Researched Fatwa
தவாபுல் வதாஃ செய்த பின்னர் மக்காவில் தரித்திருப்பது தொடர்பான மார்க்க விளக்கம்
Question
Fatwa
ACJU/FTW/2024/50/582
2024.12.23 (1446.06.21)
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஹஜ் மற்றும் உம்ராவுடைய கடமைகளை நிறைவேற்றியவர் இறுதியாக கஃபாவை தவாப் செய்துவிட்டு விடைபெற வேண்டும். இதற்கு தவாபுல் வதாஃ என்று சொல்லப்படும்.
இது தொடர்பாக பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றன:
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ كَانَ النَّاسُ يَنْصَرِفُونَ فِي كُلِّ وَجْهٍ ، فقال رَسُولُ اللهِ ﷺ: لَا يَنْفِرَنَّ أَحَدٌ حَتَّى يَكُونَ آخِرُ عَهْدِهِ بِالْبَيْتِ. (صحيح مسلم: 1327)
‘மக்கள் (ஹஜ்ஜை முடித்ததும்) பல்வேறு முனைகளில் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். (இதைக் கண்ட) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘(ஹஜ் செய்த) எவரும் கஃபாவை இறுதியாக தவாப் செய்யாமல் மக்காவிலிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டாம்!’ என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்.’ (நூல்: ஸஹீஹு முஸ்லிம்: 1327)
ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக மக்காவுக்கு வெளியளிருந்து வருகை தந்தவருக்கு மாத்திரம் தவாபுல் வதாஃ செய்வது கட்டாயமானது என்றும் ஹஜ்ஜை நிறைவேற்றிய மக்காவாசிக்கும் உம்ராவைச் செய்தவருக்கும் ஸுன்னத் ஆகும் என்றும் ஹனபீ மத்ஹபைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளதுடன்1 குறித்த தவாபை செய்வது அனைவருக்கும் ஸுன்னத் ஆகும் என்று மாலிக்கீ மத்ஹபைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.2
எனினும், ஷாபிஈ மத்ஹபை சேர்ந்த மார்க்க அறிஞர்கள், ஹஜ்ஜு, உம்ரா மற்றும் ஏனைய தேவைகளுக்காக மக்காவுக்கு வந்து அங்கிருந்து வெளியேறும் ஒவ்வொருவருக்கும் குறித்த தாவபை நிறைவேற்றுவது கட்டாயமாகும் என்று குறிப்பிடுகின்றனர்.3 இதுவே ஹன்பலீ மத்ஹபைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களினதும் நிலைப்பாடாகும்.4
அவ்வகையில் ஹஜ், உம்ராவுடைய அமல்களை நிறைவேற்றிய பின்னர் இறுதியாக மக்காவிலிருந்து வெளியாகும் போது தவாபுல் வதாஃ செய்வது கட்டாயமாகும்.
ஒருவர் தவாபுல் வதாஃ செய்ததன் பின்னர் பொருட்களைக் கொள்வனவு செய்தல், நண்பர்களைச் சந்திக்கச் செல்லல், நோயாளியை நலம் விசாரிக்கச் செல்லல், கடனை நிறைவேற்றல் போன்ற பிரயாணத்துடன் தொடர்பற்ற காரணங்களுக்காக மக்காவில் தரித்துவிட்டால் அவர் அங்கிருந்து வெளியாகும் போது தவாபுல் வதாஃவை மீட்டிக்கொள்ள வேண்டும்.
