தமன்கடுவ பிரதேசத்தில் நடைபெற்ற அல்-குர்ஆன் மத்ரஸாக்களை ஆரம்பிப்பதன் அவசியம் குறித்த விழிப்பூட்டல் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில், அல்-குர்ஆன் மத்ரஸாக்களை ஆரம்பிப்பதன் அவசியம் குறித்த விழிப்பூட்டல் நிகழ்வு 2026 ஒக்டோபர் 10 அன்று தமன்கடுவ பிரதேசத்திலுள்ள ஆலிம்கள், ஆலிமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், துறை சார்ந்தவர்கள் மற்றும் பிரதேசவாசிகளை மையப்படுத்தி நடைபெற்றது.

இதன்போது, தற்கால சமூக சூழலில் அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் அவசியம் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன் ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவு மற்றும் அதன் செயற்பாடுகள் முன்னெடுப்புகள் குறித்தும் தெளிவுகள் வழங்கப்பட்டன.

அத்தோடு, ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டம் குறித்தும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, அஷ்-ஷைக் அஸ்வர் அலி, அஷ்-ஷைக் அஹ்லம் மற்றும் அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு மேற்படி விடயங்கள் குறித்த தெளிவுகளை விளக்கங்களையும் வழங்கினர்.

குறித்த நிகழ்வானது, தமன்கடுவ பிரதேசக் கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் பொலன்னறுவை மாவட்டக் கிளை ஜம்இய்யாவின் ஒத்துழைப்பில் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன