Researched Fatwa
ஏலவே தொழுகை நடாத்தப்பட்ட ஒரு ஜனாஸாவுக்கு (புஙாஇப்) மறைவான ஜனாஸா தொழுகை நடாத்துவது தொடர்பான மார்க்க விளக்கம்
Question
Fatwa
ACJU/FTW/2026/27-644/ORG-02
2026.05.15 – 1447.11.27
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஜனாஸா தொழுகையின் அடிப்படை, ஜனாஸாவை முன்னிலையில் வைத்து நடத்தப்படுவதாகும். எனினும், ஒருவருக்கு ஜனாஸாத் தொழுகையில் நேரில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், அவர் மறைவான ஜனாஸாத் தொழுகை நிறைவேற்றும் விடயத்தில் மார்க்க அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை உள்ளது.
மறைவான ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றுவது ஆகும் (ஜாஇஸ்) என ஷாபிஈ1 மற்றும் ஹம்பலி2 மத்ஹபின் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.3
இதற்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொள்கின்றனர்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى النَّجَاشِيَّ فِي اليَوْمِ الَّذِي مَاتَ فِيهِ خَرَجَ إِلَى المُصَلَّى، فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعًا.
(صحيح البخاري: 1245)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நஜாஷி மன்னர் அவர்கள் மரணித்த நாளிலேயே அவர் மரணித்ததைப் பற்றி (மக்களுக்கு) தெரிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழும் இடத்தை நோக்கிச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றனர். நபியவர்கள் நான்கு தக்பீர் கூறி தொழுகையை நடாத்தினார்கள் என அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 1245)
ஹனபி4 மற்றும் மாலிகி5 மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நஜாஷி மன்னருக்காக தொழுகை நடாத்தியது அவர்களுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்ட தனித்துவங்களில் ஒன்றாகும் எனவும் கூறுகின்றனர்.
ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில் (புஙாஇப்) மறைவான ஜனாஸாத் தொழுகை தனியாகவோ அல்லது ஜமாஅத்தாகவோ தொழுவதற்கு முடியும்.6
(புஙாஇப்) மறைவான ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றுபவர், குறித்த மரணம் சம்பவிக்கும் நேரத்தில் முஸ்லிமாகவும், பருவ வயதை அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.7
மேலும், ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று தொழுகையை நிறைவேற்ற முடியுமானவர் அவ்விடத்திற்குச் சென்று அவ்விடத்தை முன்னிலையாக வைத்து கிப்லாவை நோக்கி, ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அவர் தான் இருக்கும் இடத்தில் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்ற முடியாது என மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.8
நோய், தூரம் போன்ற காரணங்களினால் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் செல்வதற்கு முடியாத நிலை இருந்தால் அவருக்கு தான் இருக்கும் இடத்திலேயே ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்ற அனுமதியுள்ளது.9
ஆகவே, ஒரு ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொள்ள முடியாமல் போன ஒருவர் மறைவான ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்ற விரும்பினால் அவரிடத்தில் மேற்கூறப்பட்ட நிபந்தனைகள் இருக்குமாயின் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ மறைவான ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
