முஅல்லிமாக்களுக்கான ‘மத்கலுல் குர்ஆன்’ புதிய பாடத்திட்ட அறிமுகம் மற்றும் கற்பித்தல் பயிற்சி வகுப்பு

2026 ஏப்ரல் 21ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் நெறிப்படுத்தலில் முஅல்லிமாக்களுக்கான ‘மத்கலுல் குர்ஆன்’ புதிய பாடத்திட்ட அறிமுகம் மற்றும் கற்பித்தல் பயிற்சி வகுப்பு ZOOM வாயிலாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வில், இப்பாடத்திட்டத்தின் இலக்கு குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் சிறார்களுக்கு இலகுவாக கற்பிப்பதற்கான கற்பித்தல் நுட்பங்கள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இதில் அல்-குர்ஆன் மதரஸாக்களில் கற்பிக்கும் முஅல்லிமாக்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில், வளவாளராக ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் ஆளணியினரான அஷ்-ஷைக் பஸால், அஷ்-ஷைக் அஃலம், அஷ்-ஷைக் அஸ்வர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன