முயல் இரத்தம் கலந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய்யை தலைமுடிக்குப் பயன்படுத்துவது தொடர்பான மார்க்க விளக்க

ACJU/FTW/2025/05-587/ORG – 01

Question

தலை முடி வளர்ச்சிக்கு முயல் இரத்தத்தினால் செய்யப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்துவது மிகவும் பயனளிக்கின்றது என்றும் அது சந்தையில் விற்கப்படுவதை நாங்கள் அறிந்தோம். தலை முடி வளர்ச்சிக்கு குறித்த எண்ணெய்யை பயன்படுத்துவது ஹலாலா என்பதை அறிய விரும்புகின்றோம். இதற்கான பதிலை மிக விரைவில் எதிர்பார்கின்றோம்?

Fatwa

ACJU/FTW/2025/05-587/ORG – 01
2025.03.18 – 1446.09.17

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹு

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒரு மனிதன் தனது உணவு, உடை, பாவனை என வாழ்வின் எல்லா நடவடிக்கைகளிலும் சுத்தமானவற்றையே பயன்படுத்த வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருவாறு குறிப்பிடுகின்றான்:

يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ (سورة البقرة – 168)

மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (சாப்பிடுவதற்கு) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே உண்ணுங்கள். (இதற்கு மாறுசெய்யும்படி உங்களைத் தூண்டும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (ஸூரத்துல் பகரா – 168)

அல்லாஹு தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்வருமாறு கட்டளையிட்டுள்ளான்:

وَثِيَابَكَ فَطَهِّرْ (سورة المدثر – 4)

(நபியே!( உமது ஆடையைப் பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்வீராக! (ஸூரத்துல் முத்தஸ்ஸிர் – 04)1

மேற்குறித்த இரு வசனங்களிலும் அனைத்து மனிதர்களும் சுத்தமானவற்றையே உட்கொள்ள வேண்டும் என்பதுடன் தமது ஆடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் தெளிவாகின்றது.
அவ்வகையில் அசுத்தமான ஒன்றைத் தகுந்த காரணமின்றி உட்கொள்வதற்கோ அல்லது தனது உடம்பில் அல்லது ஆடையில் தேய்த்துக் கொள்வதற்கோ2 விற்பனை செய்வதற்கோ3 மார்க்கத்தில் அனுமதி கிடையாது.

அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருவாறு குறிப்பிடுகின்றான்:

قُل لَّاۤ اَجِدُ فِىْ مَاۤ اُوْحِىَ اِلَىَّ مُحَرَّمًا عَلٰى طَاعِمٍ يَّطْعَمُهٗۤ اِلَّاۤ اَنْ يَّكُوْنَ مَيْتَةً اَوْ دَمًا مَّسْفُوْحًا اَوْ لَحْمَ خِنْزِيْرٍ فَاِنَّهٗ رِجْسٌ اَوْ فِسْقًا اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ ‌‌ۚ ( سورة الأنعام – 145) 

(நபியே) நீர் கூறுவீராக: தானாகவே இறந்தவை அல்லது ஓடும் இரத்தம் அல்லது பன்றியின் மாமிசம் இவற்றைத் தவிர, உண்பவருக்கு தடைசெய்யப்பட்டதாக எனக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்பட்டதில் வேறு எதையும் நான் காணவில்லை. ஏனெனில், நிச்சயமாக இவை அசுத்தமானவைளூ மேலும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயரைக் கூறி அறுக்கப்பட்டது அதுவும் பாவமானதாகும்.
(ஸூரத்துல் அன்ஆம்: 145)

இரத்தம் அசுத்தமானது என்றும் அதனை உட்கொள்வதற்கு அனுமதியில்லை என்றும் மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

ஷாபிஈ மத்ஹபின் பிரபல அறிஞர்களில் ஒருவரான இமாம் கதீப் அஷ்ஷிர்பீனீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது முங்னில் முஹ்தாஜ் எனும் நூலில் ‘ஒருவர் இரத்தத்தை தனது உடம்பில் அல்லது ஆடையில் தேய்த்துக் கொள்வது ஹராமாகும்’ என குறிப்பிட்டுள்ளார்கள்.4

எனினும், ஒருவர் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவதற்கோ தனக்கு ஏற்படும் நோய் அல்லது தனது உறுப்புக்களில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கோ அசுத்தமானதைப் பயன்படுத்த சில நிர்ப்பந்தமான சந்தர்ப்பங்களில் மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.