எனினும், யாரேனும் ஒருவர் தனது குடும்பத்தில் மரணித்த ஒருவருக்காக மறைவான ஜனாஸா தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றுமாறு மஸ்ஜித் நிர்வாகிகளிடமோ அல்லது இமாமிடமோ வேண்டுகோள் விடுத்தால், குறித்த விடயம் தொடர்பாக ஆலோசனை செய்து ஊரின் ஒற்றுமை பாதிக்காத வகையில் உரிய முடிவை எடுத்து செயல்படுவது பொருத்தமானதாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர், ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
[1] (وَيُصَلَّى عَلَى الْغَائِبِ عَنْ الْبَلَدِ) بِأَنْ يَكُونَ بِمَحَلٍّ بَعِيدٍ عَنْ الْبَلَدِ بِحَيْثُ لَا يُنْسَبُ إلَيْهَا عُرْفًا أَخْذًا مِنْ قَوْلِ الزَّرْكَشِيّ عَنْ صَاحِبِ الْوَافِي وَأَقَرَّهُ أَنَّ خَارِجَ السُّورِ الْقَرِيبَ مِنْهُ كَدَاخِلِهِ وَيُؤْخَذُ مِنْ كَلَامِ الْإِسْنَوِيِّ ضَبْطُ الْقُرْبِ هُنَا بِمَا يَجِبُ الطَّلَبُ مِنْهُ فِي التَّيَمُّمِ وَهُوَ مُتَّجَهٌ إنْ أُرِيدَ بِهِ حَدُّ الْغَوْثِ لَا الْقُرْبِ وَلَا يُشْتَرَطُ كَوْنُهُ فِي جِهَةِ الْقِبْلَةِ وَذَلِكَ لِأَنَّهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – «أَخْبَرَ بِمَوْتِ النَّجَاشِيِّ يَوْمَ مَوْتِهِ وَصَلَّى عَلَيْهِ هُوَ وَأَصْحَابُهُ» رَوَاهُ الشَّيْخَانِ وَكَانَ ذَلِكَ سَنَةَ تِسْعٍ وَجَاءَ «أَنَّ سَرِيرَهُ رُفِعَ لَهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – حَتَّى شَاهَدَهُ» وَهَذَا بِفَرْضِ صِحَّتِهِ لَا يَنْفِي الِاسْتِدْلَالَ لِأَنَّهَا – وَإِنْ كَانَتْ صَلَاةَ حَاضِرٍ بِالنِّسْبَةِ لَهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – هِيَ صَلَاةُ غَائِبٍ بِالنِّسْبَةِ لِأَصْحَابِهِ. (تحفة المحتاج – فَصْلٌ فِي الصَّلَاةِ عَلَيَّ الْمَيِّت)
الْمُتَّجَهُ أَنَّ الْمُعْتَبَرَ الْمَشَقَّةُ وَعَدَمُهَا فَحَيْثُ شَقَّ الْحُضُورُ وَلَوْ فِي الْبَلَدِ لِكُبْرِهَا وَنَحْوِهِ صَحَّتْ وَحَيْثُ لَا وَلَوْ خَارِجَ السُّورِ لَمْ تَصِحَّ (حاشية الشرواني)
[2] (وَيُصَلِّي إمَامٌ) أَعْظَمُ (وَغَيْرُهُ عَلَى غَائِبٍ عَنْ الْبَلَدِ، وَلَوْ كَانَ دُونَ مَسَافَةِ قَصْرٍ، أَوْ) كَانَ (فِي غَيْرِ جِهَةِ الْقِبْلَةِ) أَيْ: قِبْلَةِ الْمُصَلِّي (بِالنِّيَّةِ إلَى شَهْرٍ) كَالصَّلَاةِ عَلَى الْقَبْرِ، لَكِنْ يَكُونُ الشَّهْرُ هُنَا مِنْ مَوْتِهِ، كَمَا فِي شَرْحِ الْمُنْتَهَى لِأَنَّهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – صَلَّى عَلَى النَّجَاشِيِّ فَصَفَّ – أَيْ: النَّاسَ – وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا ” (كشاف القناع عن متن الإقناع -فَصْلٌ فِي الصَّلَاةِ عَلَى الْمَيِّتِ)
[3] )ويصلي( جوازًا من يأتي )على الغائب( من عمارة البلد أو سورها. )و( على )المدفون( في البلد لما صح أنه ﷺ صلى على النجاشي بالمدينة يوم موته بالحبشة فخرج بهم إلى المصلى وصف بهم وكبر أربع تكبيرات وذلك في رجب سنة تسع، وأنه صلى على القبر. وإنما يصلي على من ذكر )من كان من أهل فرض الصلاة عليه يوم الموت( أي وقته لأن غيره متنفل وهذه لا يتنفل بها فتمتنع على الكافر والحائض وقت الموت وعلى من بلغ أو أفاق بعده وقبل الغسل ) المنهاج القويم شرح المقدمة الحضرمية ١/٢١٣ — ابن حجر الهيتمي (ت ٩٧٤)
[4] (وشرطها) ستة (إسلام الميت وطهارته) …وشرطها أيضا حضوره (ووضعه) وكونه هو أو أكثر (أمام المصلي) وكونه للقبلة فلا تصح على غائب ومحمول على نحو دابة وموضوع خلفه، لانه كالامام من وجه دون وجه لصحتها على الصبي، وصلاة النبي (ص) على النجاشي لغوية أو خصوصية.
