Researched Fatwa
தமத்துஃ பிரகாரம் உம்ரா, ஹஜ் செய்யக்கூடியவர்கள் கொடுக்க வேண்டிய ஹத்யை ஊருக்கு திரும்பிய பிறகு நிறைவேற்றுவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்
Question

Fatwa

பதில்: தமத்துஃ பிரகாரம் ஹஜ், உம்ரா செய்யக்கூடியவர்கள் குற்றப்பரிகாரமாக தமு கொடுத்தல் வேண்டும்.
அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் ‘கொடுக்கப்படும் தமு ‘هديا بالغ الكعبة’ அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்’ என்று கூறியிருப்பது போன்று ஹரமுடைய எல்லைக்குள் அந்த தமு அறுக்கப்பட்டு அங்குள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பது அவசியமாகும்.
அந்தக் குர்பானியின் மூலம் ஹரமுடைய ஏழைகள் பிரயோசனம் அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்பதனால் ஹரமுடைய எல்லையிலேயே ஹத்யை அறுத்தல் வேண்டும். அதற்கு முடியாதவர்கள் மூன்று நோன்புகள் ஹரமிலும் ஏழு நோன்புகள் தமது ஊரிலும் நோற்கலாம். நோன்பு நோற்பதனால் ஹரமுடைய ஏழைகள் பிரயோசனம் அடையமாட்டார்கள் என்பதனால், அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று தமது ஊரில் நோற்கலாம் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
فَاتَّفَقُوا عَلَى أَنَّهُ يُسْتَحَبُّ لِمَنْ قَصَدَ مَكَّةَ بِحَجٍّ أَوْ عُمْرَةٍ أَنْ يُهْدِيَ هَدْيًا مِنْ الْأَنْعَامِ وَيَنْحَرَهُ هُنَاكَ وَيُفَرِّقَهُ عَلَى الْمَسَاكِينِ الْمَوْجُودِينَ فِي الحرم ‘باب الهدي – كتاب الحج – المجموع’
(إذا وجب علي المحرم دم لاجل الاحرام كدم التمتع والقران ودم الطيب وجزاء الصيد عليه صرفه لمساكين الحرم لقوله تعالى (هديا بالغ الكعبة) ‘(فَرْعٌ فِي مَذَاهِبِ الْعُلَمَاءِ فِي مَسَائِلَ تَتَعَلَّقُ بِصَيْدِ الْحَرَمِ وَنَبَاتِهِ – كتاب الحج – المجموع’
وان وجب عليه طعام لزمه صرفه إلى مساكين الحرم قياسا على الهدى وان وجب عليه صوم جاز أن يصوم في كل مكان لانه لا منفعة لاهل الحرم في الصيام. ‘(فَرْعٌ فِي مَذَاهِبِ الْعُلَمَاءِ فِي مَسَائِلَ تَتَعَلَّقُ بِصَيْدِ الْحَرَمِ وَنَبَاتِهِ – كتاب الحج – المجموع’
– ACJU Fatwa –