Researched Fatwa
பலவீனமான பெண்கள், நோயாளிகள் 12 ஆம் நாள் ஸவாலுக்கு முன்பதாக கற்களைக் கொடுத்துவிட்டு மினாவிலிருந்து வெளியேறுவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்
ACJU FATWA
Question
பலவீனமான பெண்கள், நோயாளிகள் 12 ஆம் நாள் ஸவாலுக்கு முன்பதாக கற்களைக் கொடுத்துவிட்டு மினாவிலிருந்து வெளியேறுவது கூடுமா?
Fatwa
2015.08.15
பலவீனமான பெண்கள், நோயாளிகள் போன்றவர்கள் மினாவில் கற்களை எறிவதற்கு பிறரை வகீலாக (பொறுப்பாக) ஆக்கலாம். அவ்வாறு இன்னொருவரை பொறுப்பாக்கினாலும் துல் ஹிஜ்ஜஹ் 12 ஆம் நாள் ஸவாலுக்குப் பின்பே அவர்கள் மினாவை விட்டு வெளியேறவேண்டும். ஸவாலுக்கு முன் வெளியேறினால் தமு கொடுக்கவேண்டும்.
(سُئِلَ) هَلْ الْمُعْتَمَدُ جَوَازُ النَّفْرِ الْأَوَّلِ قَبْلَ رَمْيِ يَوْمِهِ؟ (فَأَجَابَ) بِأَنَّ الْمُعْتَمَدَ عَدَمُهُ. ‘فتاوى الرملي’
قَالَ الْمَدَنِيُّ لِجَوَازِ النَّفْرِ الْأَوَّلِ ثَمَانِيَةُ شُرُوطٍ لَكِنَّهَا تَعُودُ لِخَمْسَةٍ لِدُخُولِ بَعْضِهَا فِي بَعْضٍ أَنْ يَنْفِرَ فِي الْيَوْمِ الثَّانِي مِنْ أَيَّامِ التَّشْرِيقِ وَأَنْ يَكُونَ بَعْدَ الزَّوَالِ وَأَنْ يَكُونَ بَعْدَ جَمِيعِ الرَّمْيِ ‘باب الحج والعمرة – الغرر البهية’
*ACJU FATWA*

