மினா, முஸ்தலிபா எல்லைகள் என அடையளப்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு வெளியே தங்குவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்

ACJU FATWA

Question

மினா, முஸ்தலிபா எல்லைகள் என அடையளப்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு வெளியே தங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா?

Fatwa

2015.08.15

ஹஜ்ஜுடைய காலங்களில், பிறை 10, 11, 12, ஆகிய நாட்களில் மினாவின் எல்லைக்குள் இரவில் பெரும் பகுதியைக் கழிப்பது வாஜிபாகும். தகுந்த காரணமின்றி மினாவில் தரிப்பதைத் தவற விட்டால் குற்றப்பரிகாரமாக ஒரு ஆடு கொடுப்பது கட்டாயமாகிவிடும். தற்காலத்திலுள்ள நெருக்கடியான நிலைமைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக மினாவுடைய எல்லைக்குள் தங்குவதற்குச் சிரமம் ஏற்படும் பொழுது, மினாவுடைய எல்லைக்கு அருகாமையில் உள்ள இடங்களில் தங்கிக் கொள்ளலாம்.

ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்கு நெருக்கடியாக இருக்கும் பொழுது அது விசாலமாகிவிடும் எனும் சட்டத்தை மையமாக வைத்து மினாவில் தரிப்பதற்கு இடம் இல்லாத போது வேறு எங்காவது தங்கிக் கொள்ளலாம்.

இதில் குறிப்பாக ஹஜ் முகவர்களும் வழிகாட்டிளாகச் செல்லும் ஆலிம்களும் கவனம் செலுத்துவது அவசியம்.

மினாவுடைய எல்லைக்குள் போதிய இடம் இருக்கும் பொழுது முஸ்தலிபாவில் அல்லது வேறு இடங்களில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வதைத் தவிர்த்து மினாவுடைய எல்லைக்குள் முற்பதிவுகளைச் செய்து கொள்ள வேண்டும். மினாவின் எல்லைப்பகுதிக்குள் இடம் கிடைக்காத போது அல்லது மினாவின் எல்லைப்பகுதிக்குள் முற்பதிவுகளைச் செய்வதற்கு வசதி இல்லாத பட்சத்தில் மட்டுமே வேறு இடங்களில் தங்கலாம். மினாவின் எல்லைப்பகுதிக்குள் இடம் தருவாதகக் கூறி, மினாவின் எல்லைப்பகுதிக்குள் தங்கும் இடத்தை முற்பதிவு செய்ய முடியுமாக இருந்தும், வெளியில் முற்பதிவு செய்தால் முகவர்கள் அதற்கு பொறுப்புக் கூறுதல் வேண்டும்.

يَنْبَغِي أن يَبِيتَ بِمنى في لَيَالِيهَا وَهَلْ هَذَا الْمَبِيتُ وَاجِبٌ أمْ سُنَّةٌ؟ قَوْلاَنِ للشافعِيِّ رحمه الله تَعَالى أظْهَرُهُمَا أنَّهُ وَاجِبٌ والثاني سُنَّةٌ فإن تَركَهُ جُبِرَ بِدَمٍ فَإِنْ قُلْنَا المَبِيتُ وَاجِب فالدَّمُ وَاجِبٌ وَإِنْ قُلْنا سُنَّةٌ فالدَّم سُنَّة. (فَصْلٌ في صفة الإِحرام وما يكون بعده – الإيضاح في مناسك الحج والعمرة )

الْمَبِيتُ بِمِنًى لَيَالِيَ أَيَّامِ التَّشْرِيقِ وَاجِبٌ عِنْدَ جُمْهُورِ الْفُقَهَاءِ இ يَلْزَمُ الدَّمُ لِمَنْ تَرَكَهُ بِغَيْرِ عُذْرٍ . وَالْقَدْرُ الْوَاجِبُ لِلْمَبِيتِ عِنْدَ الْجُمْهُورِ هُوَ مُكْثُ أَكْثَرِ اللَّيْلِ. (الموسوعة الفقهية جஃ17 صஃ58)

*ACJU FATWA*