளையும் தெளிவுபடுத்தி எழுத்து மூலம் பதில் தருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை முறைப்பாடு வேண்டப்பட்டுள்ளது. எனவே குறித்த விடயம் தொடர்பாக ஒரு தெளிவை தருமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

Fatwa

ACJU/FTW/2025/08/590/ORG-01
2025.04.21 – 1446.10.22
 
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக! 
 
பிராணிகளின் மாமிசங்களை மனிதன் உட்கொள்வதாயின் அதற்கான சில வரையறைகளையும் விதிமுறைகளையும் இஸ்லாம் விதித்துள்ளது. அவ்வகையில் மீன், வெட்டுக்கிளி அல்லாத ஏனைய பிராணிகளை சாப்பிடுவதாயின் அவை இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படல் வேண்டும்.
 
இதனை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றன:
 

 حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُم وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ‌ ؕ ذٰ لِكُمْ فِسْقٌ‌ ؕ  (سورة المائدة :03)

தானாக செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாதோருக்கு அறுக்கப்பட்டவையும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தது, அடிபட்டுச் செத்தது, உயரத்தில் இருந்து வீழ்ந்து செத்தது, கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது, வன விலங்குகள் கடித்துச் செத்தது ஆகியவையும் (தடைசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் உயிருடன் கண்டு) முறைப் படி நீங்கள் அறுத்தவற்றைத் தவிர. மேலும், (வணக்கத்திற்காக) நடப்பட்டவற்றிற்கு அறுக்கப்பட்டவையும், நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் (தடைசெய்யப்பட்டுள்ளன.) இவை பாவமாகும். (ஸூரா அல்-மாஇதா:03) 
 

عن رَافِع بْن خَدِيج رضي الله عنه  قال رَسُولُ الله : مَا أَنْهَرَ الدَّمَ، وَذُكِرَ اسْمُ الله عَلَيْهِ، فَكُلُوهُ، لَيْسَ السِّنَّ وَالظُّفْرَ. (صحيح البخاري – ٢٤٨٨)

“(பிராணி அறுக்கப்படும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு, இரத்தத்தை ஓடச்செய்கின்ற ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தால் நீங்கள் அப்பிராணியை உண்ணலாம். பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி 2488)
 
  • பிராணிகளை அறுக்கும் போது பேண வேண்டிய நிபந்தனைகள்:
  • அறுக்கக்கூடியவர் முஸ்லிமாக இருத்தல். 
  • அறுக்கும் போது அல்லாஹ் அல்லாத வேறு ஒன்றிற்காக அறுக்காதிருத்தல்.
  • மூச்சுக்குழாய் மற்றும் உணவுக் குழாய் ஆகிய இரண்டும் முழுமையாக அறுக்கப்படல். அவ்வாறு முழுமையாக அறுக்கப்படாவிடின் அதனை உண்பதற்கு அனுமதி கிடையாது. 1 
  • மூச்சுக்குழாய் மற்றும் உணவுக் குழாய் ஆகிய இரண்டையும் அறுப்பதற்கு ஆரம்பிக்கும் போது பிராணி, உயிர் பிரியும் நிலையை அடையாதிருத்தல்.2
அவ்விரு குழாய்களும் அறுக்கப்படுவதற்கு முன்னர் அப்பிராணி,  உடனடியாக உயிரைப் போக்கும் நோயினால்3  அல்லது வேறு காரணங்களினால் உயிர் பிரியும் நிலையை அடைந்திருப்பின் அது இறந்த பிராணியாகவே கருதப்படும். அதனை உண்பதற்கு அனுமதி கிடையாது.
 

அறுக்கப்பட்ட பிராணியின் கால்கள் பலமாக அசையாமலும், அதன் இரத்தம் வேகமாகப் பீறிட்டுப் பாயாமலும் இருப்பது அப்பிராணி அறுக்கப்படுவதற்கு முன்னர் உயிர் பிரியும் நிலையை அடைந்ததற்கான அறிகுறிகளில் உள்ளவையாகும்.4