(قَوْلُهُ عَلَى النَّجَاشِيِّ) بِتَشْدِيدِ الْيَاءِ وَبِتَخْفِيفِهَا أَفْصَحُ وَتُكْسَرُ نُونُهَا، أَوْ هُوَ أَفْصَحُ:…(قَوْلُهُ لُغَوِيَّةٌ) أَيْ الْمُرَادُ بِهَا مُجَرَّدُ الدُّعَاءِ وَهُوَ بَعِيدٌ (قَوْلُهُ أَوْ خُصُوصِيَّةٌ) أَوْ لِأَنَّهُ رُفِعَ سَرِيرُهُ حَتَّى رَآهُ بِحَضْرَتِهِ فَتَكُونُ صَلَاةُ مَنْ خَلْفَهُ عَلَى مَيِّتٍ يَرَاهُ الْإِمَامُ وَبِحَضْرَتِهِ دُونَ الْمَأْمُومِينَ، وَهَذَا غَيْرُ مَانِعٍ مِنْ الِاقْتِدَاءِ فَتْحٌ. وَاسْتَدَلَّ لِهَذَيْنِ الِاحْتِمَالَيْنِ بِمَا لَا مَزِيدَ عَلَيْهِ فَارْجِعْ إلَيْهِ، مِنْ جُمْلَةِ ذَلِكَ أَنَّهُ تُوُفِّيَ خَلْقٌ كَثِيرٌ مِنْ أَصْحَابِهِ – ﷺ – مِنْ أَعَزِّهِمْ عَلَيْهِ الْقُرَّاءُ، وَلَمْ يُنْقَلْ عَنْهُ أَنَّهُ صَلَّى عَلَيْهِمْ مَعَ حِرْصِهِ عَلَى ذَلِكَ حَتَّى قَالَ «لَا يَمُوتَنَّ أَحَدٌ مِنْكُمْ إلَّا آذَنْتُمُونِي بِهِ فَإِنَّ صَلَاتِي عَلَيْهِ رَحْمَةٌ لَهُ» (قَوْلُهُ وَصَحَّتْ لَوْ وَضَعُوا إلَخْ) كَذَا فِي الْبَدَائِعِ (حاشية ابن عابدين = رد المحتار ط الحلبي ٢/٢٠٩ — ابن عابدين (ت ١٢٥٢)
[5] وَفِيهِ الصَّلَاةُ عَلَى الْغَائِبِ وَأَكْثَرُ أَهْلِ الْعِلْمِ يَقُولُونَ إِنَّ ذَلِكَ خُصُوصٌ لِلنَّبِيِّ ﷺ وَأَجَازَ بَعْضُهُمُ الصَّلَاةَ عَلَى الْغَائِبِ إِذَا كَانَ فِي الْيَوْمِ الَّذِي دُفِنَ فِيهِ أَوْ قُرْبَ ذَلِكَ وَدَلَائِلُ الْخُصُوصِ فِي هَذِهِ الْمَسْأَلَةِ وَاضِحَةٌ لَا يَجُوزُ أَنْ يُسْتَدَلَّ فِيهَا مَعَ النَّبِيِّ ﷺ غَيْرُهُ لِأَنَّهُ – وَاللَّهُ أَعْلَمُ – أُحْضِرَ رُوحُ النَّجَاشِيِّ بَيْنَ يَدَيْهِ فَصَلَّى عَلَيْهِ أَوْ رُفِعَتْ لَهُ جِنَازَتُهُ كَمَا كُشِفَ لَهُ عَنْ بَيْتِ الْمَقْدِسِ حِينَ سَأَلَتْهُ قُرَيْشٌ عَنْ صِفَتِهِ وَرُوِيَ أَنَّ جِبْرِيلَ – ﵇ – أَتَاهُ بِرُوحِ جَعْفَرٍ أَوْ بِجِنَازَتِهِ وَقَالَ قُمْ فَصَلِّ عَلَيْهِ وَهَذَا كُلُّهُ وَمَا كَانَ مِثْلَهُ يَدُلُّ عَلَى أَنَّهُ خُصُوصٌ لَهُ لِأَنَّهُ لَا يُشْرِكُهُ فِي ذَلِكَ غَيْرُهُ (الاستذكار ٣/٢٧ — ابن عبد البر (ت ٤٦٣)