மேற்குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனத் தொடரில் அல்லாஹு தஆலா பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏   (سورة الأنعام – 145)

ஆகையால், யாரேனும் வரம்புமீறாதவராகவும் பாவம் செய்யாதவராகவும் நிர்ப்பந்தத்தின் காரணமாக (இவற்றை) புசித்துவிட்டால், அப்போது (அவருக்கு இதைச் செய்வது குற்றமாகாது).நிச்சயமாக, உங்களது இரட்சகன் மிக்க மன்னிப்புடையவனும் பேரருளுடையவனும் ஆவான்.
(ஸூரத்துல் அன்ஆம்: 145)

ஒருவர் தனக்கு ஏற்பட்ட நோய்க்குச் சிகிச்சை செய்ய அசுத்தமானதை சில நிர்ப்பந்தமான சந்தரப் பங்களில் பயன்படுத்த முடியும் என பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது:

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் (உரைனா குலத்தைச் சேர்ந்த) மக்கள் சிலர் சுகயீனமுற்றனர். இதற்கு மதீனாவின் காலநிலை தங்களுக்கு ஒத்துப்போகாததைக் காரணமாகக் கருதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட நோயை முறைப்பாடு செய்தனர். இதனால், (குறித்த நோயின் சிகிச்சைக்காக) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்த மக்களைத் தம் ஒட்டக மேய்ப்பாளரிடம் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் குடிக்கும்படி பணித்தார்கள். (அதன்படி) அவர்கள் அந்த ஒட்டக மேய்ப்பாளரிடம் சென்று ஒட்டகங்களின் பாலையும்; சிறுநீரையும் குடித்தார்கள். அவர்களுக்கு சுகம் கிடைத்தது….. (நூல்: ஸஹீஹுல்; புகாரீ – 5686)5

இன்னும் சில நிர்ப்பந்தமான சந்தர்பங்களில் ஹராமானவற்றைப் பயன்படுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது:

அர்பஜா இப்னு அஸ்வத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது: அறியாமைக் காலத்தில் நடைபெற்ற குலாப்எனும் போரில் எனது மூக்கு தாக்கப்பட்டது. எனவே, நான் வெள்ளியினால் செயற்கை மூக்கொன்றைச் செய்து பொருத்திக் கொண்டேன். அது எனக்கு நாற்றமடிக்கத் தொடங்கியது. எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கத்தினால் அதனைச் செய்து கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்.
(நூல்: அந்நஸாஈ – 5162)6

எனினும், அசுத்தமான பொருளைச் சிகிச்சைக்காகப் பயன்படுத்துவதாயின் குறித்த ஒரு நோயின் சிகிச்சைக்காக சுத்தமான பொருள் இல்லை என்றோ அல்லது சுத்தமான பொருளை விட அசுத்தமான பொருளில் விரைவாக நிவாரணம் கிடைக்கும் என்றோ நம்பிக்கையான வைத்தியர் ஒருவர் கூறுமிடத்து அதனைப் பயன்படுத்;த அனுமதியுள்ளது என மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.7

இதனடிப்படையில் முயல் இரத்தம் கலக்கப்பட்ட எண்ணெய் அசுத்தமானதாக இருப்பதனால் அதனைப் சிகிச்சைக்காகப் பயன்படுத்துவதாயின் நம்பிக்கையான வைத்தியர் ஒருவர் ஒரு குறித்த நோயின் சிகிச்சைக்கு வேறு சுத்தமான பொருள் இல்லை என்றோ அல்லது சுத்தமான பொருளை விட குறித்த அசுத்தம் கலந்த எண்ணெய்யில் விரைவாக சகிச்சைக் கிடைக்கும் என்றோ உறுதியாகக் கூறுமிடத்து அதனை சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம்.