  • அறுப்பதற்கு பயன்படுத்தப்படும் கருவி கூர்மையாக இருத்தல். பல், நகம் இன்னும் பாரத்தினால் பிராணியின் உயிரை போக்கக்கூடிய ஆயுதமாக இல்லாமலிருத்தல். 5
  • பிராணிகளை அறுக்கும் போது கவனிக்கப்பட வேண்டிய சுன்னத்தான விடயங்கள்:
  • அறுக்கக் கூடியவர் பார்வையுள்ள, புத்தி சுயாதீனமான, பருவ வயதை அடைந்த ஆணாக இருத்தல். 
  • பார்வையற்றவர், பைத்தியகாரர் மற்றும் போதையில் உள்ளவர் போன்றோர் அறுப்பது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கதாகும்.6
  • பிராணியை அறுக்க முன்னர் நீர் புகட்டுதல்.
  • பிராணியின் பார்வைக்குப் படாமல் ஆயுதத்தை கூர்மையாக்கிக் கொள்ளல். 
  • ஆடு, மாடு போன்றவற்றை அறுக்கும்போது அவற்றின் இடது பின்னங்காலை தவிர்த்து ஏனைய மூன்று கால்களையும் கட்டி, பிராணியை அதன் இடது பக்கமாக தரையில் சாயவைத்து, தலையை கிப்லாவின் பக்கம் வைத்து அறுத்தல்.
  • அறுக்கும் போது அறுப்பவர்  கிப்லாவை முன்னோக்கி அறுத்தல்.  
  • பிஸ்மில்லாஹ் சொல்லி அறுத்தல். (பிஸ்மில்லாஹ்வுடன் ஸலவாத் சொல்வதும் ஸுன்னத் என ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்)8
  • ஒரு பிராணியின் முன்னிலையில் இன்னொரு பிராணியை அறுக்காமல் இருத்தல்.
  • உணவுக் குழாய், மூச்சுக் குழாய் ஆகிய இரண்டுடன் சேர்த்து அவற்றிற்கு பக்கத்தில் உள்ள இரு நரம்புகளையும் அறுத்தல். 10
  • பிராணியின் உயிர் முழுமையாக பிரிய முன்னர் அதன் தோலை உரித்தல், எலும்புகளை உடைத்தல், உறுப்புகளை வேறாக்குதல், வேறு இடங்களுக்கு இட மாற்றம் செய்தல் போன்றவற்றைத் தவிர்த்தல். 11
  • பிராணிகளை அறுக்கும்போது கவனிக்கப்பட வேண்டிய மேலதிக ஒழுக்கங்கள்:
  • பல்லின மக்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படவோ, அவர்களுடைய உணர்வுகள் தூண்டப்படவோ இடம் வைக்காது அவதானமாக நடந்து கொள்ளல். 
  • நமது நாட்டில் பிராணிகள் அறுப்பு விடயமாக தனியான சட்டம் உள்ளது. அச்சட்டத்தை இந்நாட்டு பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
  • விலங்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகளைப் பேணிக் கொள்ளல். 
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்
 
அஷ்ஷைக் எம்.டி.எம். ஸல்மான்
பதில் செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா     
 
 
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் 
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா   
 
 
அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி  
தலைவர்  
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 
 
—————————————————————————————-

[1] ﻭﺫﻛﺎﺓ ﻛﻞ ﺣﻴﻮاﻥ ﻗﺪﺭ ﻋﻠﻴﻪ ﺑﻘﻄﻊ ﻛﻞ اﻟﺤﻠﻘﻮﻡ ﻭﻫﻮ ﻣﺨﺮﺝ اﻟﻨﻔﺲ ﻭاﻟﻤﺮﻯء ﻭﻫﻮ ﻣﺠﺮﻯ اﻟﻄﻌﺎﻡ -(منهاج الطالبين)

[2] ﻭﻣﺎ اﻗﺘﻀﺘﻪ اﻟﻌﺒﺎﺭﺓ ﻣﻦ اشتراﻁ ﻭﺟﻮﺩ الحياﺓ المستقرﺓ ﻋﻨﺪ ﻗﻄﻌﻬﻤﺎ ﺟﻤﻴﻌﻬﻤﺎ ﻏﻴﺮ ﻣﺮاﺩ ﺑﻞ اﻟﺸﺮﻁ ﻭﺟﻮﺩﻫﺎ ﻋﻨﺪ اﺑﺘﺪاء اﻟﻘﻄﻊ ﻫﻨﺎ ﺃﻳﻀﺎ ﻓﺤﻴﻨﺌﺬ ﻻ ﻳﻀﺮ اﻧﺘﻬﺎﺅﻩ ﻟﺤﺮﻛﺔ ﻣﺬﺑﻮﺡ ﻟﻤﺎ ﻧﺎﻟﻪ ﺑﺴﺒﺐ ﻗﻄﻊ اﻟﻘﻔﺎ؛ ﻷﻥ ﺃﻗﺼﻰ ﻣﺎ ﻭﻗﻊ اﻟﺘﻌﺒﺪ ﺑﻪ ﻭﺟﻮﺩﻫﺎ ﻋﻨﺪ اﺑﺘﺪاء ﻗﻄﻊ اﻟﻤﺬﺑﺢ – (تحفة المحتاج في شرح المنهاج)

