அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள கிப்லா திசை பார்த்தல் பயிற்சிநெறி தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம் 2026 ஒக்டோபர் 15அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பயிற்சிநெறியின் போது போதிக்கப்படவுள்ள விடயங்கள், பயிற்சிக்கான வளவாளர்களை நியமித்தல் மற்றும் இட ஒழுங்குகள், பயிற்சியாளர்களுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
இதில், ஜம்இய்யாவின் ஜம்இய்யாவின் பிறைக்குழுவின் தவிசாளர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

– ACJU Media –


