ஹஜ்ஜுடைய காலத்தில் உம்ராவை நிறைவேற்றிவிட்டு மதீனா செல்பவர்கள் பிறை 05 இல் மதீனாவிலிருந்து வரும்போது துல் ஹுலைபாவைத் தாண்டி வரும்போது இஹ்ராம் கட்டுவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்

Question

ஹஜ்ஜுடைய காலத்தில் உம்ராவை நிறைவேற்றிவிட்டு மதீனா செல்பவர்கள் பிறை 05 இல் மதீனாவிலிருந்து வரும்போது துல்ஹுலைபாவைத் தாண்டி வரும்போது இஹ்ராம் கட்டுவது அவசியமாகுமா?

Fatwa

பதில்: உம்ராவை முடித்துவிட்டு மதீனா செல்பவர்கள், மீண்டும் ஹஜ் செய்வதற்கு மக்காவுக்கு வரும்பொழுது மதீனா வாசிகளின் மீகாத்தாகிய துல் ஹுலைபாவில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிதல் அவசியம். ஹஜ், உம்ரா செய்வதற்காக நிய்யத் வைத்த ஒருவர் இஹ்ராம் அணியாமல் மீகாத்தைக் கடப்பது பாவமாகும். அவர் திரும்பிச் சென்று குறிப்பிட்ட இடத்திலிருந்து இஹ்ராம் கட்டுவது அவசியம். இல்லாவிட்டால் தமு கொடுப்பது கட்டாயமாகிவிடும்.

إذا انْتَهَى إنْسَان إلَى الميقَات وَهُوَ يُرِيدُ حَجاً أو عُمْرَةً لَزمَهُ أنْ يُحْرمَ منهُ فإنْ جَاوَزَه غَيْرَ مُحْرم عصَى ولزِمَهُ أنْ يعُودَ إليه وَيَحْرِم منه إنْ لَم يَكُنْ لهُ عُذْر فإنْ كَانَ لَهُ عُذْر كَخوفِ الطَّرِيقِ أو الانْقِطَاع عن الرُّفْقَة أو ضِيقِ الوَقْتِ أحْرَمَ ومَضَى في نُسكِهِ ولَزمَهُ دَمٌ إذا لم يَعُدْ فإنْ عَادَ إلَى الميقَات قَبْلَ الإِحْرَام فَأحْرَمَ منْه أو بَعْدَ الإِحْرام وَدُخولِ مَكّةَ قَبل أنْ يطُوفَ أو يفعَلَ شيئاً من أنْواع النُّسك سقط عنه الدمُ. ‘الإيضاح فى مناسك الحج والعمرة’

 

– ACJU Fatwa –