 [3] نَعَمْ لَوْ انْتَهَى لِحَرَكَةِ مَذْبُوحٍ بِمَرَضٍ، وَإِنْ كَانَ سَبَبُهُ أَكْلَ نَبَاتٍ مُضِرٍّ كَفَى ذَبْحُهُ؛ لِأَنَّهُ لَمْ يُوجَدْ مَا يُحَالُ عَلَيْهِ الْهَلَاكُ، فَإِنْ وُجِدَ كَأَنْ أَكَلَ نَبَاتًا يُؤَدِّي إلَى الْهَلَاكِ، أَوْ انْهَدَمَ عَلَيْهِ سَقْفٌ، أَوْ جَرَحَهُ سَبُعٌ، أَوْ هِرَّةٌ اُشْتُرِطَ وُجُودُ الْحَيَاةِ الْمُسْتَقِرَّةِ فِيهِ عِنْدَ ابْتِدَاءِ الذَّبْحِ فَعُلِمَ أَنَّ النَّبَاتَ الْمُؤَدِّيَ لِمُجَرَّدِ الْمَرَضِ لَا يُؤَثِّرُ بِخِلَافِ الْمُؤَدِّي لِلْهَلَاكِ أَيْ: غَالِبًا فِيمَا يَظْهَرُ؛ إذْ لَا يُحَالُ الْهَلَاكُ عَلَيْهِ إلَّا حِينَئِذٍ. – (تحفة المحتاج في شرح المنهاج)

[4] وللحياة المستقرة قرائن وأمارات تغلب على الظن بقاء الحياة فيدرك ذلك بالمشاهدة، ومن أماراتها الحركة الشديدة وانفجار الدم بعد قطع الحلقوم والمريء، والأصح أن الحركة الشديدة تكفي وحدها، فإن شككنا في حصولها ولم يترجح ظن فالأصح التحريم  -(مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج )

[5]  ﻳﺤﻞ ﺫﺑﺢ ﻣﻘﺪﻭﺭ ﻋﻠﻴﻪ ﻭﺟﺮﺡ ﻏﻴﺮﻩ ﺑﻜﻞ ﻣﺤﺪﺩ ﻳﺠﺮﺡ ﻛﺤﺪﻳﺪ ﻭﻧﺤﺎﺱ ﻭﺫﻫﺐ ﻭﺧﺸﺐ ﻭﻗﺼﺐ ﻭﺣﺠﺮ ﻭﺯﺟﺎﺝ ﺇﻻ ﻇﻔﺮا ﻭﺳﻨﺎ ﻭﺳﺎﺋﺮ اﻟﻌﻈﺎﻡ – (منهاج الطالبين)

[6]  ﻭﺗﻜﺮﻩ ﺫﻛﺎﺓ اﻻﻋﻤﻲ ﻻﻧﻪ ﺭﺑﻤﺎ ﺃﺧﻄﺄ اﻟﻤﺬﺑﺢ ﻓﺎﻥ ﺫﺑﺢ ﺣﻞ ﻻﻧﻪ ﻟﻢ ﻳﻔﻘﺪ ﻓﻴﻪ اﻻ اﻟﻨﻈﺮ ﻭﺫﻟﻚ ﻻ ﻳﻮﺟﺐ اﻟﺘﺤﺮﻳﻢ ﻭﻳﻜﺮﻩ ﺫﻛﺎﺓ اﻟﺴﻜﺮاﻥ ﻭاﻟﻤﺠﻨﻮﻥ ﻻﻧﻪ ﻻ ﻳﺆﻣﻦ ﺃﻥ ﻳﺨﻄﺊ اﻟﻤﺬﺑﺢ ﻭﻳﻘﺘﻞ اﻟﺤﻴﻮاﻥ ﻓﺎﻥ ﺫﺑﺢ ﺣﻞ -( المجموع شرح المهذب )

