அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில், சிறுவர்களுக்கான அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 2026 ஒக்டோபர் 11 அன்று கட்டுவன்வில. மொஹிதீன் பெரிய ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
கட்டுவன்வில பிரதேசத்திலுள்ள ஆலிம்கள், ஆலிமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், துறைசார்ந்தவர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, தற்கால சமூக சூழலில் அல்-குர்ஆன் மத்ரஸாக்கள் ஏன் அவசியம் என்பது குறித்து விரிவான முறையில் தெளிவுபடுத்தப்பட்டதுடன் ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா செயற்பாடுகள் குறித்தும் அறிமுகம் வழங்கப்பட்டது.
அத்தோடு, கட்டுவன்வில பிரதேசத்தில் ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பாடத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில், அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, அஷ்-ஷைக் அஸ்வர் அலி, அஷ்-ஷைக் அஹ்லம் மற்றும் அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு மேற்படி விடயங்கள் குறித்து தெளிவுகளையும் விளக்கங்களையும் வழங்கினர்.

– ACJU Media –