மேலும், தொழுகையில் உடல், உடை, இடம் ஆகியவை சுத்தமாக இருப்பது நிபந்தனையாக இருப்பதனால் குறித்த அசுத்தமான எண்ணெய்யைப் பயன்படுத்திய நிலையில் தொழுகையில் ஈடுபடுவதற்கு அனுமதியில்லை. ஆகவே, தொழும் போது தனது உடல், உடை, இடம் ஆகியவற்றில் படிந்த அசுத்தமான எண்ணெய்யை சுத்தம் செய்து தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.8

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
 பொதுச் செயலாளர்
 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

———————————————————————————————————————

[1] وَقَالَ مُحَمَّدُ بْنُ سِيرِينَ: ﴿وَثِيَابَكَ فَطَهِّرْ﴾ أَيِ: اغْسِلْهَا بِالْمَاءِ. وَقَالَ ابْنُ زَيْدٍ: كَانَ الْمُشْرِكُونَ لَا يَتَطَهَّرُونَ، فَأَمَرَهُ اللَّهُ أَنْ يَتَطَهَّرَ، وَأَنْ يُطَهِّرَ ثِيَابَهُ. وَهَذَا الْقَوْلُ اخْتَارَهُ ابْنُ جَرِيرٍ، وَقَدْ تَشْمَلُ الْآيَةُ جَمِيعَ ذَلِكَ مَعَ طَهَارَةِ الْقَلْبِ،  )تفسير ابن كثير – ت السلامة ٨/‏٢٦٣ — ابن كثير (ت ٧٧٤)

[2]  لَوْ أَخَذَ دَمًا أَجْنَبِيًّا وَلَطَّخَ بِهِ بَدَنَهُ أَوْ ثَوْبَهُ فَإِنَّهُ لَا يُعْفَى عَنْ شَيْءٍ مِنْهُ لِتَعَدِّيهِ بِذَلِكَ، فَإِنَّ التَّضَمُّخَ بِالنَّجَاسَةِ حَرَامٌ. (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج ١/‏٤١٠ — الخطيب الشربيني (ت ٩٧٧)

وَيُوَجَّهُ بِأَنَّ التَّضَمُّخَ بِالنَّجَاسَةِ إنَّمَا يَحْرُمُ إذَا كَانَ بِفِعْلِهِ عَبَثًا (حاشية الشرواني على تحفة المحتاج)

[3]. (وَلَا يَصِحُّ بَيْعُ عَيْنٍ نَجِسَةٍ) سَوَاءٌ أَمْكَنَ تَطْهِيرُهَا بِالِاسْتِحَالَةِ كَجِلْدِ الْمَيْتَةِ أَمْ لَا، كَالسِّرْجِينِ وَالْكَلْبِ وَلَوْ مُعَلَّمًا وَالْخَمْرِ وَلَوْ مُحْتَرَمَةً

قَوْلُهُ: (وَلَا يَصِحُّ بَيْعُ عَيْنٍ نَجِسَةٍ) أَيْ اسْتِقْلَالًا لَا تَبَعًا لِمَا هُوَ كَالْجُزْءِ مِنْهُ، وَإِلَّا فَبَيْعُ أَرْضٍ بُنِيَتْ بِلَبِنٍ أَوْ آجُرٍّ عُجِنَ بِنَجِسٍ صَحِيحٌ وَالْبَيْعُ وَاقِعٌ عَلَى الْجَمِيعِ م ر. وَقَالَ سم: الْوَجْهُ أَنَّ الْبَيْعَ وَاقِعٌ عَلَى الظَّاهِرِ؛ وَإِنَّمَا دَخَلَ غَيْرُهُ تَبَعًا بِنَقْلِ الْيَدِ فَرَاجِعْهُ  (حاشية البجيرمي على الخطيب = تحفة الحبيب على شرح الخطيب ٣/‏٩ — البجيرمي (ت ١٢٢١)