எனினும், தவாபுல் வதாஃவைச் செய்ததன் பின்னர் பிரயாணத்துடன் தொடர்புள்ள பயணத்துக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்தல், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தல் போன்றவற்றைச் செய்வதற்காக தாமதித்தால் தவாபுல் வதாஃவை மீட்டிச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.5
ஆகவே, ஒருவர் ஹஜ்ஜு, உம்ராவுடைய அமல்களை முடித்துவிட்டு, தவாபுல் வதாஃ செய்வதற்கு முன்னர் மக்காவில் அவருக்கு வேறு ஏதும் தேவைகள் இருப்பின் அவற்றை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் மக்காவில் இருந்து விடைபெறும் போது தவாபுல் வதாஃவை செய்துகொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
—————
(1) ثم إذا أراد السفر طاف للصدر أي الوداع سبعة أشواط بلا رمل وسعي، وهو واجب إلا على أهل مكة ومن في حكمهم فلا يجب بل يندب كمن مكث بعده…”قوله إلا على أهل مكة”: فلا يجب على المكي، ولا على المعتمر مطلقا، وفائت الحج والمحصر والمجنون والصبي والحائض والنفساء كما في اللباب وغيره…”قوله فلا يجب إلخ”: قال في النهر: والمنفي عنهم إنما هو وجوبه لا ندبه وقد قال الثاني أحب إلي أن يطوف المكي طواف الصدر لأنه وضع لختم أفعال الحج، وهذا المعنى موجود في حقهم (رد المحتار- كتاب الحج)
(2) وَطَوَافُ الْوَدَاعِ إنْ خَرَجَ لِكَالْجُحْفَةِ لَا كَالتَّنْعِيمِ، وَإِنْ صَغِيرًا (ش) يَعْنِي: أَنَّهُ يُنْدَبُ لِكُلِّ خَارِجٍ مِنْ مَكَّةَ لِمَوْضِعٍ بَعِيدٍ كَالْجُحْفَةِ وَبَقِيَّةِ الْمَوَاقِيتِ مَكِّيًّا، أَوْ غَيْرَهُ قَدِمَ بِنُسُكٍ أَوْ تِجَارَةٍ، وَإِنْ صَغِيرًا، أَوْ عَبْدًا، أَوْ امْرَأَةً كَانَتْ نِيَّتُهُ الْعَوْدَ أَمْ لَا أَنْ يَطُوفَ طَوَافَ الْوَدَاعِ قَبْلَ خُرُوجِهِ؛ (شرح الخرشي على مختصر خليل)
طواف الوداع مشروع لكل من خرج من مكة مكي أو غيره، قدم لنسك أو لتجارة؛ إن خرج لمكان بعيد سواء كان بنية العودة أم لا (مواهب الجليل في شرح مختصر خليل ٣/١٣٧ — الرعيني، الحطاب (ت ٩٥٤)
(3) (قَالَ) إمَامُ الْحَرَمَيْنِ وَالْغَزَالِيُّ هُوَ مِنْ الْمَنَاسِكِ وَلَيْسَ عَلَى الْحَاجِّ وَالْمُعْتَمِرِ طَوَافُ وَدَاعٍ إذَا خَرَجَ مِنْ مَكَّةَ لِخُرُوجِهِ (وَقَالَ) الْبَغَوِيّ وَالْمُتَوَلِّي وَغَيْرُهُمَا لَيْسَ طَوَافُ الْوَدَاعِ مِنْ الْمَنَاسِكِ بَلْ هُوَ عبادة مستقلة يومر بِهَا كُلُّ مَنْ أَرَادَ مُفَارَقَةَ مَكَّةَ إلَى مَسَافَةِ الْقَصْرِ سَوَاءٌ كَانَ مَكِّيًّا أَوْ أُفُقِيًّا وَهَذَا الثَّانِي أَصَحُّ عِنْدَ الرَّافِعِيِّ وَغَيْرِهِ مِنْ الْمُحَقِّقِينَ (المجموع شرح المهذب )