[7]  ﻭﻳﺴﻦ ﻧﺤﺮ ﺇﺑﻞ ﻭﺫﺑﺢ ﺑﻘﺮ ﻭﻏﻨﻢ ﻭﻳﺠﻮﺯ ﻋﻜﺴﻪ ﻭﺃﻥ ﻳﻜﻮﻥ اﻟﺒﻌﻴﺮ ﻗﺎﺋﻤﺎ ﻣﻌﻘﻮﻝ ﺭﻛﺒﺔ ﻭاﻟﺒﻘﺮ ﻭاﻟﺸﺎﺓ ﻣﻀﺠﻌﺔ ﻟﺠﻨﺒﻬﺎ اﻷﻳﺴﺮ ﻭﺗﺘﺮﻙ ﺭﺟﻠﻬﺎ اﻟﻴﻤﻨﻰ ﻭﻳﺸﺪ ﺑﺎﻗﻲ اﻟﻘﻮاﺋﻢ ﻭﺇﻥ ﻳﺤﺪ ﺷﻔﺮﺗﻪ ﻭﻳﻮﺟﻪ ﻟﻠﻘﺒﻠﺔ ﺫﺑﻴﺤﺘﻪ ﻭﺃﻥ ﻳﻘﻮﻝ ﺑﺴﻢ اﻟﻠﻪ( منهاج الطالبين)

[8]  (وَأَمَّا) الصَّلَاةُ عَلَى النَّبِيِّ ﷺ عِنْدَ الذَّبْحِ فَمُسْتَحَبَّةٌ عِنْدَنَا –  (المجموع شرح المهذب)

(و) تسن (التسمية) بأن يقول باسم الله (والصلاة على النبي ﷺ عند الذبح و) عند (إرسال السهم والجارحة) إلى صيد (ولو عند الإصابة) بالسهم (والعض) من الجارحة أما التسمية فلقوله تعالى ﴿فكلوا مما ذكر اسم الله عليه﴾ [الأنعام: ١١٨] ﴿فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه﴾ [المائدة: ٤] وللاتباع رواه الشيخان، وأما الصلاة على النبي ﷺ؛ فلأنه محل يسن فيه ذكر الله فسن فيه ذكر رسوله ﷺ كالأذان والصلاة  (أسنى المطالب في شرح روض الطالب ١/‏٥٤٠ — زكريا الأنصاري (ت ٩٢٦)

[9] ﻭﻧﻘﻞ اﺑﻦ اﻟﻤﻨﺬﺭ ﺃﻧﻪ ﻳﻜﺮﻩ ﺃﻥ ﻳﺤﺪﺩ اﻟﺴﻜﻴﻦ ﻭاﻟﺸﺎﺓ ﺗﻨﻈﺮ اﻟﺴﻜﻴﻦ ﻭﺃﻥ ﻳﺬﺑﺢ اﻟﺸﺎﺓ ﻭاﻷﺧﺮﻯ ﺗﻨﻈﺮ ﻭﻛﺬا ﻗﺎﻟﻪ ﺃﺻﺤﺎﺑﻨﺎ ﻗﺎﻟﻮا ﻭﻳﺴﺘﺤﺐ ﺃﻥ ﺗﺴﺎﻕ ﺇﻟﻰ اﻟﻤﺬﺑﺢ ﺑﺮﻓﻖ ﻭﺗﻀﺠﻊ ﺑﺮﻓﻖ ﻭﻳﻌﺮﺽ ﻋﻠﻴﻬﺎ اﻟﻤﺎء ﻗﺒﻞ اﻟﺬﺑﺢ – (المجموع شرح المهذب)

[10]  ﻭﻳﺴﺘﺤﺐ ﻗﻄﻊ اﻟﻮﺩﺟﻴﻦ ﻭﻫﻤﺎ ﻋﺮﻗﺎﻥ ﻓﻲ ﺻﻔﺤﺘﻲ اﻟﻌﻨﻖ – (منهاج الطالبين)

[11] ﻓﺎﻟﻤﺴﺘﺤﺐ ﺃﻥ ﻳﻤﺴﻚ ﻭﻻ ﻳﺒﻴﻦ ﺭﺃﺳﻪ ﻓﻲ اﻟﺤﺎﻝ، ﻭﻻ ﻳﺰﻳﺪ ﻓﻲ اﻟﻘﻄﻊ، ﻭﻻ ﻳﺒﺎﺩﺭ ﺇﻟﻰ ﺳﻠﺦ اﻟﺠﻠﺪ، ﻭﻻ ﻳﻜﺴﺮ اﻟﻔﻘﺎﺭ، ﻭﻻ ﻳﻘﻄﻊ ﻋﻀﻮا، ﻭﻻ ﻳﺤﺮﻙ اﻟﺬﺑﻴﺤﺔ، ﻭﻻ ﻳﻨﻘﻠﻬﺎ ﺇﻟﻰ ﻣﻜﺎﻥ، ﺑﻞ ﻳﺘﺮﻙ ﺟﻤﻴﻊ ﺫﻟﻚ ﺣﺘﻰ ﺗﻔﺎﺭﻕ اﻟﺮﻭﺡ، – (روضة الطالبين)