[4] لَوْ أَخَذَ دَمًا أَجْنَبِيًّا وَلَطَّخَ بِهِ بَدَنَهُ أَوْ ثَوْبَهُ فَإِنَّهُ لَا يُعْفَى عَنْ شَيْءٍ مِنْهُ لِتَعَدِّيهِ بِذَلِكَ، فَإِنَّ التَّضَمُّخَ بِالنَّجَاسَةِ حَرَامٌ. (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج ١/‏٤١٠ — الخطيب الشربيني (ت ٩٧٧)

وَيُوَجَّهُ بِأَنَّ التَّضَمُّخَ بِالنَّجَاسَةِ إنَّمَا يَحْرُمُ إذَا كَانَ بِفِعْلِهِ عَبَثًا (حاشية الشرواني على تحفة المحتاج)

[5] . عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ نَاسًا، اجْتَوَوْا فِي الْمَدِينَةِ فَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَلْحَقُوا بِرَاعِيهِ ـ يَعْنِي الإِبِلَ ـ فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، فَلَحِقُوا بِرَاعِيهِ فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، حَتَّى صَلَحَتْ أَبْدَانُهُمْ. (صحيح البخاري: ٥٦٨٦)

[6] عَنْ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ بْنِ كُرَيْبٍ رضي الله عنه قَالَ: وَكَانَ جَدَّهُ قَالَ: حَدَّثَنِي «أَنَّهُ رَأَى جَدَّهُ – قَالَ – أُصِيبَ أَنْفُهُ يَوْمَ الْكُلَابِ فِي الْجَاهِلِيَّةِ، قَالَ: فَاتَّخَذَ أَنْفًا مِنْ فِضَّةٍ، فَأَنْتَنَ عَلَيْهِ، فَأَمَرَهُ النَّبِيُّ ﷺ أَنْ يَتَّخِذَهُ مِنْ ذَهَبٍ» (سنن النسائي – ٥١٦٢)

[7]  أَمَّا التِّرْيَاقُ الْمَعْجُونُ بِهَا وَنَحْوُهُ مِمَّا تُسْتَهْلَكُ فِيهِ فَيَجُوزُ التَّدَاوِي بِهِ عِنْدَ فَقْدِ مَا يَقُومُ مَقَامَهُ مِمَّا يَحْصُلُ بِهِ التَّدَاوِي مِنْ الطَّاهِرَاتِ كَالتَّدَاوِي بِنَجَسٍ كَلَحْمِ حَيَّةٍ وَبَوْلٍ، وَلَوْ كَانَ التَّدَاوِي بِذَلِكَ لِتَعْجِيلِ شِفَاءٍ بِشَرْطِ إخْبَارِ طَبِيبٍ مُسْلِمٍ عَدْلٍ بِذَلِكَ أَوْ مَعْرِفَتِهِ لِلتَّدَاوِي بِهِ  (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج ٥/‏٥١٨ — الخطيب الشربيني (ت ٩٧٧)

(فُرُوعٌ) كُلُّ مَا مَرَّ مِنْ أَحْكَامِ الْوَصْلِ يَجْرِي فِي الْوَشْمِ، وَخِيَاطَةِ الْجُرْحِ بِخَيْطٍ نَجِسٍ، وَالتَّدَاوِي بِنَحْوِ دُهْنٍ نَجِسٍ، فَيَحْرُمُ فِعْلُهُ عَلَى مُكَلَّفٍ مُخْتَارٍ عَامِدٍ عَالِمٍ بِالتَّحْرِيمِ، بِغَيْرِ عُذْرٍ وَلَوْ حَائِضًا وَرَقِيقًا، وَتَجِبُ إزَالَتُهُ عَلَيْهِ مَعَ عَدَمِ الْخَوْفِ، وَلَا تَصِحُّ صَلَاتُهُ مَعَهُ، وَيَنْجُسُ مَا لَاقَاهُ، مَا لَمْ يَكْتَسِ جِلْدًا وَلَوْ رَقِيقًا (حاشية قليوبي على كنز الراغبين)