[6] (وَيُصَلَّى عَلَى الْغَائِبِ عَنْ الْبَلَدِ) وَإِنْ قَرُبَتْ الْمَسَافَةُ وَلَمْ يَكُنْ فِي جِهَةِ الْقِبْلَةِ خِلَافًا لِأَبِي حَنِيفَةَ وَمَالِكٍ؛ لِأَنَّهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – «أَخْبَرَ النَّاسَ وَهُوَ بِالْمَدِينَةِ بِمَوْتِ النَّجَاشِيِّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ وَهُوَ بِالْحَبَشَةِ» . رَوَاهُ الشَّيْخَانِ. (مغني المحتاج – فَصْلٌ فِي الصَّلَاةِ عَلَيَّ الْمَيِّت)
[7] . (وَتَصِحُّ بَعْدَهُ) أَيْ بَعْدَ الدَّفْنِ لِلِاتِّبَاعِ فِي خَبَرِ الصَّحِيحَيْنِ بِشَرْطِ أَنْ لَا يَتَقَدَّمَ عَلَى الْقَبْرِ كَمَا سَيَأْتِي فِي الْمَسَائِلِ الْمَنْثُورَةِ، وَيَسْقُطُ الْفَرْضُ بِالصَّلَاةِ عَلَى الْقَبْرِ عَلَى الصَّحِيحِ (وَالْأَصَحُّ تَخْصِيصُ الصِّحَّةِ) أَيْ صِحَّةِ الصَّلَاةِ عَلَى الْغَائِبِ وَالْقَبْرِ (بِمَنْ كَانَ مِنْ أَهْلِ) أَدَاءِ (فَرْضِهَا وَقْتَ الْمَوْتِ) دُونَ غَيْرِهِ؛ لِأَنَّ غَيْرَهُ مُتَنَفِّلٌ وَهَذِهِ لَا يُتَنَفَّلُ بِهَا. (نهاية المحتاج إلى شرح المنهاج – شمس الدين الرملي (٢ / ٤٨٦)
(قَوْلُهُ: مِمَّنْ كَانَ مِنْ أَهْلِ فَرْضِهَا وَقْتَ مَوْتِهِ) بِأَنْ يَكُونَ حِينَئِذٍ مُسْلِمًا مُكَلَّفًا طَاهِرًا فَلَا تَصِحُّ مِنْ الْحَائِضِ وَالْكَافِرِ يَوْمَئِذٍ وَتَلَخَّصَ مِنْ هَذَا: أَنَّ صَلَاةَ الصَّبِيِّ الْمُمَيِّزِ صَحِيحَةٌ مُسْقِطَةٌ لِلْفَرْضِ وَلَوْ مَعَ وُجُودِ الرِّجَالِ فِي الْمَيِّتِ الْحَاضِرِ دُونَ الْغَائِبِ وَالْقَبْرِ وَهُوَ مُشْكِلٌ فَلْيُحَرَّرْ فَرْقٌ وَاضِحٌ سم. (حاشية البجيرمي على شرح المنهج = التجريد لنفع العبيد – البجيرمي (١ / ٤٧٩)
[8] أَمَّا مَنْ بِالْبَلَدِ فَلَا يُصَلَّى عَلَيْهِ وَإِنْ كَبُرَتْ وَعُذِرَ بِنَحْوِ مَرَضٍ أَوْ حَبْسٍ كَمَا شَمِلَهُ إطْلَاقُهُمْ وَعِنْدَ الْحُضُورِ يُشْتَرَطُ كَمَا يَأْتِي أَنْ يَجْمَعَهُمَا مَكَانٌ وَأَنْ لَا يَتَقَدَّمَ عَلَيْهِ أَوْ عَلَى قَبْرِهِ وَأَنْ لَا يَزِيدَ مَا بَيْنَهُمَا عَلَى ثَلَثِمِائَةِ ذِرَاعٍ نَظِيرَ مَا مَرَّ فِي الْمَأْمُومِ مَعَ إمَامِهِ.) تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي – ابن حجر الهيتمي (٣ / ١٥٠)
وَتَصِحُّ عَلَى قَبْرِ غَيْرِ نَبِيٍّ لِلِاتِّبَاعِ رَوَاهُ الشَّيْخَانِ، وَتَصِحُّ عَلَى غَائِبٍ عَنْ الْبَلَدِ وَلَوْ دُونَ مَسَافَةِ الْقَصْرِ.
قَوْلُهُ: (عَنْ الْبَلَدِ) لَيْسَ بِقَيْدٍ بَلْ الْمُرَادُ بِالْغَائِبِ مِنْ يَشُقُّ عَلَيْهِ الْحُضُورُ وَلَوْ فِي الطَّرَفِ الْآخَرِ ق ل وسم. قَوْلُهُ: (وَلَوْ دُونَ مَسَافَةِ الْقَصْرِ) أَيْ وَلَوْ كَانَ الْمَيِّتُ فِي غَيْرِ جِهَةِ الْقِبْلَةِ وَالْمُصَلِّي مُسْتَقْبِلُهَا، لَكِنَّهَا لَا تُسْقِطُ الْفَرْضَ عَنْ الْحَاضِرِينَ عِنْدَ الْمَيِّتِ إذَا لَمْ يَعْلَمُوا بِصَلَاةِ غَيْرِهِمْ (حاشية البجيرمي على الخطيب = تحفة الحبيب على شرح الخطيب – البجيرمي (٢ / ٢٧٦)
[9] . (وَيُصَلَّى عَلَى الْغَائِبِ عَنْ الْبَلَدِ) بِأَنْ يَكُونَ بِمَحَلٍّ بَعِيدٍ عَنْ الْبَلَدِ بِحَيْثُ لَا يُنْسَبُ إلَيْهَا عُرْفًا أَخْذًا مِنْ قَوْلِ الزَّرْكَشِيّ عَنْ صَاحِبِ الْوَافِي وَأَقَرَّهُ أَنَّ خَارِجَ السُّورِ الْقَرِيبَ مِنْهُ كَدَاخِلِهِ وَيُؤْخَذُ مِنْ كَلَامِ الْإِسْنَوِيِّ ضَبْطُ الْقُرْبِ هُنَا بِمَا يَجِبُ الطَّلَبُ مِنْهُ فِي التَّيَمُّمِ وَهُوَ مُتَّجَهٌ إنْ أُرِيدَ بِهِ حَدُّ الْغَوْثِ لَا الْقُرْبِ وَلَا يُشْتَرَطُ كَوْنُهُ فِي جِهَةِ الْقِبْلَةِ وَذَلِكَ لِأَنَّهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – «أَخْبَرَ بِمَوْتِ النَّجَاشِيِّ يَوْمَ مَوْتِهِ وَصَلَّى عَلَيْهِ هُوَ وَأَصْحَابُهُ» رَوَاهُ الشَّيْخَانِ وَكَانَ ذَلِكَ سَنَةَ تِسْعٍ وَجَاءَ «أَنَّ سَرِيرَهُ رُفِعَ لَهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – حَتَّى شَاهَدَهُ» وَهَذَا بِفَرْضِ صِحَّتِهِ لَا يَنْفِي الِاسْتِدْلَالَ لِأَنَّهَا – وَإِنْ كَانَتْ صَلَاةَ حَاضِرٍ بِالنِّسْبَةِ لَهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – هِيَ صَلَاةُ غَائِبٍ بِالنِّسْبَةِ لِأَصْحَابِهِ. (تحفة المحتاج – فَصْلٌ فِي الصَّلَاةِ عَلَيَّ الْمَيِّت)
الْمُتَّجَهُ أَنَّ الْمُعْتَبَرَ الْمَشَقَّةُ وَعَدَمُهَا فَحَيْثُ شَقَّ الْحُضُورُ وَلَوْ فِي الْبَلَدِ لِكُبْرِهَا وَنَحْوِهِ صَحَّتْ وَحَيْثُ لَا وَلَوْ خَارِجَ السُّورِ لَمْ تَصِحَّ (حاشية الشرواني)