(وَإِذَا أَرَادَ) الْحَاجُّ، أَوْ الْمُعْتَمِرُ وَغَيْرُهُ الْمَكِّيُّ وَغَيْرُهُ (الْخُرُوجَ مِنْ مَكَّةَ)، أَوْ مِنًى عَقِبَ نَفْرِهِ مِنْهَا (طَافَ وُجُوبًا كَمَا يَأْتِي لِلْوَدَاعِ) طَوَافًا كَامِلًا لِثُبُوتِهِ عَنْهُ ﷺ قَوْلًا وَفِعْلًا (وَهُوَ وَاجِبٌ) عَلَى كُلِّ مَنْ ذَكَرْنَا لِمَا مَرَّ (يُجْبَرُ تَرْكُهُ)، أَوْ تَرَكَ خُطْوَةً مِنْهُ (بِدَمٍ) كَسَائِرِ الْوَاجِبَاتِ فِيمَا هُوَ تَابِعٌ لِلنُّسُكِ وَلِشَبَهِهِ بِهَا صُورَةً فِي غَيْرِهِ ) تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٤/١٣٩)
(وَيَجِبُ عَلَى غَيْرِ نَحْوِ حَائِضٍ) كَنُفَسَاءَ (طَوَافُ وَدَاعٍ) وَيُسَمَّى بِالصَّدَرِ أَيْضًا (بِفِرَاقِ مَكَّةَ) وَلَوْ مَكِّيًّا، أَوْ غَيْرَ حَاجٍّ وَمُعْتَمِرٍ، أَوْ فَارَقَهَا لِسَفَرٍ قَصِيرٍ كَمَا فِي الْمَجْمُوعِ لِلِاتِّبَاعِ رَوَاهُ الْبُخَارِيُّ وَلِخَبَرِ مُسْلِمٍ «لَا يَنْفِرَنَّ أَحَدٌ حَتَّى يَكُونَ آخِرُ عَهْدِهِ بِالْبَيْتِ» أَيْ: الطَّوَافَ بِالْبَيْتِ كَمَا رَوَاهُ أَبُو دَاوُد وَمَا ذَكَرْته مِنْ وُجُوبِ طَوَافِ الْوَدَاعِ عَلَى غَيْرِ الْحَاجِّ وَالْمُعْتَمِرِ هُوَ مَا رَجَّحَهُ فِي الرَّوْضَةِ وَأَصْلِهَا بِنَاءً عَلَى أَنَّهُ لَيْسَ مِنْ الْمَنَاسِكِ، وَالْمُعْتَمَدُ مَا بَيَّنْته فِي شَرْحِ الرَّوْضِ أَنَّهُ مِنْهَا فَلَا يَجِبُ عَلَى مَنْ ذُكِرَ. (حاشية البجيرمي على شرح المنهج)
(4) طواف (وداع) وهو واجب على كل خارج من مكة من حاج وغيره… وقال أيضا: … لم يخرج منها حتى يودع البيت بالطواف وجوبا على كل خارج من مكة لوطنه أو غيره على المذهب. (مطالب أولي النهى)
(5) (اﻟﺮاﺑﻌﺔ) ﻳﻨﺒﻐﻲ ﺃﻥ ﻳﻘﻊ ﻃﻮاﻑ اﻟﻮﺩاﻉ ﺑﻌﺪ ﺟﻤﻴﻊ اﻷﺷﻐﺎﻝ ﻭﻳﻌﻘﺒﻪ اﻟﺨﺮﻭﺝ ﺑﻼ ﻣﻜﺚ ﻓﺈﻥ ﻣﻜﺚ ﻧﻈﺮ ﺇﻥ ﻛﺎﻥ ﻟﻐﻴﺮ ﻋﺬﺭ ﺃﻭ ﻟﺸﻐﻞ ﻏﻴﺮ ﺃﺳﺒﺎﺏ اﻟﺨﺮﻭﺝ ﻛﺸﺮاء ﻣﺘﺎﻉ ﺃﻭ ﻗﻀﺎء ﺩﻳﻦ ﺃﻭ ﺯﻳﺎﺭﺓ ﺻﺪﻳﻖ ﺃﻭ ﻋﻴﺎﺩﺓ ﻣﺮﻳﺾ ﻟﺰﻣﻪ ﺇﻋﺎﺩﺓ اﻟﻄﻮاﻑ ﻭﺇﻥ اﺷﺘﻐﻞ ﺑﺄﺳﺒﺎﺏ اﻟﺨﺮﻭﺝ ﻛﺸﺮاء اﻟﺰاﺩ ﻭﺷﺪ اﻟﺮﺣﻞ ﻭﻧﺤﻮﻫﻤﺎ ﻓﻬﻞ ﻳﺤﺘﺎﺝ ﺇﻟﻰ ﺇﻋﺎﺩﺗﻪ ﻓﻴﻪ ﻃﺮﻳﻘﺎﻥ (ﻗﻄﻊ) اﻟﺠﻤﻬﻮﺭ ﺑﺄﻧﻪ ﻻ ﻳﺤﺘﺎﺝ ﻭﺫﻛﺮ ﺇﻣﺎﻡ اﻟﺤﺮﻣﻴﻦ ﻓﻴﻪ ﻭﺟﻬﻴﻦ (المجموع)