 يَجُوزُ تَنْجِيسُ الْبَدَنِ لِغَرَضٍ كَعَجْنِ سِرْجِينٍ وَوَطْءِ مُسْتَحَاضَةٍ وَإِصْلَاحِ فَتِيلَةٍ فِي زَيْتِ نَجِسٍ بِنَحْوِ إصْبَعٍ وَإِنْ وُجِدَ غَيْرُهُ وَالتَّدَاوِي بِهِ  (حاشية البجيرمي على شرح المنهج = التجريد لنفع العبيد ١/‏٤٢٢ — البجيرمي (ت ١٢٢١) [كتاب الصلاة]←[باب في صلاة العيدين]

وَيَجُوزُ أَنْ يَجْعَلَ الزَّيْتَ الْمُتَنَجِّسَ صَابُونًا أَيْضًا لِلِاسْتِعْمَالِ: أَيْ لَا لِلْبَيْعِ. قَالَ فِي الْمَجْمُوعِ: وَيَجُوزُ طَلْيُ السُّفُنِ بِشَحْمِ الْمَيْتَةِ، وَإِطْعَامُهَا لِلْكِلَابِ وَالطُّيُورِ، وَإِطْعَامُ الطَّعَامِ الْمُتَنَجِّسِ لِلدَّوَابِّ.   (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج ١/‏٥٨٦ — الخطيب الشربيني (ت ٩٧٧)

[8] (وَ) خَامِسُهَا – أي شروط الصلاة – (طَهَارَةُ النَّجِسِ) الَّذِي لَا يُعْفَى عَنْهُ (فِي الثَّوْبِ) وَغَيْرِهِ مِنْ كُلِّ مَحْمُولٍ لَهُ وَمُلَاقٍ لِذَلِكَ الْمَحْمُولِ (وَالْبَدَنِ) وَمِنْهُ دَاخِلُ الْفَمِ وَالْأَنْفِ وَالْعَيْنِ وَإِنَّمَا لَمْ يَجِبْ غَسْلُ ذَلِكَ فِي الْجَنَابَةِ لِأَنَّ النَّجَاسَةَ أَغْلَظُ (وَالْمَكَانِ) الَّذِي يُصَلِّي فِيهِ لِلْخَبَرِ الصَّحِيحِ «فَاغْسِلِي عَنْك الدَّمَ وَصَلِّي» وَصَحَّ خَبَرُ «تَنَزَّهُوا مِنْ الْبَوْلِ» ثَبَتَ الْأَمْرُ بِاجْتِنَابِ النَّجَسِ، وَهُوَ لَا يَجِبُ فِي غَيْرِ الصَّلَاةِ فَتَعَيَّنَ فِيهَا  (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي)

وَالدَّلَائِلُ عَلَى نَجَاسَةِ الدَّمِ مُتَظَاهِرَةٌ وَلَا أَعْلَمُ فِيهِ خِلَافًا عَنْ أَحَدٍ مِنْ الْمُسْلِمِينَ إلَّا مَا حَكَاهُ صَاحِبُ الْحَاوِي عَنْ بَعْضِ الْمُتَكَلِّمِينَ أَنَّهُ قَالَ هُوَ طَاهِرٌ وَلَكِنَّ الْمُتَكَلِّمِينَ لَا يُعْتَدُّ بِهِمْ فِي الْإِجْمَاعِ وَالْخِلَافِ عَلَى الْمَذْهَبِ الصَّحِيحِ الَّذِي عَلَيْهِ جُمْهُورُ أَهْلِ الاصول من اصحابنا وغيرهم لاسيما فِي الْمَسَائِلِ الْفِقْهِيَّاتِ  (المجموع شرح المهذب – ط المنيرية ٢/‏٥٥٧ — النووي (ت ٦٧٦)