Researched Fatwa
கிரான் பிரகாரம் இஹ்ராம் செய்யக் கூடியவர்கள் குர்பானிக்கான பிராணிகளை எடுத்துச் செல்வர். எனவே, அது தரைமார்க்கமாக செல்பவர்களுக்கே பொருந்தும் என்றிருக்கும் போது விமானத்தில் செல்லும் இலங்கையர்களுக்கு கிரான் முறைப்பிரகாரம் இஹ்ராம் நிய்யத் செய்வது தொடர்பான மார்க்க வழிகாட்டல்
Question

Fatwa

2015.08.15
தமத்துஃ மற்றும் கிரான் முறையில் இஹ்ராம் அணிந்து ஹஜ் செய்யக்கூடியவர்கள் தமது ஊரிலிருந்து ஹத்யை எடுத்துச்செல்வது கட்டாயம் இல்லை. மாறாக, பொதுவாக ஹஜ், உம்ராவுக்கு செல்பவர்கள் முடியுமாக இருந்தால் ஹத்யை எடுத்து செல்வது சுன்னத் ஆகும்.
ஹஜ்ஜுக்கு செல்லும் பொழுது தாம் குர்பான் கொடுக்கும் பிராணியை முடியுமாக இருந்தால் தம்முடன் எடுத்துச் செல்வது சுன்னத்தாகும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஹஜ்ஜின் பொழுது பிராணியை தம்முடன் எடுத்தே சென்றார்கள். என்றாலும், இலங்கையில் இருந்து செல்லும் ஹாஜிகள் விமானத்தில் செல்வதால் அது சாத்தியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
يُسْتَحَبُّ أَنْ يَكُونَ الْهَدْيُ مَعَهُ مِنْ بَلَدِهِ فَإِنْ لَمْ يَفْعَلْ فَشِرَاؤُهُ مِنْ الطَّرِيقِ أَفْضَلُ مِنْ شِرَائِهِ مِنْ مَكَّةَ ثُمَّ مِنْ مَكَّةَ ثُمَّ عَرَفَاتٍ فَإِنْ لَمْ يَسُقْهُ أَصْلًا بَلْ اشْتَرَاهُ مِنْ مِنًى جَازَ وَحَصَلَ أَصْلُ الْهَدْيِ هَذَا مَذْهَبُنَا وَبِهِ قَالَ ابْنُ عَبَّاسٍ وَأَبُو حَنِيفَةَ وَأَبُو ثَوْرٍ وَالْجُمْهُورُ – ‘باب الهدي – كتاب الحج – المجموع’
يَتَأَكَّدُ عَلَى قَاصِدِ الْحَجِّ أَوْ الْعُمْرَةِ أَنْ يَصْحَبَ مَعَهُ هَدْيًا وَهُوَ لِلْحَاجِّ آكَدُ وَمَرَّ أَنَّ هَذَا مَحْمَلُ أَمْرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَا هَدْيَ مَعَهُ أَنْ يَجْعَلَ إحْرَامَهُ عُمْرَةً وَمَنْ مَعَهُ هَدْيٌ أَنْ يَجْعَلَهُ حَجًّا نَظَرًا إلَى أَنَّهُ أَكْمَلُ النُّسُكَيْنِ وَمَنْ سَاقَ الْهَدْيَ تَقَرُّبًا أَفْضَلُ مِمَّنْ لَمْ يَسُقْهُ فَنَاسَبَ أَنْ يَكُونَ لَهُ أَكْمَلُ النُّسُكَيْنِ . ‘فرع عَلَى قَاصِدِ الْحَجِّ أَوْ الْعُمْرَةِ أَنْ يَصْحَبَ مَعَهُ هَدْيًا – كتاب الحج – تحفة المحتاج’
*ACJU MEDIA*