Researched Fatwa
குறித்த ஐந்து மீக்காத்துகளைத் தவிர்த்து ஜிஃரானாஹ், தன்ஈம் மற்றும் ஹுதைபிய்யஹ் போன்ற இடங்களிலும் மேலதிக உம்ராவுக்காக இஹ்ராம் செய்யவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்
ACJU MEDIA
Question

குறித்த ஐந்து மீக்காத்துகளைத் தவிர்த்து ஜிஃரானாஹ், தன்ஈம் மற்றும் ஹுதைபிய்யஹ் போன்ற இடங்களிலும் மேலதிக உம்ராவுக்காக இஹ்ராம் செய்ய முடியுமா?
Fatwa

2015.08.15
ஹரமுடைய எல்லைக்கு வெளியில் இருந்து உம்ரா செய்வதற்கு வருபவர்கள் ஹஜ்ஜுடைய மீக்காத்தில் வைத்து உம்ராவுக்காக இஹ்ராம் கட்டுவது அவசியமாகும். ஹரமுடைய எல்லைக்குள் இருப்பவர்கள் உம்ரா செய்ய நாடினால் ஹரமுடைய எல்லைக்கு வெளியில் செல்வது அவசியமாகும். இதிலும் குறித்த ஜிஃரானாஹ், தன்ஈம் மற்றும் ஹுதைபிய்யஹ் ஆகிய மூன்று இடங்கள் சிறப்பானதாகும்.
*ACJU MEDIA*