வேண்டுமென்று அல்லது சொகுசுக்காக ஒரு வாஜிபை விட்டு அதற்குhக தமு கொடுப்பது தொடர்பான மார்க்க வழிகாட்டல்

FATWA # ACJU/FTW/2019/26-377

Question

வேண்டுமென்று அல்லது சொகுசுக்காக ஒரு வாஜிபை விட்டு அதற்காக தமு கொடுப்பது கூடுமா?

Fatwa

2015.08.15

எதாவது ஒரு தங்கடத்திற்காக ஹஜ் அல்லது உம்ரா போன்ற கடமைகளில் ஏதேனும் ஒரு வாஜிபை விட்டுவிட்டால், அதற்கான குற்றப்பரிகாரத்தைக் கொடுப்பது கடமையாகும். என்றாலும், தங்கடம் ஏதும் இன்றி வேண்டுமென்று சொகுசை மாத்திரம் கருத்திற்கொண்டு விடுவது பாவமாகும். அவர் தாம் செய்த பாவத்திற்கு தவ்பா செய்வதுடன் குற்றப்பரிகாரமும் கொடுத்தல் வேண்டும்.

فإن أرادت المرأة ستر وجهها عن الناس أرخت عليه ما يستره بنحو ثوب متجاف عنه بنحو خشبة بحيث لا يقع على البشرة وسواء أفعلته لحاجة كحر وبرد أم لا كما يجوز للرجل ستر رأسه بنحو مظلة فلو وقعت الخشبة مثلا فأصاب الثوب وجهها بلا اختيار منها فرفعته فورا لم تلزمها الفدية وإلا لزمتها مع الإثم ‘باب محرمات الإحرام – مغنى المحتاج’

 

*ACJU FATWA*