அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் செயற்பாடுகள் தொடர்பில் பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யா மற்றும் தமன்கடுவ கிளை ஜம்இய்யா ஆகியவற்றுடன் நடைபெற்ற சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவினருக்கும் ஜம்இய்யாவின் பொலன்னறுவை மாவட்டக் கிளை மற்றும் தமன்கடுவ பிரதேசக் கிளை ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று 2026 ஒக்டோபர் 10, பொலன்னறுவை மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

அல்-குர்ஆன் மத்ரஸா செயற்பாடுகளை பொலன்னறுவை மாவட்டத்தில் மேம்படுத்தல் மற்றும் வீரியமாக முன்னெடுத்தல் குறித்து கலந்துரையாடும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் முக்கியத்துவம், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகள், மத்ரஸா பாடத்திட்டங்கள், முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான பயிற்சிநெறி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு இதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் இதில் ஆராயப்பட்டது

இச்சந்திப்பில், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, அஷ்-ஷைக் அஸ்வர் அலி, அஷ்-ஷைக் அஹ்லம் மற்றும் அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த சந்திப்பினை ஜம்இய்யாவின் பொலன்னறுவை மாவட்டக் கிளை ஏற்பாடு செய்திருந்ததுடன், தமன்கடுவ பிரதேசக் கிளை இதற்கான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன